இரண்டாம் தலைமுறைக் கைப்பேசி களைக,
மூன்றாம் நான்காம் தலைமுறை கொள்வாய்
திரண்ட நலம்பல தேர்ந்திடும் உனக்கே
முரண்டு செய்யாமல் இதற்கினி இணங்கே.
என்கிற படிதொலைத் தொடர்புக் குழும்புகள்
எழுச்சிப் பரப்புரை இசைத்திடல் கண்டோம்.
நன்கிது யாமும் எண்ணிடும் பொழுதினில்
நயப்பது நாற்புறம் வினாவெனும் விழுதுகள் /
புதிய தலைமுறைப் பேசிகள் வாங்கிடப்
புரப்பவர் பணத்தினை யாரிது காண்கிலம்
நிதியே நிற்க, கரந்துறை மென்பொருள்
நின்று குலைத்திடும் தளம்பல இவற்றுள்.
மூன்றாம் நான்காம் தலைமுறைப் பேசி
முயன்று யாம்பெற நன்மைகள் பலவே
ஆன்ற அறிவுரை: அணிபெறு இவற்றில்
அடைதகு நலத்தொடு தீதும் உளதே .
மூன்றாம் நான்காம் தலைமுறை கொள்வாய்
திரண்ட நலம்பல தேர்ந்திடும் உனக்கே
முரண்டு செய்யாமல் இதற்கினி இணங்கே.
என்கிற படிதொலைத் தொடர்புக் குழும்புகள்
எழுச்சிப் பரப்புரை இசைத்திடல் கண்டோம்.
நன்கிது யாமும் எண்ணிடும் பொழுதினில்
நயப்பது நாற்புறம் வினாவெனும் விழுதுகள் /
புதிய தலைமுறைப் பேசிகள் வாங்கிடப்
புரப்பவர் பணத்தினை யாரிது காண்கிலம்
நிதியே நிற்க, கரந்துறை மென்பொருள்
நின்று குலைத்திடும் தளம்பல இவற்றுள்.
மூன்றாம் நான்காம் தலைமுறைப் பேசி
முயன்று யாம்பெற நன்மைகள் பலவே
ஆன்ற அறிவுரை: அணிபெறு இவற்றில்
அடைதகு நலத்தொடு தீதும் உளதே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக