அறிஞர்
தீ என்ற சொல் எப்படி உண்டானது
என்று ஆய்ந்தனர், முடிவில்
தேய்தல்
என்ற கருத்திலிருந்து அது
வந்தது என்று கண்டனர்.
கற்கள் தேயுங்கால்
வெப்பமும் தீயும் உண்டாகிறது.
மரங்கள் தேய்ந்தும்
காடுகளில்
தீயுண்டாகிறது
என்றும் சொல்வர்.
தேய்தல்
> தீய்தல் என்று
சொல்லமைந்தது. தீய்ந்து
சாம்பலாயிற்று என்பது
காண்க.
தீய் என்பது பின் தீ
ஆயிற்று. (வினையிலிருந்து போந்த பெயர்ச்சொல் )
தீய் >
தீய்பு > தீபு+அம்
= தீபம். யகர
ஒற்று மறைந்து, பு
அம் விகுதிகள்
பெற்றுச்
சொல்லானது.
யகர
ஒற்றுக்கள் இடையில் நிற்கையில்
சொல் நீட்சி பெற்றால் அவை
மறைதல், முன் பல
இடுகைகளில் விளக்கப்பட்டது.
இன்னோர்
எடுத்துக்காட்டின் மூலமாய்
இதனை விளக்கலாம்.
தின்றது
வாய்வழியாகத் திரும்பி
வெளிவருவது வாந்தி என்றனர்.
வாய் +
தி > வாய்ந்தி
> வாந்தி. ( இங்கு
யகர ஒற்று மறைந்தது )
தி என்பதை
விகுதியாகவும் திரும்பிவருதற்
குறிப்பாகவும் மிக்கத்
திறமையுடன் அமைத்தனர்.
வாந்தியை வாயால்எடுத்தல் என்பதுண்டு.
யகர ஒற்று மறைவுக்குப் பிற காட்டுகள் .
தீய் >
தீய் + பு
= தீய்ம்பு >
தீம்பு
காய் >
காய்+பு >
காய்ம்பு > காம்பு. (காயுடன் இணைந்தது )
தோய் >
தோய்+ பு >
தோய்ம்பு > தோம்பு.
(துணி முதலியன தோய்த்து
வைக்க
உதவும் பெரிய கொள்கலம்) (தானியங்கள் ஊற வைக்கும் கலம் )
பாய் + பு = பாய்ம்பு > பாம்பு ( மு வரதராசனார் )
காய் > காய் + து + அம் = காய்ந்தம் > காந்தம், உள்ளில் தீ இருப்பதாக எண்ணப்பட்ட இரும்பு, காந்துதல். இதுவும் பகுதியாகலாம் .
பாய் + பு = பாய்ம்பு > பாம்பு ( மு வரதராசனார் )
காய் > காய் + து + அம் = காய்ந்தம் > காந்தம், உள்ளில் தீ இருப்பதாக எண்ணப்பட்ட இரும்பு, காந்துதல். இதுவும் பகுதியாகலாம் .
இவற்றில்
யகர ஒற்றுக்கள் மறைவினைக்
கண்டுகொள்க.
ஆங்கிலத்தில்
உள்ள டேய் என்னும் நாள்
குறிக்கும் சொல்லும்
நமது சொல்
தான். காரணம் அது
'டா" என்ற
சமஸ்கிருதச் சொல்லிலிருந்து
புனையப்பெற்றது. டா
என்பதோ எரிதல் என்று பொருள்
படும்
சொல். டா> டியெஸ்
(இலத்தீன்) >
தெய் ( பழைய
பிரிசியன்)
என்பன
தொடர்பு உடையவை. டியெஸ்
அதில் தொடர்பில்லாதது
என்றனர்
ஆய்வாளர் சிலர். ஆனால்
இவை எல்லாம் தேய் > தீ
என்ற
தமிழினின்றும் பெறப்பட்டவை.
இதில் நான் எடுத்துக்காட்ட
விழைந்தது, டே (day ) என்ற
ஆங்கிலத்தில் யகர ஒற்று
இன்னும் இருக்கிறது
என்பதுதான்.
தொடர்புடைய இடுகைகள்:
தாதி : https://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_3978.html
இடையில் யகர ஒற்றுக் கெடுதல் https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_89.html
derivation words meaning mother:
https://sivamaalaa.blogspot.sg/2014/02/derivations-of-words-meaning-mother.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக