திங்கள், 11 ஏப்ரல், 2016

சட்டமும் பழமையின் எதிர்காலமும்

பல்லாயிரம் ஆண்டுகள்தாம்
புரையோடிய புண்களுக்குப்
பூசி  நலம் காண்டற்குப்
புத்தொழுங்கு நன்முறைகள்.

செயிர் தீர் தேவி தொழும்
சீர்தரும் விழாவினிலே
உயிர் போக்கும் வெடிகளினால்
செவி கிழியும்  ஒலி எழுகை.

தொன்றுதொட்டுப்  பின்பற்றும்
தோமறு நிகழ்வுகளை
இன்றுகெட்டுப் போகவிட்டால்
எங்கனமோ! பொங்குமனம்.

சட்டம்தான் மறுத்திடினும்
சாங்கியத்தை மறைத்திடவே
வெட்டமுள்ள மதக்குரவர்
வேண்டாமை ஒப்புவரோ?

பழமைக்கும் புதுமைக்கும்
பார்க்குமொரு போராட்டம்
வழமை இது மாறிவர
வாய்ப்பினியே வந்திடுமோ?






  

கருத்துகள் இல்லை: