வியாழன், 9 ஜூன், 2016

கக்கூசு என்ற சொல்.

கக்கு  என்ற சொல் தமிழில் இருப்பது,   அடிப்படைக் கருத்துகளைத்   தன்சொற்களால் தரும் தகுதியுள்ள செம்மொழி இது  என்பதை காட்டுகிறது

இதுபோலவே  ஊசுதல் என்பதும்.  அழுகுதல்,  நாறுதல் என்றும் பெருள் படும்.  வடை முதலியன  கேட்டு விசுவதையும்  குறிப்பதுண்டு,

உ \\- ஊ  என்பன சுட்டடி  மூலங்கள்.   முன்னெழுதல்  மேலழுதல்    முதலிய  குறிக்கும்  தமிழ்.  ஊசல் என்பது  இருதலைக் கருத்து.  Rising and falling between two fixed or flexible points,  (concept ).

நாற்றமென்பது ஓரிடத்தினின்று  இன்னோர் இடத்திற்குப் போகும் கெடுகாற்று. கெட்டதிலிருந்து  கிளம்பும்  காற்று,  அங்கிருந்து  மூக்கைச் சென்று அடைகிறது.   ஆகவே  அது "ஊசல் "  ஆகிறது.

கக்கினது என்பது பெரும்பாலும் வாய்வழி வந்த     வயிற்று உட்கோள்  என்று பொருள்படும்.     ஆனால் எரிமலை தீமண்ணைக் கக்குகிறது  என்றும் சொல்கிறார்கள்.   ஆதலால்  வாயாலேடுப்பதை மட்டுமின்றி  வேறு வழிகளில் வெளிப்படுவதையும்  கக்குதலில் அடக்கலாம் என்பது தெளிவு.

கக்கினது   நாறும் . அதாவது   கக்கினது  ஊசும் .

கக்கு  +  ஊசு   =  கக்கூசு  ஆகிறது.

நாறும் வாந்தி என்பது,  மலக்கழிப்பு  இடத்திற்குப் பயன்படுத்தப்படுவது ஒருவகை  இடக்கர் அடக்கல் ஆகும்.  வெளிப்பட்ட கழிவு  அது கழிக்கப்படும் இடத்திற்கு ஆனது  ஆகுபெயர்.

வறுமையில் துன்புறுவாரை  " நல் கூர்ந்தார் "    " தரித்திரர் "   ( தரித்திறர்   அல்லது  திறம்பட  அணிந்தவர் " )   என்பதுபோன்ற மாறுபட்ட பயன்பாடு ஆகும்,

கக்கூசு  என்ற சொல்.   


கருத்துகள் இல்லை: