தமிழர்கள் பண்டு நன்கறிந்த முன்மைக் குடிவகை கள் ஆகும்.
சங்கப் பாடல்களில் கள் பலவிடங்களில் குறிக்கப்பெறுகிறது.
கள் உண்ணாமை வள்ளுவனால் பரிந்துரைக்கப் படுகிறது. களித்தல் என்பது இன்று மகிழ்தல் என்னும் பொதுப்பொருளில் வழங்கினும் பண்டையருக்கு அது கள்ளுண்டு மகிழ்தல் என்ற சிறப்புப் பொருளில் நின்று தெம்பு தந்தது. கள்> களி > களித்தல். கள் என்ற சொல்லுடன் ஓர் இகரம் இணைந்து வினைச்சொல் ஆகிற்று. இப்படி இகர இறுதிபெற்று வினையாக்கம் அடைந்த இன்னொரு சொல் உதித்தல்.
உது > உதி > உதித்தல். அது,இது உது என்பவற்றில் உது : முன்னிருப்பது. உதித்தல் : முன் தோன்றுதல். உது + ஐ + அம் =உதையம் > உதயம் ( ஐ > அ: ஐகாரக் குறுக்கம் ).
பண்டைத் தமிழர் அறிந்த வேறு குடிவகைகள் யாவை? இது ஆய்வுக்குரியது ஆகும். ஆனால் கள் உள்ளிட்ட ஏனைக் குடிவகைகளையும் சுட்டும் ஒரு பொதுச்சொல் தேவைப்பட்டது.
அதற்காக மது என்னும் சொல் படைக்கப்பட்டது.
இது பேச்சு வழக்கில் தோன்றியது. மயக்குவது என்னும் சொல்லில்
இடையில் நின்ற எழுத்துக்களை எறிந்துவிட்டு ம து என்று அதைக்
குறித்தனர். இது பின் சங்கதத்திலும் தமிழிலும் வழக்குப் பெற்றது.
மது என்பதில் மத் என்பதைப் பகுதியாகவும் உ என்பதை இறுதி நிலையாகவும் கண்டு இதை எளிதில் மறைத்துவிடலாம். இதில் ஏதும் தொல்லைகள் இல்லை.
இது 1.1.14ல் இங்கு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆய்வைப் பிடிக்காதவர்களால் அழிக்கப்பட்டது. வேண்டுமானால் இதை உங்கள் கணிணியில் பதிவு செய்து வைத்துக்கொள்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.. இதை மீண்டும் எழுதியுள்ளேன்.
Opponents do mischief by attaching add-ons to our browsers.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக