இன்னிசை பாடுதல் ஓர் அரிய திறன் என்று பண்டை மக்கள் கருதினர் என்பதை, ராகம் என்ற சொல் நமக்குத் தெரிவிக்கிறது.இப்படிச் சொல்லமைபு 1ஆய்வறிஞர் பல உண்மைகளை அறிந்து கூறலாம். இதன் மூலம் பண்டைக் கருத்தமைதிகளை நாம் உணர முடியும்.
பாடறிவு2 ஓர் அரிய திறனாதலின், இக்கருத்திலிருந்தே அதற்குரிய சொல்லையும் அமைத்தது நல்லறிவே ஆகும்,
அரு + ஆகு+ அம் = அராகம்.
அரு + இ = அரி(து) எனல்போலவே அரு+ ஆ = அரா (கு, அம்) ஆகுமென்பது அறிதல் வேண்டும்.
இது முற்காலத்தில் கலிப்பாவின் ஓர் உறுப்பாக இருந்தது. கலிப்பாவின் முன் பகுதிகளை வேறு பாணியில் பாடி, அராகம் என்ற உறுப்பின் இடத்திற்கு வந்தவுடன் இன்னொரு விதமாக இனிமை தோன்றப் பாடுவர் என்று தெரிகிறது, அவர்கள் பாடிய பதிவுகள் இப்போது இல்லாமல் போனது நம் பாக்கியக்குறைவே ஆகும். அதாவது கெடுபேறு ஆம்.
அரங்கன் என்ற சொல் இடைக்குறைந்து ரங்கள் என்று நின்றது போலவே அராகமும் ராகமாகி இசைவிதம் குறிக்க வழங்கப்படுகிறது.
முத்தமிழில் இசைக்கலை ஒழிந்து, அதன் சிதறல்கள் இன்னும் நம்மிடைக் குமிழ்த்துக்கொண்டுள்ளன.
குறிப்புகள்:
1சொல்லமைபு - சொற்கலை . சொல்லமைப்பு - ஒரு சொல் அமைந்துள்ள விதம், தமிழ்ச் சொல்லமைபு என்பது வேங்கடராஜலு ரெட்டியார் எழுதிய ஒரு நூலின் பெயர்
2பாடறிவு பாட அறிந்திருத்தல் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக