சக்களத்தி என்ற சொல்லின் அமைப்பினைக் காண்போம்.
ஒரே அகத்தில் (வீட்டில் அல்லது இடத்தில்) ஒன்றாக இருத்தலே சகம் என்பதாகும்.
உலகம் என்ற பொருளில் வரும் ஜெகம் என்பதும் சகம் எனவரும். அந்தச் சகம் வேறு. அதை முன் யாம் விளக்கியதுண்டு. அது முன் வந்த இடுகைகளில் இங்குப் பதிவுபெற்றுள்ளது.
இப்போது யாம் கூறவந்த "சகம்".
சகம்+ களத்தி = சகக்களத்தி. மகர ஒற்றுக் கெட்டது.
இனிச் சகம் என்பதை மட்டும் காண்போம்.
சரி+ அகம் = சகம். இதில் உள்ள "ரி" எழுத்தையும் "அ" எழுத்தையும் விலக்க, சகம் வரும்.
சரியகம் > ச (ரிய) கம் = சகம்.
இது ஒரு புனைவுச் சொல்லே.
இதை அமைத்த புலவர்கள் நல்ல படைப்பாளிகள்.
தமிழில் இடைக்குறை, தொகுத்தல் (சில எழுத்துக்களை விலக்குதல்) முதலிய உண்டு. பெரும்பாலும் கவிதைக்கு இவை
பயன்பட்டன. என்னில் > எனில் இல்லது > இலது, இப்படிப் பல.
இதைச் சொல்லமைப்புக்குக் கையாண்டது மிக்க நல்ல உத்தி.
உயிரில் தொடங்கிய பல சொற்கள் உயிர்மெய்யாகத் திரிந்துவிட்டன என்று முன்பு யாம் மொழிந்த வழிச்சென்று, இதையும் உட்படுத்தி உரைப்பினும் ஏற்கத்தக்கதே. அகரம் சகரமானதற்கு இங்கு ஒரு
காரணம் உண்டேயன்றித் திரிபு பொறுத்தவரை மாற்றம் இலது.
சொற்களின் நீட்டம் குறைத்தலில் குற்றம் ஒன்றும் இலது.
சகம் > சகா.
நன்றாகத்தான் இருக்கிறது. இதைத் தமிழெனினும் அன்றெனினும் அதனால் விளைவு யாதுமிலது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக