இர் என்ற அடிச்சொல்லிலிருந்து இருள் இரவு இராத்திரி முதலிய சொற்கள் விளைந்தனவென்பதை முன் ஒன்றுக்கு மேற்பட்ட இடுகைகளின் மூலமாக எடுத்துரைத்துள்ளோம், இராமன், இராவணன் என்ற தொடக்கத்துப் பலவும் இதிலிருந்தே தோன்றின என்பதும் விளக்கப்பட்டிருந்தது.
இர் என்ற அடிச்சொல் தமிழே. மேலும் இராமன் முதலிய சொற்கள் தமிழ் அடியிலிருந்தே திரிக்கப்பட்டன என்பதற்கு, திராவிட அரசனாகிய மனுவின் முன்னோன் இராமன் என்று கம்பன் கூறியதையும் எடுத்துக்காட்டி இருந்தோம். இராமனும் நீல நிறத்தவனே என்பதும் நீங்கள் அறிந்ததே. புதுச்சிலைகள் வெள்ளையாக இருக்கலாம்.
என்றாலும் இர் என்ற அடி தமிழன்று என்று கண்மூடிக்கொண்டு வாதிடுங்களேன். அது தமிழ்தான் என்பதற்கு இப்போது இன்னொரு சான்றினைப் பகர்ந்து மகிழ்வோம்.
இர் என்பது ஒளி இல்லாத நிலை. ரகரமும் லகரமும் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் காணக்கூடியவை. தமிழ் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் இத்திறத்துத் திரிபுகள் காணலாம்.
இர் என்பதன் மூலம் இல். அதாவது ஒளி இல்லாத நிலைமை. இல்- இர்.
இல் ( இல்லை) என்பது தமிழாதலின், அதனின்று திரிந்து வந்த இர் என்பதும் தமிழே ஆகும் என்பது சுருக்கமான சான்று ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக