அவை
== = = =
ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான்.
கூட்டத்தை எங்கே வைத்திருக்கிறார்கள்?
=
அங்கே, அதோ அங்கே, எப்போதும் கூடுகிற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
அ = அங்கே. இது சுட்டுச் சொல்.
வை= வைத்தல். (அ + வை)
அது "அவை" (அ + வை) ஆகிறது. அங்கு சிறப்பான வேலைகளைச் செய்வோர் கூடியிருக்கிறார்கள்.
அவை என்பது சவை ஆனது. அகரத்தின்முன் சகர ஒற்று ஏறியது.
"மேலாடை இன்றிச் சவை புகுந்தால் மேதினியில்..."
சவை> சபை வ> ப திரிபு. இத்தகு திரிபுகள் மிகப்பல.
இப்படி மெய் எழுத்துக்கள் முன் நின்று திரிந்தவற்றை இங்கு அவ்வப்போது
காட்டியிருக்கிறோமே, மறந்திருக்கமாட்டீர்களே! மெய் எழுத்து முன் ஏறிநின்று சொல் திரிந்தால். சிலபொழுதில் பொருளும் சற்று மாறும். சில வேளைகளில் பொருள் மாறுவதில்லை. பொருள் திரிபுக்கோர் எடுத்துக்காட்டாகச் சண்டை என்ற சொல் உள்ளது. பழைய இடுகைகளிற்
காண்க.
அடுத்து: இயங்கு.
================
இங்கிருப்பது இங்கேயே இருந்துவிடுமாயின் அதில் என்ன இயக்கம் இருக்கிறது. இங்கிருப்பது அங்கு போகவேண்டும். அல்லது சுற்றி வரவேண்டும், அதுவன்றோ இயக்கம் என்பது!
இடப் பெயர்ச்சியும் இருந்தவிடத்திலேயே தன்னைத்தான் சுற்றிக்கொள்ளலும் (சுழற்சி ) மற்றும் சுழற்சியுடன் கூடிய இடப்பெயர்ச்சியும் இயக்கத்தில் அடங்கும். நேர்கோடாகத் தரை நகர்வும் மேலெழுகையும் அடங்கும்.
Horizontal and vertical as well as circular -- all forms of movements are included.
இ = இங்கு இருப்பது;
அங்கு = அங்கு போகிறது.
இறுதியில் உள்ள கு என்பதற்கும் பொருள் உள்ளது. அது பின்பு காண்போம்.
இ+ அங்கு = இயங்கு. இதில் யகர உடம்படு மெய் வந்தது.
இ + அ + திறம் > இயந்திறம் - இயந்திரம்.
ஆறு + கரை = ஆற்றங்கரை என்பதில் அம் வந்தது போலவேதான். அங்கு இது சாரியை.
இ+ அ+ அம் + திறம் ( சுட்டு , சுட்டு , இடைநிலை, பின்னொட்டு )
இ + அ + ம்+ திறம் ( ஓர் அகரம் கெட்டது )
இ + ய் + அம் + திரம் (யகர உடம்படுமெய் ) ( திறம் - திரம் திரிபு )
இயந்திரம்.
இயந்திரம் - எந்திரம். இ > எ திரிபு.
தமிழை ஆய்வு செய்யச் செய்ய அது உங்களுடன் பேசத் தொடங்கிவிடும்.
காரணம் அது மூலமொழி ஆனதே.
Ignore any question marks appearing on your screen.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக