திங்கள், 19 மார்ச், 2018

வஸ்து எப்படி அமைந்த சொல்



இந்த் உல்கில் எதைப்பார்த்தாலும் ஒன்று இடமாக இருக்கவேண்டும். அல்லது பொருளாக இருக்கவேண்டும்.   இவற்றில் அடங்காதது எது? சில  வேளைகளில் இடத்தில் பொருளும் பொருளில் இடமும் பிணைந்துகொள்ளும்.  எப்படி?  நாம் ஏறிப் பயணம் செல்லும் உந்துவண்டி ஒரு பொருள். அதில் ஐவர் அமர்ந்த பின் ஓட்டுநர் இனி அமர முனைபவரிடம் இடமில்லை என்`கிறார்.  எனவே பொருளினுள்ளும் இடம் உள்ளது. இது உங்களுக்குத் தெரிந்ததே ஆகையால் விரிக்காது விடுவோம்.


ஒரு சிறு செயலியைப் பதிவிறக்கம் செய்ய,  நம் கைப்பேசி இடமில்லை என்`கிறது.  இற்றை நிலையில் நம் விழிகள் காணா இடங்களும் உண்டு என்றாகின்றதே! கணினிக்குள் இருக்கும் மின்வரைவுகள் மென்பொருள் எனப் படுவதில்லையோ?  மென்பொருள் ஆயினும் பொருளே அன்றோ?
தொழில் நுட்பமும் அறிவியலும் மேம்பட மேம்பட, இடம் பொருள் என்பன புதிய வரையறவுகட்கு உட்படுத்தப்படும்.  அவற்றின் அர்த்தங்கள் விரியும்.
எதை எங்கு இடுகிறோமோ, அதுவே அதற்கு இடம்.

இடு+ அம் =  இடம.

இப்போது வஸ்து என்பதன் சொல்லாக்கத்தை அறிந்துகொள்வோம்.
தொல்காப்பியனார் கூறியபடி இதிலுள்ள வடஒலியை விலக்குவோம். ( வடவெழுத்து ஒரீஇ,  ஒருவுக.)

விலக்கினால் அது வத்து ஆகிறது.  வஸ்து > 0து > வ+து > வத்து.
வத்து என்பது தன் ஐகாரத்தை இழந்த சொல். அதற்குரிய எழுத்தை அதற்குள் புணர்த்த.  அது வைத்து ஆகிறது.

இது எச்சவினைபோலிருப்பதால். அதைப் பெயர்ச்சொல் ஆக்கவேண்டும்.
அப்படிச் செய்தால் அது வைப்பு ஆகிறது. தமிழில் இதற்கு நிதி என்ற அர்த்தமும் வேறுசில அர்த்தங்களும் உள்ளன. வைப்பும் ஒரு பொருளே ஆதலால் வைத்து என்பதிலிருந்து வஸ்து அமைந்தது தெரிகிறது.

து என்ற அஃறிணை ஒன்றன்பால் விகுதியைச் சொல்லுக்கு விகுதியாய்   இச்சொல் கொண்டுள்ளது.

இடும் இடமே இடம்; இடத்தில் வைக்கும் செயலுக்குட்பட்ட எதுவும்  வஸ்து அல்லது பொருள்.

ஒன்றை மனிதனால் வைத்திட இயலாத அளவுக்குப் பெரிதாய் இருந்தாலும் அதை இயற்கை அங்கு இட்டிருந்தால் அதுவும் வைக்கப்பட்ட வஸ்துவே ஆகும்.

வைபடு எதுவும் வைத்து > வஸ்து.

வை> வைத்து > வய்த்து > வஸ்து . வைக்கப்படுவதாகிய பொருள்.

கருத்துகள் இல்லை: