ஊனக் கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே.
இது சிவஞான போதத்தின் ஒன்பதாம் பாடல்.
இதன் பொருளைச் சுருக்கமாக நோக்குவோம்.
ஊனக் கண் = குறையுடையன வாகிய விழிகள் ;
பாசம் = சடப் பொருள்களை உண்மையென்று உணரும் அறிவு ;
பதியை உணரா = இவற்றால் சிவத்தை அறிய இயலாது.
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி - ஞானக் கண்களால் மனத்தை நிலை நிறுத்தி உணர்ந்து;
உராத்துனை தேர்த்து = விரைந்து செலுத்தப்படும் தேரின் தன்மையது
எனப் பாசம் ஒருவ - என்று பிறழ்வுணர்வினை விலக்க
விதி எண்ணும் அஞ்செழுத்தே. = உறுதி செய்யப்பட்டபடி ஐந்தெழுத்தைச்
சிந்திக்க
தண்ணிழலாம் பதி - சிவத்தை அறியலாகும். அருள் பெறலாம்,
ஊனக் கண்களோ சடப் பொருள்களை அன்றிப் பிற அறிய மாட்டா; பாச அறிவோ எனின் நிலை அற்றவற்றை நிலையானவை என்று பிறழ உணரும்;
இவை இரண்டாலும் பயனில்லை. இவை விரைந்து செல்லும் தேர் போன்ற தன்மையை நம்முள் உய்ப்பவை; இவற்றை விலக்கி பஞ்சாட்சரத்தைக்
கைக்கொள்ளப் , பதியாகிய சிவத்தின் இன்குளிர் அருள் கிட்டுவவதாகும்.
விரைந்து செல்லும் தேரினால் யாருக்கும் பயனில்லை. அதனில் அமைவுற்ற சிலையைக் கையெடுத்துக் கும்பிடக் கூடப் பத்தனுக்கு (இறைப்பற்றாளனுக்கு ) முடிவதில்லை. அத்தகைய தேரினைப் பேய்த்தேர் என்றனர்.
இவற்றைப் பின் விரித்துணர்வோம்,
Previous post on this subject went missing owing to some software error, This was rewritten.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக