பேராக்கு ஆறும் சேறாகிக் கல்தெரிய
நீரோடும் நிலைமாறி நெஞ்சும் பதைத்ததே!
மீனோடு சந்தைபோம் மீனவ நண்பர்களும்
வானோடு இறைஞ்சிக் கூனாகி மலைந்திடுவர்.
இயங்கிப் படகுகள் இடிபட்டும் உடைபட்டும்
தயங்கிச் செல்வனவாம் தாழ்ந்திட்ட தண்ணீரே.
வெந்துயிர்கள் அழிய விடுவனோ எழில்ஞாலம்
தந்தருளிக் காக்கும் தன்னேரில் தலைவனுமே.
இந்த நிலைதொடரின் எப்படி வாழ்வரிவர்
நொந்து குடிகெடவோ எல்நீனோ மாறாதோ
மாறியே இனிவருக மாரியும் நீருமின்னல்
தீரும் வழியே தெளிநிலையே வந்திடுக.
தென்கிழக்கு நாடுகளில் தெண்ணீரும் முன்போல
உண்ணீராய் உயர் நீராய் விளங்கிடுக இனிமிகவே.
This is rewritten from a lost poem today. Editor error.
Will review/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக