இப்போது வாதம் என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.
வாதம் பிடிவாதம் என்பன சிற்றூரில் பேச்சில் வழங்கிப் பின்பு மொழிகளுக்குள் புகுந்த சொல்லாகும்.
வாய் > வா > வாது + அம் = வாதம்.
வாய்+ து + அம் = வாய்தம் > வாதம் எனினுமது. யகர ஒற்று மறைதல்
தெளிவு. அது முன் மறைந்தாலும் பின் மறைந்தாலும் விளைவில் வேறுபாடிலது.
பிடிவாதம் என்பது வினைத்தொகை. முதலில் விடாது அதையே பேசுவதையும் பின்பு அத்தகைய போக்கினைச் செயலில் காட்டுவதையும்
குறிக்கும்.
வாதி என்பவன் வழக்கு மன்றில் வழக்குத் தொடர்ந்து பேசுவோன் .
மற்றவன் எதிர்வாதி,
பிரதிவாதி என்பது சரியாய் அமைந்த சொல் அன்று. பிரதி என்பது பகர்ப்பு அல்லது காப்பி copy என்று பொருள்தரும். எனினும் எதிர்வாதியைக் குறிக்க
வழங்கப் படுகிறது.