இடப்பி.
டப்பி, டப் பா.
இப்போது டப்பா என்ற சொல்லையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் சற்று சிந்திப்போம்.
இதை பல்லாண்டுகட்கு முன்னே சிந்தித்து எழுதியதுண்டு.
அவை இப்போது இங்கில்லை யாகையால் நீங்கள் அறிந்துகொள்ள இயலாது. அதை மீண்டும் பதிவிடுவோம்.
சில மருந்துகள் கட்டிகளாக இல்லாமலும் நீர்போல அல்லது சாறுபோல இல்லாமலும் குழம்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சென்றபின் தான் கட்டிப்படும்.
கட்டி என்ற சொல் நீங்கள் அறிந்ததுதான். கடுமை உடையது கட்டி. கடு+ இ =கட்டி என, டகரம் இரட்டித்தது.
குழம்புகளை களிம்புகள் என்பர்.
உருகும் தன்மை உடையவற்றை மெழுகு என்றும் சொல்வதுண்டு. எ-டு:
தசலவணமெழுகு. மாத்திரைகள் சிறு கட்டிகள். கோரோசனை மாத்திரை மாதிரி.
இந்தக் களிம்புகளை சிறு டப்பிகளில் வைப்பார்கள். அப்போதுதான் வாங்குவோருக்கு எளிதில் பகிர்வு செய்ய இயலும்.
நெகிழிப்பட்டை போலும் எடுப்பான்பட்டையால் அளவாக வாரி டப்பியில் வைப்பார்கள்.
அப்பி இட்டு வைப்பார்கள்.
இடு+
அப்பி = இடப்பி என்று வந்தது. நாளடைவில் இகரம் வீண்நீட்டாகத் தோன்றியதால் அல்லது முயற்சிச்சிக்கனம் காரணமாக, இது டப்பி என்று வழங்கியது. டப்பி
பின்பு டப்பா ஆனது. அதுபின் dabba
ஆனது.
ஒரே சொல் பல தோற்றரவுகளை ( அவதாரங்களை)
எடுப்பது மொழியியல்பு ஆகும்.
இயன்மொழி எனப் புகழப்பட்ட தமிழிலும் திரிசொற்கள் எண்ணிறந்தன ஆகும்.
ஆகவே இடப்பி என்பது எப்போது “டப்” என்று மாறுகிறதோ அதை நாம் ஆங்கிலமொழிக்கோ மலாய்மொழிக்கோ தானமாக வழங்கிவிடலாம். டாங் என்று மாறினால் சீனமொழிக்கு வழங்கி ஆனந்தம் அடையலாம். டபஸ் என்று மாறினால் இலத்தீனுக்குத் தாரைவார்க்கலாம்.
ஈத்துவக்கும் இன்பமே பேரின்பம் ஆகும். எதையும் இல்லை என்னாது வழங்கியோன் தமிழன். கொடுக்கக் கொடுக்கக் குறையாதவை சொற்கள் மட்டும்தான் என்று தெரிகிறது.
கொடுத்தால் இங்குமிருக்கும்; அங்குமிருக்கும். கவலை இல்லை.
திராவிட மொழிகள் 77, அவற்றில் சில அழிந்தன, பல எழுத்தில்லாதவை என்று ஒரு மொழியாய்வாளர் ஆய்வு செய்து முடித்திருந்தார்.
பலுச்சித்தானத்திலும் திராவிடமொழி வழங்குகிறது.
திரிபுகளே உருவாகவில்லையென்றால் தமிழ் இப்படிச் சிதறித் திரிபுகளை அடைந்திருக்க மாட்டாதன்றோ? திரிபுக்
குவைகள் தனிமொழிகளாய் இலங்குகின்றன. இஃது நமக்குப் பெருமிதமே.
இடப்பி என்பது Reverse formation. “அப்பியிடம்” என்றமையாமல் இடுஅப்பி என்று மறுதலையமைப்பாக ஆயிற்று.
இப்படிப் பல சொற்கள் உள்ளன. தாய்க்குப் பின் வருவோன் தந்தை.
தாபி என்ற அமைந்தால் தாயின்பின் என்று காணலாம்.
பிதா என்று மறுதலையாக அமைத்தது புதுமைவேட்டல் ஆகும். அம்மாவின் கடையாகிய மாவையும் தாயின் முதலாகிய தாவையும் இணைத்து மா-தா என்றது
இருமைவேட்டல்.
ஏன்? தாய் என்னும் கருத்தே இரட்டித்துத் தாயின் மேன்மையைப் பறைசாற்றியது.
மகிழ்வு காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக