ஒரு கவிதையில்: " கன்றுநிலை காண்மாறும் மாடு" என்று
முடித்திருந்தோம். அந்தக் கவிதை இங்கே இருக்கிறது:
http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_31.html
இதற்கான பொருள் யாது என்றார்க்கு இப்போது இங்கு
பொருளைத் தருகிறோம்.
இத்தொடரை, மாடு கன்றுநிலை மாறும், காண் என்று
முதலில் மாற்றிக்கொள்ளுவீர்.
பொருள்:
மாடு: ஒரு வளர்ந்துவிட்ட பசுவோ (ஆவோ) காளையோ;
கன்றுநிலை: ஒன்றுமறியாத, எது தனக்கு நன்மை அல்லது
எது தனக்குத் தீமை என்று தெரிந்து செயல்பட முடியாத
நிலையில் இருத்தல்; ( அப்படி இருந்தால் );
மாறும் : அஃது மாற்றமடையும்
காண் : தெரிந்துகொள்வாய், என்றவாறு.
கன்று என்பதைப் பெயர்ச்சொல்லாக எடுத்துக்கொண்டால்:
இது மாட்டின் இளம்பருவத்தைக் குறிக்கிறது, எனவே
கன்று நிலை - அறியாமையுடன் இளம்பருவத்து
வீண்சேட்டைகளையும் உட்படுத்துகிறது.
கன்றுதல் என்ற வினையாக எடுத்துக்கொண்டால்:
வாட்டம், அடிபடும் நிலை, கருகுதல், பிறர் இரங்கு
நிலை என்றும் பொருள்தரும். கன் என்ற அடிச்சொல்
கனல் என்பதையும் பிறப்பித்துள்ளது; கன்று என்ற
வினையும் உண்டுபண்ணி யுள்ளது. பொருந்துமாறு
உரைத்துக்கொளக. ஈண்டு கன்றுநிலை
வினைத்தொகை ஆகும்.
மாட்டைப் பிறர் கண்டு சினக்கும் நிலை மாறும் என்பதும்
பொருந்தும். தொக்க உருபுகளை வருவித்துக்கொள்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக