வியாழன், 14 ஏப்ரல், 2016

சீர்ச்செய் சிகிச்சை

சிகிச்சை  என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும்.  ஒரு மருத்துவரிடமோ வைத்தியரிடமோ சென்று உங்கள் நோயையோ வலியையோ போக்க அல்லது குறைக்க‌ அவர் செய்வன  ‍  சிகிச்சை எனப்படும். நீங்களும் அதில் பங்குகொண்டு அவர் சொன்னபடி மருந்துண்ணவோ தைலம் தேய்க்கவோ   (etc etc)  வேண்டி வரலாம்.

அதாவது அவரும் நீங்களும் இணைந்து உடலைச் சீர்செய்யச் செயல்படுகிறீர்கள்.

சீர் செய் > (இங்கு செய் ‍ வினைச்சொல்லாய் வருகிறது, ஏவல்.)
சீர்ச்செய் >  இங்கு செய் என்பது முதனிலைத் தொழிற்பெயராய் சகர ஒற்று தோன்றுகிறது.

சிகிச்சை : இங்கு சீர் என்பது சிகு>  சிகி   என்று மாறுகிறது.

வேறு எடுத்துக்காட்டுகள்:

பகு > பா.  பகுதி > பாதி,
திகை:   திகைதி > திகதி > தேதி.
மக > மகன் > மான். (தொண்டைமான், நெடுமான், அதிகமான் )

ககரம் அடுத்து வந்தால் முதனிலை நீளும். ககரம் மறையும்.

இந்த விதியை மடக்கிப் போடால்   reverse,  பா> பகு என்று வருமன்றோ.

எனவே,

சீர் > சீ > சிகு ஆகிறது.
சீர் . சீ > சிகி என்றும் ஆகும்.

மா (பெரிது) > மகி > மகிமை என்றும் வரல் அறிக.

சீ> சிகி.
மா> மகி.

சிகுச்சை /  சிகிக்சை    உ - இ மாற்றமும் இயல்பே. But we can go to  சிகிக்சை without having to wade through  சிகுச்சை,

செய் என்பது சைஎன்றும்  திரியும்.  செய்கை> சைகை.  நன்செய்> நஞ்சை. மொழி முதல் இடை கடையிலும் வந்துழிக் காண்க.

சிகிச் செய் >  சிகிச்சை  ஆகிறது.

ஆகவே சீர்செய் > சீர்ச்செய் > சிகிச்சை : மெய்ப்பிக்கப்பட்டது.

கணக்குப்போல் போட்டுத்தான் சொற்களைக் கட்டியுள்ளனர் என்பது
காண்க‌.

மொழி பொருள் காரணம் விழிப்பத் தோன்றா என்று பாடிய தொல்காப்பியனாரைப் பாராட்டின் தகும். மொழி முற்றுணர் அறிஞர் அவர்.










கருத்துகள் இல்லை: