உ என்று வரும் சுட்டு முன்னிருப்பதைக் குறிப்பது.
உ > உன்.
உ > உம். இது உன் என்பதன் பன்மை
உ > உய். முன் செல், மேல் எழு என்று பொருள்.
உ >உய் > உய்தல்.
அர் என்ற வினையாக்க விகுதி இணைத்து:
உய் > உயர். உயர்தல். உயர்ச்சி.
உய் > உய்த்தி > உத்தி இதிலிருந்து யுத்தி > யுக்தி கிடைத்தது.
தமிழ்த் திரிபுகள் பல உள்ளடக்கியது நாம் வடமொழி என்று கூறும் மொழி.
வடமொழி என்பது ஒரு மொழிப்பெயர் அன்று. அது திசையைப் பொறுத்துச்
சுட்டப்பட்ட ஒரு சொற்றொகுதி. இது பின் சமஸ்கிருதம் என்ற பெயரால்
அமைவுற்றது.
வட சொற் கிளவி என்று தொல்காப்பியர் குறித்தது வடபுலத்துப் புழங்கிய சொற்றோகுதியை. அது அவர்காலத்தில் ஒரு மொழி ஆகிவிடவில்லை. வட சொல் என்பது ஆலமரத்தடியில் ஓதுகையின்போது வழங்கிய சொற்றோகுதியையாகவும் இருக்கலாம் . இது திரு வி க வின் கருத்து. வடம் என்றால் பல பொருள் உள .
உச்சி என்ற சொல்.
உய் > உய்தல் > உய்த்தல்.(பிறவினை).
உய் > உய்ச்சி > உச்சி. (மேல் உள்ள பகுதி.)
உய் > உய்ச்சம் > உச்சம்.
யகர ஒற்றின் பின் வரும் கசட தபற வல்லொற்றுகள் ஒழியும் என்று
பலமுறை பாடிச் சொல்லியுள்ளோம்.
வாயால் பாடம் சொல்பவன் வாய்த்தி. அப்புறம் வாத்தி. பின் வாத்தியார்..
உப அத்தியாயி என்ற உபாத்தியாயர் வேறு. குழப்புதல் வேண்டா.
காய்ச்சல் என்பது காச்ச(ல் ) என்று யகர ஒற்றுக் கெட்டு பேச்சு மொழியில் வருமேனும் இன்னும் எழுத்தில் நிலை பெற்றிட வில்லை. மேய்ச்சல் முதலியவும் அப்படியே .
காய்ச்சல் என்பது காச்ச(ல் ) என்று யகர ஒற்றுக் கெட்டு பேச்சு மொழியில் வருமேனும் இன்னும் எழுத்தில் நிலை பெற்றிட வில்லை. மேய்ச்சல் முதலியவும் அப்படியே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக