கள் என்ற
அடிச்சொல்லுக்குப் பல பொருள்
உள. இவற்றுள் கட்டுதல்,
இணைத்தல், ஒன்று
சேர்த்தல் என்பதுமொன்று.
இஃதோர் முன்மை பொருந்திய
பொருளாகும். இதைச் .
சற்றே சுருக்கமாகக்
கவனிப்போம்.
கள் > கட்டு. கட்டுதல். கள்+ து = கட்டு.
கள் > கட்டு > கட்டி. ஒன்றாக இணைந்திருப்பது.
கள் > கடு: ஒன்றாக இணைந்திருப்பதனால் " கடுமை" உண்டாகிறது.
ஒப்பீடு : பள் - படு பள்ளம் படுகை
கள் > கடு > கடன். கட்டவேண்டியது கடன். "கட்டுதல்" போன்ற பிற நடவடிக்கைகளும் அடங்கும்.
கள் > கட்சி. கள்+ சி. பலர் ஒன்றாகக் கட்டப்பட்டதுபோன்ற நிலை.
இது கொள்கைக் கட்டாகவே பிறவாகவோ இருக்கலாம். சி என்பது விகுதி.
கள் >( கழ) > கழகு > கழகம். பலர் சேர்ந்திருப்பது. இது கட்சியாகவோ சூது மூலம் கட்டுண்ட நிலையாகவோ இருக்கலாம்.
கள் >( கழு) > கழுத்து. பல தசை நார்களும் அரத்த நாளங்களும்
கட்டப்பட்டிருப்பது.
கள் > கள்ளம். கட்டப் பட்ட உரை/ செயல் . பொய்
இன்னும் பல/ அவற்றைப் பின்னொரு நாள் காணலாம்.
இந்த இடுகை மூலம் கள் என்ற அடிச்சொல்லின் ஒரு பொருண்மை
தெளிவாகிறது. நேரம் கிட்டுகையில் விரித்துச் சொல்வோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக