சொல்லியல் நெறிமுறை தொழிற்பெயர் ஆக்கம்
இதுவரை நம் இடுகைகளைப் படித்து வந்த நேயர்களுக்குச் சொற்கள் அமையும்போது அவை நீளுதலும் குறுகுதலும் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இருப்பினும் புதிதாக வருகை புரிவோருக்காகச் சில எடுத்துக் காட்டுகளைத் தருதல் நன்று என்பதை யாவரும் ஒப்புவர் என்பது எம் துணிபு ஆகும்.
நாகரிகம் என்ற சொல்லைக் கவனிப்போம். இது நகர் அகம் அல்லது நகர் இகம் என்ற சொற்களின் புணர்வில் தோன்றிய சொல்லாம். நகர் + இகம் என்பது பின் நாகரிகம் என்று ஆனது. அதாவது முதலெழுத்து நீண்டு அமைந்து சொல்லானது. நகர வாழ்வின் நடை உடை பாவனை
இவற்றின் மொத்த வெளிப்பாடே நாகரிகம் ஆகும். இதற்கு நேரான ஆங்கிலச் சொல்லும் இது காரணமாய் அமைந்ததே ஆகும். நகரகம் என்பது நாகரிகம் என்று அமைந்தது எனினுமாம்/ . வள்ளுவர் வலியுறுத்தும் நாகரிகம் இயல்பான நாகரிகம் அன்று, அது புத்தர் ஏசு நதர் போன்ற பெரியோரால் கடைபிடிக்க இயல்வது ஆகும்.
சொல் குறுகி அமைவது இதற்கு நேர் மாறானதாகும். சாவு + அம் = சாவம்
எனற்பாலது சவம் என்று குறுகி அமைவது காண்க. தாவு + அளை
என்பது தாவளை என்று அமையாமல் தவளை என்று வருவதும்
இத்தகைய குறுக்கமே அகும். அளை என்பது ஒரு விகுதி கூ +அளை = குவளை : இதை இப்போது கொவளை என்கின்றனர் மேற்பகுதி கூம்பினது குவளை என்பது அறிக. தற்காலத்து மேல் கூம்பாததும் குவளையே இது பொருள் மாற்றம். கூ > கூம்பு இங்கு பு வினையாக்க விகுதி என்பதறிக ,சொல் மிகுந்து அமைவதால் மிகுதி .> விகுதி இதில் மகர வகரப் பரிமாற்றம் உள்ளது. யாப்பில் மகர வகர மோனையும் அமையும், பழைய இடுகைகளை நன்கு கவனிக்கவும்.
\
\
சவம் என்பது இரு விகுதிகள் பெற்றுக் குறுகிய சொல். சா > சாதல் ; சா> சாவு + அம் , இங்கு வு அம் என்பன விகுதிகள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக