காதகன் என்ற சொல்லைக் கேட்டால் அது ஏதோ காதலுடன் தொடர்புடையது போல அன்றோ தோன்றுகிறது? காதகன் எனின்
கொலையாளி என்று பொருள்.
கொலை செய்தவர்களை உடனடியாகக் காவலில் வைக்கவேண்டியது மன்னர்காலத்திலும் இப்போதும் நடைமுறையிலுள்ள கட்டளை ஆகும்.
மிகக் கொடிய குற்றம். ஐம்பொருங் குற்றங்களில் ஒன்றாகும் இது.
எனவே காதகனுக்கும் காதலுக்கும் தொடர்பில்லை.
கா காவலில் வைக்க;
தகன் : உடன் தகுதி பெறுபவன்.
வேறு காரணங்கள் எவையும் தேவையில்லை.
தகன் : தகு+ அன்.
பெண்பால் : காதகி.
கொலை ஏதும் செய்யாதவனையும் காதகன் என்பதுண்டு. இது ஒரு
கொலை செய்தவனோடு ஒப்பாக வைத்துப் பேசுவது. பொருள் விரிப்பு
ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக