இது http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_17.html இடுகையின் தொடர்ச்சி:
"ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேம்பாய உண்டு தெவிட்டுமனம் === தீம்பாய்
மறக்குமோ வெண்ணெய் வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனு மினி"
பொருள்:
ஆன் பாலும் தேனும் : பசுவின் பாலும் தேனும்;
அரம்பை முதல் முக்கனியும்: வாழைப்பழம் தொடங்கி மூன்று
வகைப் பழங்களையும்; முக்கனி : மா, பலா, வாழை
தேம் பாய உண்டு : இனிப்புச் சுவை மிகும்படியாக உட்கொண்டு;
தெவிட்டும்: அது அப்போது மேலும் உண்ணவியலாது போய்விடும்;
திகட்டும் என்றும் சொல்வர் .
வெண்ணெய் வரு சடையா : திருவெண்ணெய்நல்லூரான் ஆகிய சடையப்ப வள்ளலே உன்னை:
கம்பன் : கம்பனாகிய யான்;
இறக்கும்போதேனும் : இறந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலுமே
இனி : இனிமேல். நினைவு என்பது இருக்குமாயின் இறந்த பின்னும்.
தீம்பாய் மறக்குமோ : கெடுதலாக மறப்பேனோ
என்றவாறு
ஆசிரியனை மறத்தல் நன்றி கெட்ட செயலாகும் என்பது கருத்து, இது தீம்பு என்று குறிக்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக