கிருஷ்னன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு உண்மையில் கருப்பன் என்று பொருள்.. சில குடும்பங்களில் கிருஷ்னன் செட்டியார் என்று பெயர் வைத்துக்கொள்ளாமல் கறுப்பன் செட்டியார் என்றே வைப்பது தனித்தமிழ் நெறியைப் பின்பற்றியதுபோல் தோன்றுகிறது.
நிலவுக்கு இருட் பக்கம் என்றும் ஒளிப் பக்கம் என்றும் பக்கங்கள் இரண்டு உள்ளன. இருட் பக்கமானது "கிருஷ்ண பக்ஷம்" என்று வழங்குகிறது. கிருஷ்ண பக்ஷம் என்றால் கருப்புப் பக்கம் என்பதே பொருளாகும்.
புழுக்கள் பலவும் வெண்மை நிறமானாலும், அவை பெரும்பாலும் தீமையே செய்கின்றன. செய்யும் வினையைப் பொறுத்து அவற்றைக் கருப்பாகக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகும்.
ஒரு திருடன் வெள்ளையாகவே இருந்தாலும்கூட அவன் செய்வது " கருப்புத்" தொழில்." இதன் காரணமக, அவன் கள்ளன் எனப்பட்டான். " பிளாக் மார்க்கட் " என்பது தமிழில் "கள்ளச் சந்தை " ஆகின்றது.
கள் என்பது கருப்புக் குறிக்கும் அடிச்சொல். கள் என்பதே கரு என்றும் கறு என்றும் திரிந்தன. இதை இன்னோர் இடுகையில் விளக்குவோம் .
கரு என்ற அடிச் சொல் கிரு (கிருஷ்ண ) என்று திரிவதால், கிருஷ்ண, என்ற வடிவுக்கு ஒப்ப, கருமி என வரற் பாலது கிருமி என்று வந்துள்ளது. கருமி என்பதும் உலோபியைக் குறிப்பதுடன் ஒரு நற்செயல் அன்மையையே குறிக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும்.
கரு > கருமி
கரு .> கிரு > கிருமி
Different outcomes from the same root word/
எனவே கரு> கிரு > கிருமி ஆயிற்று என்பது தெளிவு
continue reading to: http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_6.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக