continued from:-
https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_27.html
சிறு குழந்தைகளைக் கொஞ்சம் நீண்ட தூரப் பயணமாகத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமானால் பாதிவழியில் அவை கழிவை வெளிப்படுத்திவிடாமல் இருக்கத் தாய்மார்கள் (முன்கூட்டியே வெளிப்படுத்த) ஒரு தந்திரம் செய்வர். உச்சு உச்சு உச்சு (அல்லது உஸ் உஸ் உஸ் ) என்று வாயினால் ஊதுவர். இது காதில் விழவே குழந்தைகள் தம் கழிவை வெளிப்படுத்திவிடும், இப்படிச் செய்து வழியில் உண்டாகும் இடர்களை த் தவிர்த்துக்கொள்வர். இந்த உச்சு உச்சுவும் "உச்சர் " என்றே சங்கதத்தில் வரும். சமஸ்கிருதப் பண்டிதர்கள் உச்சர் என்பதற்கு மலங்கழித்தல் சிறு நீர் கழித்தல் எனு ம் பொருளை அகரவரிசையில் பதிவு செய்து கொண்டனர். உச்சு உச்சு என்பது ஓர் ஒலிக்குறிப்பு. கழிவுறுத்தல் என்ற பொருளில் வரும்போது இது பலமொழிகட்கும் உரிய சொல் எனலாம்.( பொதுச் சொல்) .தூங்குவோனை எழுப்புதலுக்கும் உசுப்புதல் என்ற சொல் வரும்போது அதுவும் ஒலிக்குறிப்பினடிப்படையில் எழுந்ததே.
உச்சுக் கொட்டுதல் என்பதும் ஒலி எழுப்புதலே ஆகும்,
இவை உச்சரித்தல் என்பதோடு ஒருவகையில் தொடர்புடையவை. சுட்டொலியாகவும் ஒப்பொலியாகவும் இருபுடைப் பொருத்தம் உள்ளவை .
Edited. But text may change owing to interference by 3rd party. A review will be done later.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக