ஏமமும்
ஓம்புதலும்.
ஏமம் என்ற
சொல் தொல்காப்பியனார் காலத்தில்
ஏம் என்று இருந்தது. சிறு
சொல்லான இது பின் சற்று நீண்டது.
அம் விகுதிபெற்று
ஏமம் என்று வந்தது. காமம்
என்ற சொல்லும் முன் காம்
என்றுதானிருந்தது. இருக்கவே,
உறுதல் என்ற துணைவினையைக்
கொண்டு ஏமொடும் காமொடும்
இணைக்க, அம் விகுதி
தேவைப்படாது. ஏன்
தேவைப்படாது? ஆக்ககாலத்திலேயே,
அதாவது ஆதியிலேயே
அங்கு அம்
இல்லையன்றோ? எனவே
ஏமமுறுதல் காமமுறுதல் என்று
சொற்களை நீட்டிவிடாமல்
ஏமுறுதல், காமுறுதல்
என்று எழுதினார்கள்,
பாடினார்கள். "
கற்றரைக் கற்றாரே
காமுறுவர்" என்றார்
நம் பண்டை மூதாட்டி ஒளவையும். இற்றைப் புனைவாயின் ஏமமுறுதல் காமமுறுதல் என்றுதான் இருக்கும். இவற்றின் வடிவிளிருந்தம் பழமையா புதுமையா என்று ஒருவாறு தீர்மானிக்கலாம்.
சில மொழிகளில்
சொற்கள் வரைகடந்து நீண்டுவிடாமல்
பார்த்துக்கொண்டார்கள்.
இவற்றுள் சீனமொழி
முன்னிலை பெற்றுத் திகழ்கின்றது.
தாங் என்று வருவது,
தமிழிற்போல் தாங்கு
என்று கு விகுதிபெற்று நீளாமல்
தாங் என்றே வருமாறு
வைத்துக்கொண்டார்கள்.
மலாய் மொழியில்
விகுதிகள் குறைவு,
பெர்காத்தாஆன்
என்பதிற்போல, ஒன்றிரண்டு
காணலாம். பெரிதும்
முன்னொட்டுக்களே நிலைநின்றன.
இதில் டச்சுமொழியின்
ஆதிக்கமும் காணப்பெறும்.
அடிச்சொற்களின்
திரிபு அறிய வேண்டுமென்றால்,
முன்னொட்டு
பின்னொட்டுக்களை நீக்கிப்
பார்க்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக,
ஏம் என்பது
ஓம் என்று திரியும். இதனை
எப்படி மெய்ப்பிப்பது?
ஏம் =
காவல், பாதுகாப்பு.
ஓம் =
காத்தல், பாதுகாத்தல்.
(ஓம் ஓம் என்று மந்திரங்கள் ஓதுதலிலும் பாதுகாப்பு! பாதுகாப்பு! என்றே பொருள் ).
ஏம் >
ஏமம்
ஓம் >
ஓம்பு > ஓம்புதல்.
அடிச்சொற்களாய்
இருக்கையில் ஒன்றுக்கொன்று
எதுகைகள் போல நின்றாலும்
விகுதிகள் பெற்றபின் அவை
வெவ்வேறு திசைகளில்
சென்றவையாகிவிட்டன.
அம் >
அம்மா.
உம் >
உம்மா > உமா.
அம்மா (
தாய் என்பது ) சில
மொழிகளில், கிளைமொழிகளில்
உம்மா என்று வழங்கினும்,
உமா என்று வந்ததுபோல்
அமா என்ற வடிவம் எழவில்லை
என்று தெரிகிறது. எங்காவது
ஒரு மூலையில் ஒரு வகுப்பாரிடை
அமா இருக்கலாம். அல்லது
விளியில், அன்றிக்
கவிதையில் அப்படிச் சுருங்கலாம்.
அப்படி ஒலிக்குங்கால்,
அதைக் குறித்துக்கொள்ளுங்கள்..
பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக