continue from http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_91.html
கல்லாடனார்: அவர் ஒரு நல்லிசைப் புலவர். சொல்லில் நாகரிகம் மிக்கவர் என்று நன்கு பாராட்டலாம். ஏன்?
"அத்தான் வருவாக" என்ற இடுகையில், தரப்பட்ட குறுந்தொகைப் பாடலில் தொண்டைமான்கள் பரம்பரை என்பதை "தொண்டையர்" என்ற சொல்லால் புலவர் குறிப்பிடுகிறார். சொல்லானது பன்மையில் ஆளப்பட்டுள்ளது காணலாம்.
போரில் பல வெற்றிகள் ஈட்டிய அவர்களின் யானைகள் "அண்ணல் யானைகள் " ஆகின. அண்ணல் உயர்ந்தோன் என்றும் பொருள்படும். இது
தொண்டைமான்களின் சிறப்பை யானகள் மேலேற்றிக் கூறுதல் ஆகும்.
அவை தின்பது பகைவரின் விளைச்சல்களை.
தொண்டைமான்கள் வீரர்கள். பகைவர் உணவை உண்ணார். உண்பவை
யானைகள். சொந்த உணவு இல்லாதவர்களா தொண்டைமான்கள்?.
புலவரின் பாடலில் இதுவும் ஒரு சிறப்பு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக