அரசுப்
பதவியில் இருந்தாலும்
அதிலும்
துன்பம் பலப்பலவாம்.
குறைச்ச
விலையில் எதையாரும்
குற்றம்
கொடுப்பக் கொள்வதுவாம்,
இருந்திட
வீடொரு முதற்பொருளே
என்றுமே
இருப்பதோ வாடகைக்கு?
தகுந்ததைப்
பார்த்து வாங்குகையில்
தருவிலை
தீதடி தட்டுதலே.
சந்தை
விலையின் தாழ்ந்ததனை
சட்டென
வாங்கிப் போட்டிடிலோ
குந்தக
முய்க்கும் அதுபிறகே
குலைத்திடும்
நிற்கும் நிலைதனையே.
மன்றம்
முறையே பகர்கையிலே
முற்றும்
விடுவித் தசத்திடினும்
இன்றும்
நாளையும் நினைவகல
என்றும்
துணையாய் இசைத்திடுமோ?
மக்கள்
தொண்டினில் மூழ்குபவர்
மாநில
மிசையே வாழ்பொழுதில்
தக்கது
யாண்டும் செய்திடுக!
தயங்கா
மனக்கட் டுய்வுறுவீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக