வெள்ளி, 3 ஜூன், 2016

சொல் அமைப்புத் தந்திரம்

பண்டைக்  காலத்தில் சொல் அமைத்தவர்கள்  பல வழிகளைக் கையாண்டார்கள்.   அவற்றுள் ஒன்று:

முதலில் அமைத்தற்குரிய சொல்லின்  கருத்தை ஒரு வாக்கியமாக எழுதிக்கொள்ளவேண்டும்.

இதற்கு "முகாந்திரம் "    என்பதையே  எடுத்துக்கொள்வோம்.

வாக்கியம் :    முகம் ஆகும்  திறம்.

1.   ஆகும்  என்பது  ஆம் என்று குறையும்.

      எனவே முகம்  ஆம்  திறம்./

2.  பின்  முகம்  என்பது  முக  என்று  மகர ஒற்றை இழக்கும்,

     எனவே  முக  ஆம்  திறம் . ஆகிறது.

3.  இப்போது சொல்  துண்டுகள் புணர்த்தப் படுகின்றன .
 
      எவனே  முகாந்திறம்  ஆகிறது.

4. இனி  திறம் என்பதை வெறும் பின்னொட்டு  ஆக்கவேண்டும். இதற்கு  றகரத்தை  ரகரம்  ஆக்குக.

    எனவே  இப்போது  "முகாந்திரம் "  ஆகிறது.

திறம் என்பது திரம்  ஆக்கப்பட்டு, வெறும் பின்னொட்டு ஆகிவிட்டால்,  சொல்லின் அடிப்படைகளை நன்கு மறைத்துவிடலாம்.  ஒவ்வொரு சொல்லுக்கும்  அதன் வரலாற்றை  அதைப் பயன்படுத்துவோன்  தெரிந்திருக்க வேண்டியதில்லை . சொற்களின்    வரலாறுகளை நினைவுபடுத்திக்கொண்டிருந்தால்  ஒருவேளை  பயன்பாட்டில்  மனத் தடையுணர்ச்சி  ஏற்படலாம்.

எ-டு :   வேதம் என்ற சொல்.வித்  ( விடய அறிவு )    என்பதிலிருந்து வந்தது என்று  கொண்டால், அது  இறைப்பற்று  சார்ந்த நூல் அன்று என்று எண்ணத் தோன்றுமே..அது தவறன்றோ ? இதை அற்றம் ஏற்படின் விளக்குவோம்.
   

    

கருத்துகள் இல்லை: