ஞாயிறு, 11 மார்ச், 2018

நானூறு

நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும் 
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப் 
பானயிவை யாவும் கலந்து!! 

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத் 
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்லதமிழ்  வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம் 
வெல்க உலகில் தமிழ். -

[சிவமாலா ]- ...

யாம் உணர்வுகள் களத்திற் சென்று பல கவிதைகளை
எழுதி வெளியிட்டிருந்தாலும் அவை அக்களம் திடீரென்று
மூடப்பட்டதால் மீளா அழிவில் சிக்குண்டு மூழ்கின. 
அதிலொன்றுமட்டும் தப்பித் தவறிக் கிட்டுவ தாகிறது. 
இணையத்தில் இன்னும் கிடைக்கிறது. அதனை
 ஈண்டு பதிந்துள்ளோம்.

கவிதைத் திரிகள் தொடங்கிக் கவி எழுதும் ஆர்வத்தைத்
தூண்டுமுகத்தான் யாம் பல எழுதினோம். அவை இப்போது
மீட்புறாதழிந்தன.

இக்களம் தொடங்கிய இருவரிடை மனவேறுபாடுகள்
முகிழ்த்ததும் களத்தைப் பின்னர் அவர்களுள் ஒருவர் 
மேற்கொண்டதும்  அதைக் கணினி விளையாட்டுகள்
மையமாக மாற்றியமைத்து  எழுதப்பட்ட அனைத்தையும்
கிட்டாமற் செய்ததும் நடந்த நிகழ்வுகள்.

பல ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கு எம்மால் 
எழுதப்பெற்று வெளிவந்தன.

இதன்பின் பிறர்தொடங்கும் களங்களிற் சென்று
எழுதுவதை விடுத்தோம்.

 இவை 2005க்கு முன்னதாக எழுதியவாய் 
இருக்கக்கூடும்.

பல் கள்ள மென்பொருள்களால் இங்கும் பல 
அழிந்தன. மிச்சமிருப்பவை உங்கள் வாசிப்புக்கு.



நூலெழுதி வெளியிடலாம் என்ற ஆலோசனை 
முன்வைக்கப்பட்டது. இதற்குச் செலவு அதிகம்.
பகிர்வு முயற்சிகளும் செய்தல் வேண்டும். அதனால்
மேற்கொள்ளவில்லை.

பணம் பண்ணுவது நோக்கமன்று. அது நோக்கமாயின்
ஆங்கிலத்திலோ மலாய் மொழியிலோ எழுதவேண்டும்.
முன்ஷி அப்துல்லாவைப்போல் புகழ்பெற முயலலாம்!

நூல்வாசிப்போர் தொகை மிகக் குறைவு. அவை
சென்றடையும் தொலைவும் விரிவற்றது.  
வணக்கம்.

கருத்துகள் இல்லை: