பிற்காலத்தில் புதிய சொற்கள் பல தமிழில் பயன்பாடு கண்டன.அவற்றுள் தபால், தந்தி என்பன நன்கு ஆட்சி பெற்றவை. நல்ல தமிழ் எழுதவேண்டுமென்பார் இவற்றை விரும்பாமைக்குக் காரணம் இவை தெற்கணி (தெக்கணி, தக்கணி, தக்காணி) மொழிச்சொற்கள் என்று எண்ணியதே காரணம். அதற்கியையத் தமிழில்போல தக்கணியிலும் இவை வழங்கின.
ஒரு கடிதத்தையோ அல்லது எழுதப்பட்ட காகிதத்தையோ அன்றிப் பொருளையோ தன் பால் கொண்டு சேர்ப்பதைத் தன்+பால் > தன்பால்> தபால் என்று குறித்தனர். பால் என்பது பக்கம் என்றும் பொருள்தரும் சொல்லாகும் , பெரும்பாலும் இலக்கிய வழக்குடைய சொல்லாதலின், இதைப் புனைந்து புழக்கத்தில் விட்டவர் தமிழ் அறிந்த வாத்தியாராகவோ வேறு தொழிலுடையாராகவோ இருந்திருப்பார். இத்துணைக்காலமும் இத்துணைபேரையும் மருட்டிய இச்சொல்லைப் புனைந்தவரை நாம்
அறிந்திருந்தால் அவருக்குப் பரிசு வழங்கியிருக்கலாம்.
இடைவந்த னகர ஒற்றைக் களைந்து சொல் அமைத்தது ஒரு வழியாகும். இன்னோர் எடுத்துக்காட்டு:
நண்பர் ( நட்புடையவர் ) > நபர். ( நட்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ) சிறிய பொருள் மாற்றம்.
தன்பால் > தபால். மேற்படி சொல்லமைப்புமுறை பயன்பட்டது.
ஓர் எழுத்தை எடுத்துவிட்டாலே கண்டுபிடிப்பது கட்டமாகிவிடுகிறது.
தந்தி பிறகு காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக