இப்போதெல்லாம்
பலியிடுதல், பலிகொடுத்தல்
என்ற தொடர்கள் அடிக்கடி
செவிகளை
எட்டுகின்றன. சிலவிடங்களில்
நரபலி பற்றிய செய்திகளும்
கிடைக்கின்றன.
திறமாக உசாவியறிந்து
எலும்புக்கூடுகளைக் கைப்பற்றிய
காவலர்கள்
கதைகளும் உலா வருகின்றன.
பலி
என்கையில், தலையை
வெட்டிக் கொல்லுதலே எடுப்பாக
முன் நிற்கின்றது. நண்ணிலக்
கிழக்கிலும் (Middle East ) இது பரவலாக
நடைபெறுதல் இணைய மூலம்
அறியப்படுகிறது.
பலி என்ற
சொல் உண்மையில் பரி என்பதன்
திரிபு ஆகும். பரி
என்றால்
வெட்டுதல்
என்று பொருள். பரிதல்,பரித்தல்
வெட்டுதல், அறுத்தல்.
ரகரம்
லகரமாவது தமிழிலும் பிறமொழிகளிலும்
உண்டு. ரகரத்தைப்
பலுக்க
நாக்குத் திரும்பாமல்,
அதை லகரமாக வெளிப்படுத்தும்
பிறமொழியளரும் பலர். ரகர
எழுத்துக் குன்றிய மொழிகளும்
உலகில்
உள. ஆர்
என்று உச்சரிக்க இயலாமல்
அதை ஆர என்று இழுப்போரும்
பலர்.இங்கு
அவர்களைப் பழிப்பதற்காகக்
கூறவில்லை. ரகரமும்
லகரமும்
ஒன்றுக்கொன்று
பரிமாற்றம் பெறத்தக்கவை
என்பதை, ஆணியடித்ததுபோல்
இறுக்கிப் பிடித்தபடி
உணரவேண்டும் என்பதற்காகவே
சொல்கிறோம். ஒலிகளின்
உச்சரிப்பில் மனித நாவு
அப்படிச் செயல்படும் தன்மையை
உடையது, அவ்வளவே.
ரகர லகரத்தைத் தெளிவாக
உச்சரிப்பதால் நாம் அவர்களைவிடக்
கெட்டிக்காரர்கள் என்பது
பொருளன்று.
ஒலி நூலில்
ரகரத்தை முந்தியது லகரம்
என்பதற்குத் தமிழில் அகச்சான்றுகள்
உள. வள்ளல் என்ற
சொல்லைப் பாருங்கள்.
வள்ளன்மையுடையோன்
வள்ளன் / வள்ளர்
என்று வரவேண்டுமே. ஏன்
சொல் அல் விகுதி பெற்று
முடிகிறது? காரணம்
அன், அர் இவற்றை
முந்தியது அல். தோன்றல்
என்ற தலைவரைக் குறிக்கும்
சொல்லும் அப்படிப்பட்டதே
ஆகும். இது நிற்க.
சிற்றம்பலம்
என்ற சொல் சித்தம்பரம் >
சிதம்பரம் என்றாகியது.
இதில்
லகரத்துக்கு
ரகரம் வந்தது. இப்படிப்
பட்ட பரிமாற்றத் திரிபுகளைக்
கண்டு
கொள்க.
கோடரி > கோடாலி
என்பதும் காண்க. போக்கிலி
> போக்கிரி
மற்றொன்று.
பக்கத்தில் யாருமில்லாத
தனியன் தான் பக்கிலி >
பக்கிரி.
பக்க இலி
> பக்கிலி >
பக்கிரி (மரூஉ).
(பக்கவடை> பக்கோடா
போன்ற திரிபு). நிலம்+தரம்
= நிலந்தரம் >
நிரந்தரம். ( நில்
பகுதி).
எனவே பலி
<> பரி தொடர்பு
தெளிவாகிறது. பரித்தலே
பலியாம். Not Bali.
வெட்டுதல் பரி என்பதன் பொருள். பிற பொருள் தொடர்பற்றவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக