இறுதல்
=======
ஒரு
வினையிலிருந்து இன்னொரு வினை
( a verb formed from another verb ) தோன்றுதல்,
பெரும்பாலும் இலக்கணம்
சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள்
வகுப்பில் அல்லது தம் பொழிவில்(
lecture ) விதந்து ஓதாதது
ஆகும்..
இறுதல்
என்றால் முடிதல். இந்தச்
சொல்லிலிருந்து இறுதி என்ற
தி விகுதி பெற்ற சொல்
தோன்றியிருத்தலை நோக்கி,
இறு என்றால் இறுதியை
அடைதல் என்று புரிந்துகொள்வது
எளிதாகவிருக்கும்.
இது வினை
எச்சமாக வருங்கால் இற்று
என்று வடிவுகொள்ளும். உறு
> உற்று என்பதுபோலும்
வடிவம். இரும்புப்
பாத்திரத்தின் அடி இற்றுப்
போயிற்று என்பதில் இற்று =
இறுதியை அடைந்து
போய்விட்டது என்பது
பொருளாம்,
இச்சொல்
பெயரெச்சமாக நிகழுங்கால்
இற்ற என்று வரும். முச்சீரால்
இற்ற அடி
எனின் மூன்று சீர்களால்
முடிகின்ற அடி என்ற பொருளாகும்.
இற்ற முடிந்த
என்பது. இறந்த
காலம் காட்டும் வினை எச்சம்.
இறத்தல்
இறத்தல்
என்ற வினைச்சொல் இறு என்பதிலிருந்து
தோன்றிற்று.
இறு >
இற.
இறத்தல்
என்ற வினை. இறு >
இற என, இறுதியில்
அகரம் பெற்று வினை ஆயிற்று.
இறத்தல்
என்பது உயிர்விடுகை குறிக்கும்.
எ-- டு: அவர்
இறந்துவிட்டார்.
இறத்தல்
என்பது கடத்தல் என்றும்
குறிக்கும்.காடிறந்த
தலைவன் என்றால் காட்டைக்
கடந்து சென்ற தலைவன் அல்லது
காதலன் என்பதாகும்.
இது போல அகரம் பெற்று வினையான இன்னொரு சொல் அள என்பது.
(பழங்காலத்தில்) நெல் முதலியவற்றை அள்ளிக் கொணர்ந்து அளந்தனர் அல்லது அளக்கும் ஏனத்தில் அள்ளிப்போட்டு அளந்தனர் . ஆகையினால். அள் என்ற சொல்லிலிருந்து அள என்று அகரம் பெற்று வினையானது.
அளத்தல் கதை யளத்தல் படியளத்தல் முதலியவற்றில் போதரும் கருத்துக்கள் பின்பு கவனிப்போம்,
அளத்தல் கதை யளத்தல் படியளத்தல் முதலியவற்றில் போதரும் கருத்துக்கள் பின்பு கவனிப்போம்,
அள் > அள்ளு ; அள்ளுதல்.
அள் > அள்+ அ = அள > அளத்தல்.
"பிள்" அடியினின்று பிளத்தல் என்பதும் இதுபோல அமைந்ததுதான்,
will edit later.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக