சிதைவிலாக்கம் அல்லது சொற்சிதைவு
பழம் என்பது மரத்தைச் சிதைத்துக் கிடைப்பதன்று .ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் சிறியதோர் வண்காயாயாய்த் தின்பழய்மாய் வருவது அதுவாகும் . கோழி உண்பவன் அதைக் கொன்று தோல் கிழித்து வெட்டிப் பலவாறு சிதைத்து மசாலை தடவி மெதுவாக்கி வேவித்துப் பின் தானே தின்று மகிழ்கிறான் . ஒன்று இயற்கையை ஓட்டிச் செல்கிறது. மற்றொன்று இயற்கையை உருக்குலைத்துப் பின் வருகிறது.
சொற்களிலும் இவ்வாறு பல வழிகள் கையாளப்படுகின்றன .
இறைவன் - இது ஒரு முழுச் சொல். புழக்கத்தில் உள்ளது. இறைவர் - உயர்வுப் பன்மை . இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர் > ஈஸ்வர் , இந்த உயர்வுப் பன்மையில் ஒரு ஒருமை ஆண்பால் விகுதி சேர்த்தால் ஈஸ்வரன், என்னவாயிற்று? ஒரு சொற்சிதைவிலிருந்து ஒரு புதிய சொல் அமைகிறது.
அல்லது அமைக்கப்படுகின்றது.
எரிமலை வெடித்துத் தீப்பிழம்பைக் கக்கி எங்கும் பரப்பிப் பின் குளிர்ந்து இறுகி வளமான நிலம் ஏற்பட்டு மரஞ் செடி கொடிகள் வளர்ந்து மலர்கள் பூத்து அதை அழகான பெண்ணொருத்தி கொய்து தலையில் சூடிக்கொள்வதில்லையா ? அதவாது சிதைவுகளும் நாளடைவில் இதந்தரும் மயக்கும் வண்ணப் பூக்கள் ஆகிவிடுகின்றன.
ஈஸ்வர் என்பதும் அப்படி ஒரு வண்ணமலராகி அதனோடு வாசத் தென்றல் வந்து குலாவலாமே !
இருக்கலாம் இருக்கலாம் ஆனதுதான் எது ஆகாததுதான் எது ?
வன்சிதைவும் ஒரு நன்பதமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக