வண்ணான் ஆடை துவைத்தல் தப்புதல் என்றும் சொல்லப்படும். ஆகவே வண்ணான் தப்பிப் பிழைக்கிறான் எனில் அதன் பொருள் தெளியக்கூடியதே.1
குற்றவாளி தப்பிவிட்டான் என்று காவலர் கூறுவதுண்டு. இதற்கு "escaped" -- நேரான ஆங்கிலச் சொல் .
பயனற்றுப் போவது, பிறழ்வது, காணாமற் போதல், விலகுவது , பிழை செய்வது, தவறுவது, விட்டுப்போவது, இடர் நீங்குதல் , இறப்பது எனவும் பொருள் தரும் "தப்புதல் " பலபொருள் ஒருசொல். இப்பொருள்கள் வரும் வாக்கியங்களைக் குறிப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
தப்புதல் (இறத்தல்) என்பது, தபுதல் என்று இடைக்குறையும் 2. இதில் ஒரு பகர ஒற்று ஒழிந்தது. என்னில் > எனில்; இல்லாது > இலாது என்றெல்லாம் வருவன போலவே.
தாரம் என்பவள் கணவனுக்குத் துணை தருபவள்; பிள்ளைகள் தந்து குடும்பம் போற்றுபவள். தாரம் : முதனிலை திரி தொழிற்பெயர்.
தபுதாரம் - தாரம் இறத்தல். இது குறித்த பாடல்.
இது தொல்காப்பியத்தில் தபுதார நிலை எனப்பட்டது.
தபுதாரம் - வினைத்தொகை. தாரம் த(ப் )புதல்.
இது குறித்த பாடல் ; அதில் வரும் வரணனை .
1. தமிழ்க் களஞ்சியம் - அறிஞர் க. ப. மகிழ்நன் .
( "மகிழ்நன் பேசினார்; அவரே சங்க இலக்கியம்; சங்க இலக்கியமே அவர்" என்று திரு வி க அவர்களால் புகழப்பட்டவர். )
2 மறைமலையடிகள்.
இது பிற அறிஞரால் விளக்கப்பட்டது. அதனால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
will edit,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக