ஞாயிறு, 6 மே, 2018

விஷிஷ்டம்: விரித்து இடப்பட்டது; சொற்பொருள் ஆக்கம்.

இன்று நாம் ஒரு நல்ல சொல்லை அறிந்துகொள்வோம்.  இதைப் பலரும் அறிந்திருப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. இதற்குக் காரணம் இச்சொல் அடிக்கடி எதிர்கொள்வதன்று,

விசிஷ்டம் என்பது தமிழ்ச் சொல் என்று கூறுதற்கில்லை. இதை விசிட்டம் என்று  சங்கத ஒலி நீக்கி எழுதினாலும் சொல் தமிழாகிவிடாது.

இதன் பொருள் :  சிறப்பானது என்பதாகும்.

எந்த ஒரு கோட்பாட்டையும் கொள்கையையும் சிறப்பானது என்று ஒரு நூலாசிரியர் வருணிக்கலாம்அப்படி வருணிக்கையில் அது விஷிஷ்ட கோட்பாடு அல்லது கொள்கை என்று அடைமொழி தந்து முன்வைக்கலாம். சிறப்பான இரண்டன்மை என்று வருணிக்க விஷிஷ்டாத்வைதம் என்பார்கள். எடுத்துக்காட்டாக:  கடவுள் வேறு, மனிதனின் ஆன்மா வேறு என்னாமல் இரண்டும் ஒன்று என்றால்அதாவது:  இரண்டற்ற தன்மையது என்றால்  அதனை விஷிஷ்டாத்வைதம் என்னலாம். பிரம்மம் என்ற மூலத்திற்கு எந்த பகுப்பும் இல்லையாதலால் அது இரண்டற்றது என்பர்; இதனை விஷிஷ்டாத்வைதம் என்று கூறுவர்.

விஷிஷ்டம் என்பதன் ஒரு முன்பகவு: விஷி என்பது.

விய் > வியன்.    விரிவு.
விய்விஷ்;
விய் > வியிவிஷி .

விய் என்பது விர் என்பதனுடன் தொடர்புடைய அடிச்சொல்.

விர் > விய்.     விர் > விரி.    
எனவே விரிவிஷி எனினுமாம்.

விய் > விய > வியப்பு. 

பிரமித்தல் என்பதும் பெருமித்தல் என்பதன் திரிபே.

வியந்து போற்றற்குரியது சிறப்பானது ஆகும்.

இதிலிருந்து விஷிஷ்டாத்வைதம் என்ற தொடரில்  விஷிஷ்டம் என்பதன் பொருளையும் சொல்லுருவையும் கண்டு இன்புறலாம்.

இஷ்டம் என்பது : இட்டம் :  இடு + அம்.

விஷி+ இஷ்டம் =  விஷிஷ்டம் என்பது எளிதாக அறியலாம்.

கருத்துகள் இல்லை: