வெள்ளி, 8 ஏப்ரல், 2016

word building technique

உடம்படு மெய் வருமிடங்களையும் அவை வாரா இடங்களையும் ஓர் உதாரணம் மூலம் விளக்குவோம்;

எடுத்துக்காட்டாக ஆஸ்திகம் என்ற சொல்லைப் படைக்கவேண்டும்.
இதற்கான அடிச்சொற்கள் ஆசு+ திகை+ அம் என்பன.  ஆசு = பற்றுக்கோடு. ஆதரவு.  திகை =  திகைதல், உறுதிப்படல், நிறுவப்படுதல். அம் என்பது விகுதி. குறிக்கத்தக்க பொருள்: பற்றுக்கோடு உறுதிப்படல். இறைவனின் ஆதரவு உறுதியாக , அவனை நம்புதல்.
 உட‌
ஆசு + திகை+ அம் என்பதை வழக்கமான முறையில் புணர்த்தினால்
ஆசுத்திகையம் என வரும். இது முதலாவது நீண்டுவிட்டது. இரண்டாவது கேட்க இன்னா ஓசை பிறக்கிறது.  ஆகவே, இப்புணர்ச்சி முறையை மாற்றி,  தகர ஒற்றை எடுத்துவிட்டு
யகர உடம்படு மெய்யையும் ஐகாரத்தையும் எடுத்துவிட்டு
ஆசு திக் அம் = ஆசுதிகம் எனின் சொல் குறுகி இனிமை பிறக்கிறது.
மேலும் திரித்து,  ஆஸ்திகம் எனின்  அது நிறையழகையும் பெறும்
சொல்லாகிவிடுகிறது.

இல்லையென்றால் அறு+ அம் = அறம் என்னாது அறுவம் என்று வகர உடம்படு மெய் பெற்றுவர வேண்டுமெ!  சொல் நீண்டுவிடுகிறது. அறம் என்ற சொல் அமைந்த பிறகு அறுவம் என்ற‌
இன்னொரு சொல் அதே அடியிலிருந்து பிறப்பிக்க வேண்டுமானால்
அறுவம் என்பதையும் வைத்துக்கொள்ளலாம். சொல்லின் பொருள் அதன் அடியிலிருந்தும் வழக்கிலிருந்தும் தீர்மானிக்கப்படும்.

இதைப் பல முறை விளக்கியுள்ளேன். If you have missed previous posts on the subject or
if they had been deleted by viruses . third party or otherwise missing from our  archives, then this serves the intended purpose.  Will edit later.

கருத்துகள் இல்லை: