Continue from விபுலம் what is it?
http://sivamaalaa.blogspot.sg/2016/04/whats-it.html
இரண்டு மூன்று எழுத்துக்களை விலக்கிவிட்டு அமைக்கப்பட்ட சொற்களும் உள்ளன என்பதைச் சில ஆண்டுகட்கு முன்னரே எழுதியிருந்தேன். மறந்திருந்தால் ஓர் எடுத்துக்காட்டு:
விழு + வாழ் + அகம் . வி+வா+ கம். = விவாகம்.
அகத்து வாழ்வே விழுமியது, சிறந்தது; துறவு அன்று என்பது பொருள்.
விழு+வாழ்+ ஆகம் > வி +வா+ கம் எனினும் அமையும். ஆகும் என்பதன் திரிபாய் அல்லது ஆகு+ அம் என்பதன் இணைப்பாய் வரும்.
இந்தியாவெங்கும் ஒரு காலத்துத் தமிழே வழங்கியது. சொற்கள் திரிந்து பாகதமாகி, உருக்குலைந்ததன் பயனாய் இங்ஙனம் மாறின என்பதே உண்மை. கருப்பின் கலப்பு இந்தியாவெங்கும் காணப்படுகிறது. அது இடத்திற்கேறப அளவில் அழுத்தத்தில் வேறுபடலாம். நிறம் மயங்கிய காலை, சொற்கள் மயங்காவோ?
பொதுப்படைப்பாகிய சமஸ்கிருதத்தில் சொற்கள் சென்று சேர, அவற்றின் தோற்றகம் எங்கு என்று அறிவது இதுகாலை குதிரைக்கொம்பாகிவிட்டதன்றோ? அதன் முன் வழங்கிய பாகதங்கள் ஒழிந்தன அல்லது திரிந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக