உடலின்
தன்மையை மிக்க உன்னிப்பாகக்
கவனித்தவர்கள் நம் முன்னோர்.
அது தேய்ந்து
அழிதலை உடையது என்பதறிந்து
அதைத் தேகம் என்றனர்.
அது உடைபோலும்
உடுத்தப்பட்டு இருப்பது,
அதாவது என்பு தோல்
போர்த்தப் பட்டது என்பது
தோன்ற உடல், உடம்பு
என்ற சொற்கள் தோன்றின. அதை
நாம் மேலாகத்தான் காண்கிறோம்;
உள்ளிருப்பது வெளியில்
தோன்றுவதில்லை; அவற்றின்பால்
நம் கட்டுப்பாடு குறைவு என்பது
விளங்க மேனி என்றனர். மேல்
> மேனி. லகர ம் னகரமாகி இகர
விகுதி
பெற்றது.
இப்போது
சரீரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.
இது மருத்துவம்,
வைத்தியம் செய்தோரால்
புனையப்பட்ட சொல் என்பதை
ஆய்ந்தால் தெளிவாகிவிடும்.
நம் உடலில்
சரிபாதி அல்லது அதற்கும்
சற்று மேலாகவே நீர் இருக்கிறது,
இதை முன்னோர்
அறிந்திருந்தனர், அதனால்
அதைச் சரீரம் என்றனர்.
சரி +
ஈரம் = சரீரம்
ஆயிற்று. ஒரு இகரம்
கெட்டது. அதாவது:
சரி+
ஈரம் > சர்
+ ஈரம் > சரீரம்.
என்று காண்க.
ஈரம் என்பது
ஈர்த்து வைத்துக்கொள்வது.
அருந்திய தண்ணீர்
முதலியவற்றோடு இருக்கும்
நீரினை ஈர்த்து வைத்துக்கொள்வது.
நம்
முன்னோரின் அறிவு இக்கால
உடலியலுடன் ஒத்துப்போகிறதன்றோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக