புதன், 17 பிப்ரவரி, 2021

பல திற விளக்கம் - சொல்லாக்கத்தில்

 பச்சைக் கிழங்கைப் பிடுங்கித் தின்றுகொண்டு,  விலங்குகட்கு அஞ்சிக்கொண்டு மரத்தின்மேல் வீடுகட்டிக்கொண்டு ஏறத்தாழ இலைகளால் தழைகளால் தன்னை மூடிக்கொண்டு குளிரிலிருந்து அல்லது வெம்மையிலிருந்து விடுபட வழியில்லையோ என்று வாடியவனே மனிதன். அன்று அவனைக் கண்டு அப்பால் மறைந்துவிட்ட அவனின் கடவுள் இப்போது வந்து கண்டாலும், வியப்பில் ஆழ்ந்து மலைத்து நிற்பார் என்பதில் ஐயமொன்றில்லை.  அன்று அவனிடம் இருந்த சொற்கள்,   அ, இ, உ,  பின்னும் சொல்வோமானால்  எ, ஏ,   ஓ எனச்  சில இருக்கலாம்.

அதனால்தான்  உ  - உள்ளது என்று தமிழிலும்  ஊ -  இருக்கிறது என்று சீனமொழியிலும் அடிச்சொற்கள் பொருளொற்றுமை உடையவாய் உள்ளன.

அதனால்தான்,  அடா  ( அங்கிருக்கிறது) என்ற அகரச் சுட்டில் மலாய் மொழியில் உள்ளது.   அட் ஆ >  அடா.  அதே காரணத்தால் ஆங்கிலத்தில் அட்  என்பது இடத்திலிருப்பது குறிக்கிறது.

உலக மொழிகளை ஆராய்ந்து எத்தனை சுட்டடிச் சொற்கள் கிடைக்கின்றன என்று நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது.  செய்து நீங்கள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்;  அல்லது எங்காவது வெளியிடலாம். ஆனால் பிறருக்கு உரைப்பதால் தெளிவு மேம்படலாம் ஆயினும் உங்களுக்கு அதனால் பயன் குறைவுதான். பிறன் போற்றினும் போற்றாவிடினும் நீங்கள் இருந்தபடி இருப்பீர்கள். மாற்றமெதுவும் இல்லை.

விள் என்பது ஓர் அடிச்சொல்.  அதிலமைந்த வினைச்சொல்தான் விள்ளுதல் என்பது. இது சொல்லால் வெளியிடுதலைக் குறிக்கும்.   விள் திரிந்து வெள் > வெளி ஆனது.   விள் திரிந்து விண் ஆதனது.  இதுவும் ஆள் திரிந்து ஆண் என்று ஆனது போலுமே.   விள் திரிந்து அய் இணைந்து விளை ஆனது.  ஒரு விதை முளைப்பது  விள் ( தரையிலிருந்து வெளிவருதல் ). அப்புறம் அது செடியாய் மேலெழுவது ஐ.    இது அருமையான பழைய விகுதி.  அதே மேலெழுதற் கருத்து இன்றும்  ஐ - ஐயன் - ஐயர் என்ற பல சொற்களில் உள்ளன. அந்தக் காலத்தில் மனிதன் தனிமையை வெறுத்தான்.  அங்கிருப்பவர் இங்கு வந்து நம்முடன் நின்றால், நமக்கும் உதவிதான்.  கரடி வந்துவிட்டால்  அவருடன் சேர்ந்து நாமும் கரடியை எதிர்க்க வலிமையில் மேம்பட்டுவிடுவோம்.   அதுதான் ஒற்றுமை:  அது ஐ+ இ + கு + இ + அம்  :  அங்கிருப்பவர் இங்கு வந்துவிட்டார்,  இங்கு அமைந்தது ( நம் வலிமை)  என ஐக்கியம் உண்டாகிவிடுகிறது.  கழிபல் ஊழிகள் சென்றொழிந்திட்ட காலையும் நம் தமிழ் அடிச்சொற்கள்  இன்றும் கதிர்வரவு போல இலங்குகின்றன.   

இவ்வடிச்சொற்களால் ஒரே சொல்லை பல்வேறு வழிகளில் பொருளுரைக்கும் வழி தமிழ் மொழிக்கு உரித்தாகிறது.  பிறமொழிகளிலும் மூலம் காணுதல் கூடும்.  ஆனால் ஒட்டிக்கொண்டிருக்கும் தோல்போலும் ஒலிகளை விலக்கிவிட வேண்டும்.  எடுத்துக்காட்டு:  ஹியர் (ஆங்கிலம்).   இ = இங்கு.  அர்  - ஒலி உள்ளது குறிக்கக்கூடும்.  அருகில்  என்பதிலும் அர் உள்ளது.  இ என்பது ஹி என்று வீங்கி நிற்கிறது. என்றாலும் முயன்று பொருள்கூற இயலும் என்றே கூறவேண்டும்.

இனி விளை என்பதில் து விகுதி இணைத்தால் விளைத்து ஆகிவிடும்.  து என்பது பெரிதும் "எச்ச விகுதி" யானாலும்  ( தோலை உரித்து என்பதில் உரித்து போல ,  ஆனால் விழுது என்னும் பொருட்பெயர் அல்லது சினைப்பெயரில் து போல ) அதில் ளை என்பதை விலக்கி இடைக்குறையாக்கினால் வித்து ஆகிவிடும்.  ஒன்று பெயரெச்சம், மற்றது  பெயர்ச்சொல். (பொருட்பெயர்).  இவை பயன்பாட்டுக் குறிப்பெயர்கள்.  வேறொன்றுமில்லை.  விளைத்தல் போலும் அறிவும் கல்வியும்.  ஆகவே ஒப்புமையாக்கம்.  விளைத்து > வித்து > வித்துவம் > வித்துவன் > வித்துவான் எல்லாம் விளக்கம் அடைகின்றன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 


திங்கள், 15 பிப்ரவரி, 2021

உயர்வு குறிக்கும் ஐ விகுதியும் ஐயன் (கடவுள்) - சொல்லும்

 ஐ என்பது தமிழில் பண்டுதொட்டு வழங்கிவருகின்ற ஓர் ஓரெழுத்துச் சொல். தமிழில் சிறு சொற்கள் பலவுள்ளன.  நீ, நான், காண், செல் என்பவெல்லாம்  உருவிற் சிறியவை என்றே சொல்லலாம்.. இத்தகைய சிறியனவற்றுள் மிகக் கூடுதலாக எழுத்துக்கள் உள்ளவை, மூன்றில் முடிபவை என்று வைத்துக்கொள்ளலாம்.

ஐ என்பதன் பண்டைப் பொருள் உயர்வு, மேன்மை முதலியன எனல் சரி. இதனுடன் அன் என்னும் ஆண்பால் விகுதி சேர்ந்து ஐயன் என்ற சொல் அமைந்தது. ஐயன் என்பது  மேன்மை பெறு மனிதனையும் குறிக்கும். கடவுளையும் குறிக்கும்.. எதிரில் வரும் மனிதனை மரியாதையுடன் குறிப்பது தமிழர் பண்பாட்டுக் கடைப்பிடிப்பு ஆகும்.

வந்தனை.  கண்டனை.  சென்றனை , நீ  -   இவற்றுள் வந்த ஐ உயர்வு குறிப்பது ஆகும்.  ஆனால் இற்றை நிலையில் இவ்வுயர்வுக் கருத்து மறைந்துவிட்டது. அது முன்னரே போய்விட்டது என்றுதான் திருத்திக்கொள்ளவேண்டும்.  மரியாதைக் குறிப்பு அறவே ஒழிந்துவிட்டபடியால், எப்படி அதைச் சேர்ப்பது என்று கவலை கொண்ட மக்கள்,  அதற்குப் பதில் ஈர் என்ற சொல்லைச் சேர்த்தனர்.  அது:

வந்தீர், கண்டீர், சென்றீர் என்றாயிற்று. ஏனை இவையொத்த வடிவங்களும் இவற்றுள் அடங்கும்.   இந்த ஈர் என்பதில் ஆடிக்கொண்டிருந்த மரியாதை அல்லது பணிவு,  சிறிது காலத்தில் மறையவே, அப்புறம் "கள் " விகுதியைச் சேர்த்தனர்..  அது அப்புறம் -----

வந்தீர்கள்,  கண்டீர்கள், சென்றீர்கள் 

என்று முற்றுக்களாய்    அமைந்துவிட்டன என்றல்  காண்க.

இதற்குமுன் கள் என்னும் விகுதி   அஃறிணைப் பொருட்களுக்கே வழங்கிவந்தது.  அது பன்மை விகுதியாய் இருந்தது.   அதன் திணைக் குழப்பத்தை மறந்துவிட்டு,  உயர்திணை அஃறிணை என எல்லாவற்றுக்கும் பொதுவிகுதியாய் அது புகுந்து புதுமலர்ச்சி கண்டது.

சங்க இலக்கியங்களில் இவை அருகியே பயன்பாடு கண்டன.  வள்ளுவனாரிலும்  அஃது குறைவே. "பூரியர்கள் ஆழும் அளறு"  என்புழி  (என்று முடியும் குறளிற்)  காண்க.  அதனால் யாம் எழுதும்போது பெரும்பாலும் கள் விகுதியை விலக்கியே எழுதுவேம்.  எடுத்துக்காட்டாக,   ஆசிரியர்கள் என்று எழுதாமல்,  ஆசிரியன்மார் என்றுதான் எழுதுவோம்.  மாரைக்கிளவி செவிக்கினிது.

இந்த விகுதிகள் பேச்சில் மரியாதையை வளர்த்தது குறைவே ஆகும்.  பணிவுக் குறைவாகப் பேசுவோர்,  பேசிக்கொண்டுதான் திரிவர்.

பழங்காலத்தில்  அள் என்ற ஒரு சொல் இருந்தது.  அது அடிச்சொல்.  அதில் இகரம் இறுதியில் சேர்ந்து, அளி என்று ஆனது.  அளி - அளித்தல்.  அன்பினால் பிறருக்குக் கொடுத்தல்.  அள்  அன்பு குறித்தமையினால்,  வந்தனள், சென்றனள், கண்டனள் என்பவை வந்து, சென்று, கண்டு என்பவற்றுடன், அன்பு கலந்த குறிப்புகளாயின. தமிழன் விலங்குகளையும் நீர்வாழ்வனவற்றையும் அன்புகொண்டே கருதினான்.  மீன்+கு+அள்,  பறவை+கு+ அள் என்பவை  மீன்கள்,  பறவைகள் ஆகி,  பன்மை விகுதிகள் ஆயின. மொழியில் இவை போலும் சொல்லொட்டுக்கள் பிற்காலத்தவை. மலையாளம் இன்னும் சில மொழிகளில் எச்ச வினைகளே நின்று செயல் முற்றுப்பெற்றதையும்  உணர்த்தும்.  அவன் வந்நு ( அவன் வந்தான்) என்பது காண்க. ஒருமை பன்மை, இல்லாத மொழிகள் பல.  " இரு பெண்கள் வந்தார்கள் "  என்பதில்,  இரு என்பது பன்மையைக் காட்டுகிறது.  அப்புறம் பெண்கள் என்று ஏன் இன்னொரு முறை பனமையைக் காட்டுதல் வேண்டும் என்பர். அப்பால் வந்தார்கள் என்பதில் வேறு பன்மை. ஒரு தடவை பன்மை சொல்லி வாக்கியம் முடிவதற்குள் அதை மறந்துவிடுவார்களா என்ன?

இப்போது ஐ விகுதிக்குத் திரும்புவோம்.  வந்தனை, சென்றனை என்பவெல்லாம் தம்மில் வரும் ஐ விகுதிகளால் உயர்வு குறித்தன என்பது  உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு - பின்,

முகக் கவசம் அணியுங்கள்

இடைத்தொலைவு கடைப்பிடியுங்கள்

நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.

நலமுடன் வாழ்க.



சனி, 13 பிப்ரவரி, 2021

சலக்கிரீடை ( ஜலக்ரீடை) என்பது

 "ஜலக்கிரீடை" எனற்பால சொல்லை அறிந்துகொள்வோம்.

முந்தையக் காலங்களில் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடம் செல்கையில் இடையில் ஆறு குறுக்கிடும். உடைகளைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டு, குளிக்க விரும்புகிறவர்,  ஆற்றில் இறங்கிக் குளிப்பார்.  சவர்க்காரம் இல்லாத அக்காலத்தில்  நல்ல கரைமணலையோ கிடைக்கும் இலைதழைகளையோ கசக்கி உடலில் தேய்த்துக்கொண்டு குளித்துமுடித்துவிட்டு அப்பால் செல்வர். ஒரு திருகுகோலைத் தொட்டுத் திருப்பியவுடன் நீர் வரும்படியான நகர்வாழ்நர் துய்க்கும் வசதிகளில்  திளைத்தல் அக்காலங்களில் இல்லை.

ஓடும் நீருக்கு அல்லது ஜலத்துக்கு இடையில் நின்றுகொண்டு குளிப்பதால் இது "ஜலம்+  கு + இரு + இடை"  >  ஜலக்கிரீடை  என்ற சொல் பிறந்தது.

ஜலம் -   நீர்.

கு  -   சேர்விடம் (அல்லது நீரில் தோய்தலைக்) குறிக்க  "கு" இடைநிலையாய் வந்தது.  ஜலம் + கு > ஜலத்துக்கு என்று அத்துச்சாரியை வரவில்லை.  அது இங்கு தேவையுமில்லை  கு என்பது வேற்றுமை உருபாகவும் வரும்.

ஜலத்துக்கு இடையில் நின்று அவன் குளிக்கின்றான்.  அதுதான் இரு இடை > இரீடை > (கு) இரு இடை > கிரீடை.

இரு என்பதில் திரிந்த கிரு என்பதைத் தனியாக்கி விளக்குவது ஒரு தந்திரம்.

இரு என்பதன் முந்துவடிவம்  இடு என்பது. இட்ட இடத்தில் உள்ளதாதல் இரு. இத்திரிபில் நுண்பொருள் மாற்றம் உள்ளது.  ட - ர பெரிதும் காண்புறும் திரிபே.

சலசல என்று ஓடுவதால் சலம் (ஜலம்) என்ற பெயருண்மை முன் ஓர் இடுகையில் விளக்கம் பெற்றது.  ஆங்குக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்க.

முகக் கவசம் அணிக.



வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

நெடும்பாதையில் சென்று

கொடும்பாறைகளை வென்று

சுடும் கூர்கற்களில் நின்று

கடுமுள்ளைக் கால்மெத்தைஎன்று

நடுக்காட்டினையும் நண்ணி

நம் ஐயப்பனையே எண்ணி,

இறைப்பற்று யோகமே பண்ணி,

விண்ணருள் தவமேற்கொண்டார்

கண்ணெனக் காணும் நம் ஐயப்பசாமிகள்.

அவர்கள் மெய்யருள் சிறக்கவே..




செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

கழிப்பிடத்துக்கு வரும் சில வேறுபெயர்கள்.

 இன்று கப்புரை என்ற சொல்லைக் கவனித்தறிவோம்.

இந்தக் கப்புரை என்ற சொல்லை,  "சலக் கப்புரை" என்ற தொடரிலிருந்து கொண்டுவருகின்றோம். இதைப் பிட்டு எடுத்துப் பார்த்தால் இது ஓர் அழகிய சொல்லாகவே தோற்றமளிகிறது..  ஆனால் இச்சொல் இருப்பதாக நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காண இயலவில்லை.. யாம் அறியாது எங்காவது வழக்கில் இருக்கலாம் என்றாலும்,  இங்கு இல்லை என்றே கொண்டு, அடுத்த கட்டத்தினுள் நுழையலாம்.

கப்புரை என்ற சொல் இல்லை என்றால் அப்புறம்  சலக்  கப்புரை என்று பிரித்து எழுதுவது வழுவாகிவிடும்.  ஆகவே, இனி   " சலக்கப் புரை" என்று வைத்துக்கொண்டு அதன் பொருளை அறிய முற்படுவோம்.

சலம் என்ற சொல்லில் ஒன்றும் இடக்கு ஏற்படவில்லை.  அதற்கு "நீர் " என்ற பொருள் உள்ளது.  அது  ஜலம் என்றும் வழங்குகிறது.  இது நீர் சலசல என்று ஓடுவதால் " சலம் " என்று பெயர் பெற்றதாக மறைமலையடிகள் கூறியுள்ளார்.  எனவே  சலசல, ஜலஜல எல்லாம் ஒலிக்குறிப்புகளே.   இயற்கையில் நாம் கேட்கும் ஒலிகளை மொழிப்பாகுபாட்டினுள் இருத்த வேண்டியதில்லை.  அவை பொதுவொலிகள். காகா என்று காக்கை கத்துவதுபோலுமே ஆகும். இதைக் காக்கா அம் (காகம் ) (க் இடைக்குறை);  காக்கா  ஐ (காக்கை) எனினும் ஒன்றே. அம் விகுதி அமைதல் குறிக்கும் விகுதி.   ஐ விகுதி உயர்வு என்று பொருள்பட்டுப் பின் வெறும் இறுதியாய் நின்றதொன்றாகும். உண்டனம்,  உண்டனை ( யாம் உண்டனம், நீ உண்டனை) என வினைமுற்றுக்களிலும் வரும்  விகுதிகளே இவை.    இவை உண்மையில் பல்பயன் காண்பன.

சலக்கம் என்பது கழிப்பிடத்துக்கு இன்னொரு பெயர்.   காலையில் சலக் கடன் களை நிறைவேற்றிக்கொள்வதற்கான இடம்.  இது சலக்கடம்  என்று அமைந்த சொல். கடம் என்பதும் கடன் என்பதும் மகர 0னகர ஒற்றுப் போலி.  அறம் - அறன், திறம் - திறன் என்பது போல.  இந்தச் சலக்கடம் என்ற சொல், சலக்கம் என்று திரிந்துள்ளது.   டகரம் கெட்டு, சலக்கம் ஆகி,  கழிப்பிடம் குறித்தது.  சலத்தைக் கடத்துமிடம் என்று கொண்டு,  சலக்கடம் > சலக்கம் எனினுமது.

கட என்பதற்குப் பதில் கழ (கழற்று, கழட்டு) என்று இட்டு நோக்குவானும் காண்பது அதுவேயாகும்.  பாழை - பாடை  என்று திரிபுண்மையால், வேறுபடுதல் இலது.

கப்புரை என்பதை கழிப்புரை என்று கண்டு, கப்புரை என்று முடிபு கொளுத்துதலும் அஃதே.  ழிகரம் இடைக்குறை.  பண்டுபோல் காணுமது.

புரை என்றல் இடம் என்று பொருள்தருவதே.  கழிப்புரை என்ற கூட்டுச்சொல் காணப்படவில்லை எனினும், அதனை இல்லை என்று கொள்ளுதல் இயலாது. கழி என்றொரு சொல்லும்  புரை ( இடம் ) என்ற சொல்லும் தமிழில் உண்மையின் எனக்காண்க.

சலக்கம்,  சலக்கப்புரை என்பன கழிப்பிடத்து வேறு பெயர்கள்.

இனி இது வாக்கியமாதலும் உரியது.  சலக்கு -  சலம் கழிப்பதற்கு,  அப் புரை - அந்த இடம் என்று  வாக்கியமாகி, " சலக்கப்புரை" என அமைதலுமாம்.  சலக்கு என்பது சலத்துக்கு என்று அம் விகுதி இழந்தபின் அத்துச்சாரியை மிக்கு நின்று வருதல் மகிழ்தரும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.


குறிப்பு:

புரை -   இடம்,  துவாரம்.






ழகர ளகர மயக்கம்.

 அடினும் ..... என்று ஒரு வாக்கியத்தைத் தொடங்கினால் முதல் வந்த சொல்லே புரியாததாய் உள்ளதே என்று சிலர் தன் மனநிறைவின்மையை அறிவிக்கக் கூடும். அடுதல் என்பதொரு வினைச்சொல். அதாவது செய்வதனைக் குறிக்கும் சொல். ஆனால் அடுத்தல் என்ற சொல் ஒருவேளை புரிந்துகொள்ளத் தக்கதாய் இருக்கும் என்று நாம் நினைக்கலாம்.

வினைச்சொற்களை ஆற்றலுடன் வாக்கியத்தில் வைத்துப் பேசுவதில் தமிழ்ப் பேசுவோர் கைவந்த திறனுடையவர்கள் என்று சொல்ல எனக்கு வரவில்லை. சீனர் மலாய்க்காரர் முதலானோர் அவர்கள் மொழியின் வினைச்சொற்களை மிக்க ஆற்றலுடன் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. நான் நினைப்பது தவறாக இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் வினைச்சொற்களைக் கையாள்வதில் திறனுடன் விளங்கவேண்டும் என்பதே எனது அவா ஆகும்.

அடினும் என்பதை விடுத்து அடுப்பு என்று சொன்னால் பலருக்கும் புரிந்துவிடும். தினமும் சாப்பாட்டுக்கு உதவுவதால் அது பலருமறிந்து பயன்படுத்தும் சொல்லாய் உள்ளது.  "அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது" என்பது நாம் இளமை நாட்களில் படித்த நூலில் உள்ள வாக்கியம்தான்.  அழகிய தமிழ் வாக்கியம்.  செய்யுள்.  வெற்றிவேற்கை என்னும் நூலின் உடமை அது. உங்களின் உடமையும் தான்.

அடினும் சுடினும் என்ற இரண்டும் ஒரு பொருளன.  வடிவ ஒற்றுமையுடன் வருகின்றன.  அடு என்ற வினைச்சொல்லில் பு என்னும் தொழிற்பெயர் விகுதி இணைந்து அடுப்பு என்ற சொல் வருகின்றது.  சுட்டு அடுக்கி உண்ணத் தருவர் அடையினை.  இதுவும்   அடு - அடுதல் -  அடு+ ஐ என்று விகுதி பெற்று, அடை என்று அமைந்தது. மாவினை மிக்க அடர்த்தியாய் அழுத்திச் செய்யப்பபெறுவது   -  என்று விளக்கினும் ஏற்கலாம்.  அடு>  அடர்;  அடு + ஐ = அடை என்று வருதலும் உடைத்து.

அடுக்களை என்ற சொல் சமையலறையைக் குறிப்பது.  களை என்பது வேலையைச் செய்யுமிடத்தைக் குறிக்கிறது.  களம் > களை.  அன்றிக் களை என்பது வேலைகளைச் செய்வதையும் அதனால் களைத்துப்போவதையும் குறிக்கும் சொல்.  பெண்டிர் அடுக்களையில் களைத்துப் போய் அமுது படைக்கின்றனர். களம் என்பது அம் விகுதியில் முடிந்த சொல். அதே அடிச்சொல் ஐ விகுதியில் முடிந்ததே (அடுக்)களை ஆகும்.  களம், களை என்பன அமைக்கப்பட்ட இடம் எனப்பொருள் படும்.  அடிச்சொல்: கள் > கள்+து > கட்டு( கட்டிய இடம்).  கள்> களை என்பது அதே சொல்லினின்று அமைதல் காண்க.

இனி, யாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.  அது அட்டளித்தல் என்பது.  அட்டு -  சமைத்ததை,  அளித்தல் - உண்போருக்குத் தருதலாம். இச்சொல் நாளடைவில் அட்டழித்தல் என்று மாறிவிட்டது.  ஆனால் பொருள் மாறவில்லை.  ளகர ழகர மயக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது.  இந்தச் சொல்லில் வரும் அழித்தலுக்கு அளித்தல் என்பதே பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நோய் வராது காத்துக்கொள்க. 



 அளைதல் என்பது சென்று  பொருந்துதல் என்று பொருள்தருவதால் சமைத்தற்குச் சென்று ஆவன செய்யும் அறை என்ற பொருளுக்கு அடுக்க்  


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சின்னநாய் அழகுக்கு ஒப்பில்லை


 நிலைப்பே   ழைக் கீழ்   ஒளிந்துகொண் டாலும்

கலைப்பாங்  கினில்தோய்  கவர்கண் களுடன்

எத்துணை அழகினைக்  காட்டி  விட்டாய்!

இத்தரை தன்னில் ஒப்பினி யுளதோ?

படம்:  உதவியவர்   திருமதி ரோஷினி பிரகாஷ்

பாடல்: சிவமாலா.

சனி, 6 பிப்ரவரி, 2021

பூமனைத் தொண்டு.

 இந்தக் கவிதை,  அங்குச் சுட்டப்பெற்ற பூமனைக் காட்சிகளை முன்வைத்துப் பாடப்பட்டது.   அக்காட்சிகளை நீங்கள் இவ்விடுகையில் கண்டு உவகை கொள்க.  சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2021/02/the-beauty-of-nature.html


பூமனைத் தொண்டு.


இயற்கை விளைத்த இன்பூக் கவின்தனை

செயற்கை மனைக்குள் செவ்வனே வைத்தல்

முயற்கொம் பன்றது முடிந்தது முற்றும்

அயற்கண் ஆனதை அழகினைக் காண்க.


வணமலர்க் காட்சி வருக காண்கென

உணத்தேன் உன்னும் ஈக்களை வரச்செய்

மணப்பூங் காவினை மனைக்குள் அமைத்தனர்.

கணம்கடன் மறவா இயற்கைக் காவலர்


கண்களை வருடி மனத்தினை மகிழ்த்தி

பண்பொடு மலர்போல் மணத்தொடு வாழ்கென

விண்கொடை ஒப்பதோர் விழுமிய செய்தி

தண்பெறத் தருவதிப் பூமனைத் தொண்டே.


அரும்பொருள்:


பூமனை - மலர்கள் வளர்க்கும் ஒரு கூடம்.

கவின் - அழகு.

முயற்கொம்பு - இயலாதது.

அயற்கண் - அடுத்த ஒரு தேயம். அல்லது நாடு

வணமலர் - வண்ணமலர் ( தொகுத்தல் விகாரம்)

உணத் தேன் - உண்ணுவதற்குத் தேன் தொகுத்தல் விகாரம்)


உன்னும் - நினைக்கும்

கடன் - கடமை

இயற்கைக் காவலர்

விண்கொடை - மழைபோலும் குளிர்ந்த கொடை

தண்பெற - குளிர்ச்சி பெற


வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பவுத்திரம் என்ற சொல். ஃபிஸ்டுலா

 குடல் ஆசனவாய்ப் பகுதிகளில் ஒரு சீழ்வடி குழாய் தோன்றி வலியுடன் கூடிய நோய் பவுத்திரம் என்று சொல்லப்படுகிறது.  இச்சொல் உருவானது எப்படி என்று அறிந்துகொள்வோம்.  ஆங்கிலத்தில் ஃபிஸ்டுலா என்பர்.

இது மூலநோயுடன்  ஒருங்கு உரைபெறும் நோய் ஆகும்.

பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்படுவது இது.

இது உண்டான இடத்திலிருந்து  சதை தோல்களினூடு ஒரு குழாய் ஏற்பட்டுச் சீழ் (சலம் )  வடியு.ம்.  நோய்நுண்மிகளால் ஏற்படுவதென்பர். குழாய் தோன்றிய இடத்தினின்று வடிவாசல் வரை  அது நெட்டில் பரவுவது போல் உணர்வர்.  இது:

பரவு + திரம் >  பரவுத்திரம் >  பவுத்திரம் ஆயிற்று.

திரிதல் :  மாறுதல், கெடுதல்.   திரி + அம் = திரம்.  இது திறம் என்ற சொல்லின் திரிபாகவும் கருதப்படும்.

பர > பரவு > பாவு  என்பன தொடர்புடைய திரிபுகள்.

பவு என்பது இடைக்குறை. வல்லெழுத்துக்கள் மட்டுமின்றிப் பிறவும் இடைக்குறை அடையும் என்றறிக.  முன் இடுகைகளில் பல இடைக்குறைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  அவற்றை வாசித்துப் பட்டியலிட்டுக்கொள்க.

அரக்கர் என்பதன் அடிச்சொல் அர் > அர.

அர + கு =  அரக்கு >  அரக்கர்.

அர + வு =  அரவு .   அரவு+ உண் + அர் >  (அரவுணர்)

அரவுணர் > அவுணர்:   இது அரக்கர் என்னும் பொருளுடைத்தே.

அரவு -  அவு  ( இது முதலிரு - முதல்மூ  வெழுத்துக்கள் திரிபு).

பரவு -  பவு  ( இதுவுமன்ன).  ஒப்பு நோக்கிடுக.

"செங்களம் படக்கொன்று  அவுணர்த் தேய்த்த" என்று  வரும்  சங்க இலக்கியத்தொடர் உன்னுக.

அரவு என்பதற்குப் பாம்பு என்றும் பொருள் உள்ளபடியால் அரவு + உண் என்பதற்கு பாம்பு உண்டோர் என்றும் பொருள் கொள்ளலாம்.  இதை நீங்கள் ஆய்வு செய்து தெரிவிக்கவும்..    ஆ+ உண்+ அர்  என்பது குறுகி அவுணர் என்று வருதலும் உரியது இச்சொல்.  ஆ: மாடு.  அவ்வாறாயின் சாவு > சவம் என்னும் திரிபு வழிப்படும்.  திரிபுகளை மட்டும் உன்னுகிறோம். வரலாற்றைப் பிறர் அறிந்துரைப்பாராக.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.  

நோயை அணுகாதீர்.





The beauty of Nature. இயற்கை அழகு








உதவியவர்கள்:  திரு திருமதி : பிரகாஷ் ,  ரோஷினி பிரகாஷ்

 இயற்கை அழகு

இப்படங்களைப் புகழுமுகத்தான் ஒரு கவிதை உங்கட்கு.-- படித்து மகிழ்க.

கவிதைக்குச் செல்லச் சொடுக்குக;

https://sivamaalaa.blogspot.com/2021/02/blog-post_6.html

 


 

புதன், 3 பிப்ரவரி, 2021

ஒலி செய்து தொடங்கும் வழக்கம். - சொல் : ஆரம்பம்.

 மனிதர்களிடையே பலவித ஒலிக்கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரம்பம் என்ற சொல் முதன்முதலாய்ப் புனையப்பட்டு வழக்கிற்கு வந்த காலத்தில் எந்த எந்த ஒலிக்கருவிகள் இருந்தன  என்றோர் ஆய்வுக் கட்டுரை வரையும் முகத்தான் "பண்டைத் தமிழர் ஒலிக்கருவிகள் " என்று ஒரு தலைப்பைப் போட்டுக்கொண்டு ஆய்வு செய்யலாம்.  ஆர்வமுள்ளவர்கள் இதை ஆய்வு செய்வார்களாக.  இன்று நாம் சொல்லிற் பொருந்திய பொருளை உணர்த்தச் சில சொல்லி முடிக்கும் நோக்குடையோம்.

ஆரம்பம் என்றாலே "ஓலி" என்றுதான் பொருள்.  ஒலிசெய்து ஒன்றைத் தொடங்கினால் அத்தொடக்கத்துக்கும் "ஒலி" என்ற அடிப்படைப் பொருள்தரும் ஆரம்பம் என்ற சொல்லே பயன்படும் தகுதியை இன்று மொழியில் அடைந்துள்ளது.

ஆரம்பம் என்பதற்கு உள்ள பொருள்கள் ஆவன:

ஒலி

தொடக்கம்

கொலை

பாயிரம்

பெருமை

முயற்சி.

மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பொருள்களாய்த் தோன்றும்.  அப்படித் தோன்றுவது சரிதானா என்று சற்று பார்ப்போமே!

இப்போது செய்வது போலவே பழங்காலத்திலும் ஓர் ஒலியைச் செய்து சில காரியங்களைத் தொடங்கினார்கள். பெரும்பாலும் பெருந்திரளாகக் கூட்டமுள்ள நிகழ்ச்சிகளில் ஓர் ஊதுகருவியோ  அல்லது அடி தோற்கருவியோ பயன்படுத்தப்படும். அப்பால் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்று கூடியுள்ளோர் தெரிந்துகொள்வார்கள்.

பயன்படுத்துவது அடித்தொலி செய் கருவியாயின்,  "அம், பம், அம், பம்" என்று அடிப்பார்கள். படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதற்கு இவ்வொலி இன்றியமையாதது.  எந்தக் காலை எப்போது எடுத்துவைத்து எப்படிச் செல்வது என்பதற்கு இவ்வொலி துணைசெய்வது.

ஆர்தல் என்றாலே ஒலிசெய்தல் என்று பொருள்.  அவ்வொலி எத்தகைய ஒலி என்பதை அடுத்த ஈரசைகளும்  தெரிவிக்கின்றன. ... படைவீரர்தம் நடை தொடங்கிற்று  என்பதற்கு  ஒலி நல்ல அறிவிப்பு ஆகும்.

ஆர் + அம் + பம்.

மற்ற நாடுகள் போலவே  தமிழ்நாட்டிலும் சுற்றுப் புறங்களிலும் படைநடை பழகுதல் இருந்திருக்கவேண்டும் என்பது நல்லபடி தெரிகிறது.

ஒவ்வொரு மொழியிலும் ஒலிக்குறிப்பில் தோன்றி அமைந்த சொற்கள் உள்ளன.  காக்கை என்ற தமிழ்ச்சொல்லும் குரோ என்ற ஆங்கிலச்சொல்லும் இவ்வாறு தோன்றியன என்பது நீங்கள் அறிந்தது.  ஆரம்பம் என்பதும் ஒலிக்குறிப்பு அல்லது ஒலிக்குறிப்பும் ஓர் இயற்   சொல்லும் கலந்த  கலவைச் சொல் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது தெளிவு. முழு ஒலியாதிய சொல்லா கலவையா என்பது முதன்மையன்று.  நேரமிருக்கையில் கூர்ந்து உணர்ந்துகொள்ளுங்கள். யாம் வேண்டுமென்றே இதற்குள் செல்லவில்லை.

எப்போதாவது உங்களுடன் அதை நோக்குவேம்.

அம் பம் அம் பம் என்று அந்தக் காலத்தில் நடைபழகினர் என்று தெரிகிறது. இப்போது இடம் வலம் என்பதற்குரிய ஆங்கிச் சொற்கள் பழக்கத்தில் உள்ளன. ஏக்தோ ஏக்தோ என்றுமிருக்கலாம். இது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

இவ்வாறு ஒலியுடன் நடப்பதை மக்கள் கருதினர்.  அதனால் அதற்குப் பெருமை என்னும் பொருளும்  மற்றும் தொடக்கம் என்பது ஒரு முயற்சி ஆதலின் இச்சொல்லுக்கு முயற்சி என்ற பொருளும் பெறுபொருள் ஆயின.  பாயிரம் என்பது நூலின் தொடக்கத்தில் வைக்கப்படுவதால்  அது பாயிரத்தையும் குறித்தது.

அம்பினால் அறுக்கப்பட்டு இறத்தலும் கொலையே.  அறு + அம்பு + அம் > ஆறு + அம்பு + அம் >  ஆறம்பம் என்றிருந்திருக்கவேண்டிய சொல்,  ஆரம்பத்தில் வந்து சேர்ந்துகொண்டது.  அறு (வினைச்சொல்).   ஆறு  - முதனிலை திரிந்த தொழிற்பெயர். நதி குறிக்கும் ஆறு என்பதும் நீர் அறுத்துக்கொண்டு செல்வதால் ஏற்பட்ட சொல்லே.  ஆறு என்பது ஆர் என்று பிறழ்வாகி,  அம்பு என்ற கொலைக்கருவியை உள்ளடக்கி அம் விகுதி பெற்று,   கொலை என்ற பொருளில் வந்துள்ளது.  இப்பொருளில் இது பழநூல்களில் இருந்தாலும் இப்போது வழக்கில் இல்லை. சில சொற்கள் ரகர றகர வேறுபாடிழந்து வழங்கும்.  அத்தகைய சொற்களை இலக்கண நூல்களில் காண்க.


மற்றவை பின் விளக்குவோம்.

மெய்ப்பு பின்னர்.

நோய்க்கு இடந்தராதீர்கள்.






திங்கள், 1 பிப்ரவரி, 2021

பொருளிழந்த பிற்கால விகுதிகள்.

 சொல்லைப் பார்த்தவுடன் அச்சொல் அவ்வாறு அமைந்ததன் காரணம்  உடனே புரிவதில்லை.  இதைத் தொல்காப்பியனாரே  அவர்தம் நூலில் கூறியுள்ளார்.  நாம் இதுவரை கண்ட  பல சொற்களையும் இடுகைகளில் விளக்கியவாற்றால் இதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இங்கு கூறப்பட்ட பெரும்பாலானவை வெறுமனே பகுதி விகுதி அல்லது முதல்நிலை இறுதிநிலை என்ற அவ்வளவில் அறியவைக்கக் கூடியவையாய் இருக்கவில்லை.  சில சொற்களே தேவைப்பட்ட ஞான்று, விகுதிகளே வேண்டியவா யிருந்திருக்க வாய்ப்பில்லை.  அதற்கப்புறம் இன்னும் சொற்கள் தேவைப்பட்ட ஞான்று விகுதிகள் தேவைப்பட்டன. சொல்லை மிகுத்துக் காட்டிச் சொற்கள் அமைந்தன.  மிகுதி - விகுதி என்று அமைந்த இது,  சொற்கள் இன்னொரு சிறுசொல்லைப் பெற்று நீண்டு அமைந்த நிலையைக் காட்டியது.  இச்சொல்லில் அமைப்பும் முதனிலைத் திரிபுடன்  அமைந்தது.  இதுபோலும் திரிபுக்கு இன்னோர் உதாரணம் , மிஞ்சுதல் - விஞ்சுதல் என்பது.

மேலும் மிகுதியாய்ச் சொற்கள்  தேவைப்பட்ட போது,   விகுதியுடன் இடைநிலையும் தேவையானது.  எ-டு: பருவதம்:  பரு(த்தல்) + அது + அம் > பருவதம்.(பொருள்: மலை).  அது - இடைநிலை.  அம் - விகுதி.   அதற்கப்பால் மேலும் தந்திரங்கள் பலவற்றைக் கைக்கொண்டனர்.   திறம் என்பதைத் திரம் என்று மாற்றிக்கொண்டு சில சொற்களைப்  புனைந்தனர்.  அப்பால், இடைக்குறை கடைக்குறை முதலியவற்றைக் கையாண்டனர்.  சொல்செய் வழிகள் அனந்தம் அனந்தம் ....

இடைமிகையும் இதிற் பங்காற்றியுள்ளது:  எ-டு:  குறு > குன்று.  ( இடையில் ஒரு 0னகர ஒற்று மிக்கு வந்தது).

[அனந்தம் என்றால் முடிவேதும் இல்லா நிலை. இது அமைந்த விதம் முன் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. ]

அன்று   அந்தி  https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_3.html

அந்தி :   https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html ]

எதையும் சூழ்ந்து ( அதாவது ஆலோசித்து) திறம்படச் செயல்புரிந்து பயன்பாட்டுப் பொருள்களை விளைவிப்பவர்களே  சூத்திரர்கள்.  இச்சொல் சூழ்திறத்தார் >  சூழ்திறர் > சூத்திரர்  என்று அமைந்ததென்பதை முன்பு வெளியிட்டுள்ளோம். ழகர ஒற்று மறையும். எடுத்துக்காட்டு:  வாழ்த்தியம் > வாத்தியம். ழகர ஒற்று மறைந்தது.  இதனை ஆசிரியர் பிறர் காட்டியுள்ளனர்.  வாய்த்தியார் (வாய்ப்பாடம் சொல்பவர்)  என்பதும் வாத்தியார் ஆவது.

றகரம்  ரகரமாகும்.  சூத்திறம் > சூத்திரம். தந்திறம் > தந்திரம் 

என்பதும் காண்க. வந்து பற்றும் வறுமையைத் தரித்து அதை விலக்கு வழிகண்டு திறம்பெறவேண்டும்.  வறுமையை வெற்றிகொள் திறம் அதுவாம்.  ஆகவே தரி+ திறம் >  தரித்திரம் ஆயிற்று. இவ்வாறு வறுமையின் வாய்ப்பட்டார், "நல்கூர்ந்தார்". அவர்களுக்கு விரைந்து நல்வழி வரவேண்டும் என்னும் ஆன்றோர் அவரை " நல் கூர்ந்தார்"  ( நன்மையை நோக்கி நடப்பவர்கள் ) என்று இடக்கர் அடக்கலாகக் கூறினர்.  அவர்களை(வறியோர்)ப் பழித்தல் ஆகாது.

பேச்சு வழக்கில் தரித்திரியம் என்பர். அவர்கள் தரித்தது ---  திரிந்துவிடுகிறது என்னும் பொருளில். 

முற்காலத்தில் விகுதிகட்கு. பொருள் இருந்திருக்கும் என்பர். இருந்தது என்று நம் சொல்லாய்வு தெளிவிக்கிறது.  எடுத்துக்காட்டு: திறம் என்னும் விகுதி.  அது திரமான பின் பொருள் மறைந்து,  வெறும் விகுதியாய் வழங்கிற்று.  திறன் குறிக்கும் பொருண்மை சிறிதும் காணப்படாமல்,  வெறும் விகுதி ஆயிற்று. எடுத்துக்காட்டு:  மூத்திரம்.  (மூள் திரம் > மூத்திரம்).  வயிற்றில் மூள்வது .( மூள்வது:  உண்டாவது )  என்பது பொருள்.  இஃது உடலினியற்கையால் விளைவதனால்,  திறவெளிப்பாடு ஒன்றுமில்லை. ஆதலின் விகுதி அல்லது இறுதிநிலை ஈந்த பொருண்மை யாதுமிலது.

திரம் ( மூத்திரம் என்பதில்)  விகுதி அன்று,  திரள்வது குறிப்பது எனினும் அமையும்.  அடிச்சொல் தொடர்பினால். மூண்டு திரண்டு வருவது எனின், திறம் - திரம் திரிபு விகுதியின் வேறுபடல் அறிக. விகுதிப்பொருள் இழக்கப்பட்டது.

மூளுதல் என்னும் சொற்பொருள் அறிக:

முல் -  முன் (லகர னகரத் திரிபு)

முல் > மூல் > மூலை : சுவர்கள்  தொடங்கிடம்.

முல் > மூல் > மூலிகை: நோயறுக்கும் முன்மை விளைவேர்.

முல் > மூல் > மூலம்:  தொடக்கம், தொடங்கிடம், தொடங்குநூல்.

முல் > மூல் > மூள் > மூளுதல்: சிலபல ஆற்றல்கள் கூட்டியைவால் ஒன்று புதிது

தொடங்குதல்.

"முன்செய்த தீவினையால் இங்ஙனே வந்து மூண்டதுவே". - பட்டினத்தடிகள்.

முல் > முள்:  செடியிற்றோன்றும் குத்தும் கடுங்கூர்ப் பொருள்.

முல் > முள் > முளை > முளைத்தல் >  செடி கொடி மரம் முதலிய மண்ணினின்று

மேல்வருதல். புதிது தோன்றுதல்.

( So defined for you to comprehend the basic meaning of the root word  "mul" முல்  )

(You may discover for yourself other connected words from "mul")

நேரம் கிட்டினால் மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பின்  பார்க்கலாம்.

அறிக மகிழ்க.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.


மெய்ப்பு  பின்னர்.

{இதிற் சில சொற்கள் அழிந்துவிட்டன.

தேடித் திருத்துவோம்.}

பொருள் முற்றும் சிதையவில்லை.

புரியத்தக்க நிலையில் உள்ளது.


குறிப்புகள்

( உது + ஆர்(தல்) + அண் + அம்)  -  உதாரணம்.

தரித்திரம் தரித்திரியம் வேறுபாடு:

ஓருவன் வேலையிழந்து வறுமையின் வாய்ப்பட்ட போது

அவன் தரித்திரம் அடைந்தான் என்க.  அவன் மேலும் 

வறியவனாய் பிச்சைக்காரன் ஆய்விட்டால் அது

தரித்திரியம்.  திறம் (திரம்) , திரிதல் (< திரியம்).

தரித்ததில் இன்னும் மீள் திறம் உண்டா முற்றும் 

திரிந்து அழிந்ததா என்பதுதான் கருதும் வேறுபாடு.

சிற்றூரார் சொல்வது  "~~திரியம்."

சூழ்திறத்தார்:   சூழ்திறம்.  இது சூழ்திறம் என்று வரின்

வினைத்தொகை;  பின் சூத்திறம் ஆயின்  ழ் இடைக்குறை.

பின் சூத்திரம் எனின், திரிசொல்  சூ என்பது கடைக்குறை.

சூ என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  திறம் திரமாய் ஆனது

திரிசொல். திரிசொல்லில் பகுதி போல்வது தெரியினும் அதனை

ஆசிரியர் அவ்வாறு கொள்வதில்லை.

செந்தமிழ் இயற்கை மாறிய நிலைதான் காரணம்.




வியாழன், 28 ஜனவரி, 2021

மொழிகளில் ஆர் விகுதி(suffix) இராவணன் முதல்....

 விழுமிய பீடு அணவிநின்றவன்  > வி + பீ டு+ அணன் >  விபீடணன் என்று சங்கப்புலவர் வால்மிகியார் அமைத்துக்கொண்டார்.  அல்லது தமிழ் இராமாயணம் ஒன்றிலிருந்து இப்பெயரை மேற்கொண்டார்.  இதனை நாம் முன்பு எடுத்துக்காட்டிய து உண்டு. இவை இரண்டில் எது சரி என்று இப்போது வரையறுத்தல் இயலாதது---  அது காலக்கழிவினால்(passage of time).

விழு = சிறந்த.

பீடு  =  பெருமை, பெருமிதம்.

அணவுதல் -  மேற்கொள்ளுதல்;  தொடர்பினால் அடுத்து நிற்றல்.


இராவண்ணன் என்பதன் இடைக்குறைச்  சொல்தான் இராவணன்.  ஒரு ணகர ஒற்றினை எடுத்துவிட்டால் வேற்றுலகு ஆகிவிடுகின்றது. ஆராய்ச்சியின்மை அத்துணை மோசமாகிவிடுகிறது.

இனி வான்மிகி என்ற பெயரைப் பார்க்கலாம்.

வான் -   ஆகாயம்.  வால் -  வெண்மை என்ற பொருள் இச்சொல்லுக்கு  முதுகெலும்பின்  பின்வெளிப்பாடு என்ற பொருளும் உளதென்றாலும் அப்பொருள் ஈண்டு பொருந்தாது.

வான்+ மிகு + இ >  வான்மிகி.   வானை மிக்கு  நின்ற புலவர் என்பது பொருள். இது ஒரு புனைப்பெயர். அப்புலவர் வைத்துக்கொண்டதாக வேண்டும்.

வால் மிகி என்பதும் அன்னது.   வால் தூய்மை என்னும் பொருளிலும் வரும். வெணமை மிக்கவர்,  தூய்மை மிக்கவர் என்றும் பொருள்படும். இதுவும் அப்புலவர் மேற்கொண்ட பெயராகவே அல்லது பிறர் வழங்கியதாகவே தெரிகின்றது.

இவை இயற்பெயர்கள் அல்ல.

வான்மிகி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தவர் உள்ளனர்.  அவர்களுக்கும் இப்புலவருக்கும்  தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இப்போது அறுதியிட்டு உரைத்தல் ஆகாது. அதற்குரிய பதிவுகள் கிட்டிற்றில.

தொடர்பு உண்டெனினும் அது ஒக்கும் ; இல்லெனினும்  ஒக்கும்.  எதுவும் பிழையில்லை.

மாரீசன் எனின் மரையாகிய தலைவன்.    மரை - மான்.   ஈசன் என்பது இறைவன் - இறைவர் -  ஈறைவர் > ஈஷ்வர்.

இவற்றுள் ஈறைவர் என்னும் முதல்நீண்ட வடிவம் மறைந்தது. ஆனால் முதனிலை நீண்டு சொற்கள் அமையும் என்பது இலக்கணமாதலின், இறை > ஈறை எல்லாம் ஒன்றுதான்.  பாட்டில் நீட்டும்போது வரையறை இலதாகும். பின் ஈறைவர் என்பதில் ஷ் புகுத்தி அமைத்தால், அதனால் வேறுபடல் ஒன்றுமில்லை.  வடவெழுத்தொரீஇ,    சொல்லாய் ( தமிழ்ச்சொல்லாய்) மீளுறும்.  இதனைத் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவு  படுத்துகிறது.  

உயர் > உயர்வு :  உயர்த்தி  (விகுதி மாற்றம் )  . ஒஸ்தி ஆனதுபோலும்.  வடவொலிகள் மரத்தடி ஒலிகளாய் இருந்தவை.  வடம் - கயிறு, மரம் என வேறு பொருள்களும் உள.  திரு வி.க.  நன்று கூறினார்.

பல தமிழ்ச்சொற்கள் தமிழின மொழிகளில்  வடவொலிகள் பெற்று இயலும்.

பாணினி என்ற பாணனும்  வால்மிகி என்ற அன்றுயர் பிரிவினரின்  புலவனும் மாற்றுமொழியிற் பெரும்புலமை கொண்டிலங்கினர். 

பெயரின் பின் ஆர் விகுதி பெற்று மன்பதைக்குள் மதிப்புற்றோர் ஆரியர். எடுத்துக்காட்டு:  தொல்காப்பியனார் (ஆர்);  வள்ளுவனார் (ஆர்),  இளநாகனார் (ஆர்),  சாத்தனார் (ஆர்),  இன்னும் பலர்.  உங்கள் பெயர் ஆர் விகுதி பெற்று இயலுமானால் நீங்களும்  " ஆர் + இய + அர்"  தான்!

இந்தத் தமிழ் ஆர் விகுதி உலகிற் பல இடங்களிலும் பரவி விட்டதனால்,  தமிழின் உலகத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

அறிக, மகிழ்க.


குறிப்பு:

ஆசிரியர் என்ற சொல் இடைக்குறைந்தும் ஆரியர் ஆகும்.

ஆ(சி)ரியர் - ஆரியர். ஆர் + இ + அர் : பிறர் மரியாதை செய்வதற்கு   உரியவர்.

மரியாதை:  மருவிக்  கட்டிப்பிடித்துக்கொள்ளுதல்.  சொல்லமைப்புப்பொருள்.

மரு + யாத்(து) + ஐ -   மரியாதை.  யாத்(தல்).    ரு யா >  ரியா  ஆகும்.

ஆசிரியர் - பற்றுக்கோடாக இருப்பவர்  :  ஆசு+ இரு+ இ + அர்.  இ - இடைநிலை. அர் - விகுதி.

vizhumiya means excellent. Does not mean fall.









ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மன்னித்தல் மருவிநிற்றல்

மருவுதல் என்பது, ஒன்றுபடுதல் இணைதல் என்ற பொருள்களில் அறியப்படுகிறது. தழுவுதல் என்பது இதற்கு இன்னொரு சொல்லால் தரப்படும் விளக்கம். "சங்கம் மருவிய இலக்கியம் " என்னும் வாக்கியத்தில் அவ்விலக்கியம் சங்ககாலத்துக்கு அடுத்த கால நிலைக்குரியது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்னலாம்.

 இதன் தொடர்பில் நாம் இந்த அடிச்சொற்களைக் கவனிக்கவேண்டும். மல் - ( ஒருவரை இன்னொருவர் மிக்க அருகில்சென்று கட்டிப்பிடித்து வீழ்த்தும் ஒரு விளையாட்டு அல்லது பிடியிடு போர். மற்போர். 

 மல் > மன்: இது லகர 0னகரப் போலி.இது நிலைபெறுதல் என்ற பொருளில் வரும் சொல். நிற்றல் இயலாத ஒருவன் அடுத்தவனை அணுகிப் பிடித்தோ, அல்லது ஒரு பொருளைப் பற்றிக்கொண்டோ நிற்பான். தரையில் காலை வைத்து நிற்பதிலும் நிலத்தின் துணை தேவைப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே மன்னுதல் என்பதிலும் ஒருசார் மருவற்கருத்து கரந்து நிற்பதை அறியலாம். நிலை நிற்பதெல்லாம் இவ்வாறு சார்ந்தே அமைகிறது. சார்பில் மிகுதியும் குறைவும் கூறுதல் கூடும்.  

மன் > மன்னித்தல். இது நிலைபெறுவித்தல் என்ற பிறவினைப் பொருளில் அமைந்த தமிழ்ச் சொல். மன்னித்தல்: இதுபோல், உன்னுதல் என்பதினின்று உன்னித்தல் என்பதும் அமையும். மன் > மன்று , மன்றம். பலர் கூடுமிடம். இவ்விடங்களில் பலர் அடுத்திருத்தல் காண்க. 

மன்றல் - திருமணம், இருபாலார் அடுத்திருக்கும் வாழ்க்கை. 

மல் > மரு. மருவுதல் என்பதில் மரு என்பது தவிர மற்றவை விகுதிகள். வினையாக்க விகுதி மற்றும் தொழிற்பெயர் விகுதி. 

ஒ.நோ: புல் > புரு. நல்> நறு என்பதும் காண்க. 

மன்னித்தல் என்ற சொல் மன் என்றதிலிருந்து அமைதல் காட்டும் விளக்கம் ஒன்று: இது முன்பு பழைய இடுகையில் விளக்கப்பட்டுள்ளது. https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_12.html 

பலரும் அறிந்த ஒரு திரிபு  -  ஒருவேளை மறந்தும் இருக்கலாம் -   அது:

கரு > கன் என்பது.   கருநடம் >  கன்னடம் என்பது.

நடமென்பது  நாடகம் என்றும் திரியும்:  கருநடம் > கருநாடகம் > கர்நாடகம்.

இவ்வலைப்பூவில் பொருளடக்க அகரவரிசையில் "மன்னித்தல்" காண்க. Glossary on Etymology (Pages) .

மருவி நிற்றல் என்பது இன்னொரு வகையிலும் அமையும். மரு(வி) நிற்றல் --- மருநிற்றல் > மன்னித்தல் என்றும் அமைதல் கூடும். 

புல்லுதல் - பொருந்துதல் . இச்சொல் புல் > புரு என்று திரியும். எனவே புரு > புருசு > புருசன் ( வாழ்க்கையிற் பொருந்தியவன் ) என்பது. 

புரு > புருவம் : கண்ணுடன் பொருந்தி அமைந்தவிடம். இதிலிருந்தும் கண்ணுக்குப் பொருந்தியவன் என்றும் விளக்கலாம். எல்லாம் அதே கருத்துதான். 

 புரு > புருடு > புருடன் என்றும் அமையும் 

பல வழிகளிலும் தமிழ். 

 ஒருவனை மன்னிக்குங்கால் அவனை மீண்டும் மருவிக்கொள்கிறோம். பழைமை நட்பை நிலைநிறுத்துகிறோம். அறிக மகிழ்க. 

மெய்ப்பு செய்யப்பட்டது. 

Owing to software error in Win7, the edit tool bar in this blog disappeared. Hence saved the post and published first. Now this has been edited from another device.

Will review. 25 01 2021

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனிப்போம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சிரோமணி

இன்று சிரோமணி என்ற அழகிய சொல்லின் வேர்களை அறிந்துகொள்வோம்;

இதைச் சுருக்கமாகவே அறிவோம்.

சிற  -  வினைச்சொல். சிறத்தல்.   முன்னிருந்ததைவிட இன்னும் நலமுடையதாய் ஆவதே சிறத்தல்.  சீர் பெறுதல்.

ஓ  -  ஓங்குதல்.  மிகுதல்.

மணி -  இதுவும் தமிழ்ச்சொல்.  மண்ணுதல் -  தூய்மை அடைதல். ( நீரினால் கழுவப்பட்டிருத்தல்).  உயர்ந்த (பொன்னும்) மணி(யும்)  அதன் கலப்புகளுடன் தான் மண்ணிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது.  அது மனிதனால் தூய்மை பெற்றே உயர்வை அடைகிறது.  " மணியாகிறது". மணியை ஒளிபெறச் செய்வது ஒரு தொழிலாளி.

மண்ணுதல்.

மண்ணு + இ > மண்ணி > மணி

ண் தொலைந்தது இடைக்குறை.

மண்ணுமங்கலம் என்ற பழந்தொடர் கருதுக.

சிற + ஓ + மணி

ஓமணி =  ஓங்கும் மணி. அப்பொருள் பெற்ற புத்தொளியைக் குறிக்கிறது. இவ்விடத்து இத்தொடர் வினைத்தொகை.

சிற+ ஓ + மணி =  சிறோமணி -  சிரோமணி. ஓரெழுத்து மாற்றமுற்ற சொல்.

புலவர்மணி,   கவிமணி, கலைமணி முதலிய புகழ்த்தொடர்களை உன்னுக.

மூலத் தமிழ்ப்பதங்களை ஈண்டு காட்டினோம்.


அறிக.

மகிழ்க.




வியாழன், 21 ஜனவரி, 2021

கதம்பவனக் குயில் அம்மன்.

 அம்மன் -  நாம் வணங்கும் இறைவி -   இல்லாத இடமே இல்லை ---- வானத்திலும் பூமியிலும் எவ்விடத்திலும் இருப்பவள் அவள். சிலர் அம்மன் என்ன சாதி என்று உசாவுகின்றனர்.  எல்லாமும் அவளுள்ளே அடக்கமாதலால் எல்லாச் சாதிகளும் அவளுக்குள் அடக்கம்.  அவள் அறியாத சாதி எதுவும் உலகில் இல்லை. யாவும் ஒன்றாய் அவள் ஆட்சியுள் மாட்சியாய் இலங்குகின்றது.

சுடுகாட்டில் இருக்கிறாளா என்ற கேள்விக்கு,  சுடுகாடு சுடாத காடு என்ற பேதமின்றி எங்கும் இருக்கிறாள்.  ஒரே சமயத்தில் ஓரிடத்து ஒருமையாகவும் பலவிடத்தும் விரிந்து பரந்து சிறந்தும் பன்மையாகவும் நிற்பவள் அவள். அவளால் முடியாதது ஒன்றுமில்லை.

அவள் கதம்பவனக் குயில். வண்ணப்பூக்களின் வாசக்குயில். பூவனம் சென்று பொறுமையாகப் போற்றுங்கள்.

ஜகதம்ப மதம்ப கதம்பவனப் பிரிய  வாசினி.

அவள் மலைமகளும் ஆவாள்.  சிகரத்தில் தங்குவதால்  "சிகரி" என்றும் குறிக்கப்படுபவள்.

சிகரி சிரோமணி துங்க இமாலய 

ஸ்ருங்க நிஜாலய மத்யகம்

மேவி நிற்பவள்.



புதன், 20 ஜனவரி, 2021

உனது அமைதி.

 அதோ அந்தக் கடலைப் பார்!

அது அமைதி இல்லாமல் ஓயாமல்

அலைந்துகொண்டே இருக்கிறது.

அதனுடன் போய் கலந்துவிட நினைக்கிறாயா?

நீயும் அலைந்துகொண்டுதான் இருப்பாய்.

அலுவல் ஒன்றும் உனக்கில்லை அங்கே!

உன்னை அது கண்டுகொள்ளப் போவதில்லை,

அது அலைந்துகொண்டுதான் இருக்கும்.

இதுவே இடமாகும் உனக்கு,

இங்கேயே இருந்துவிடு.

உன் அருகிலே உன் அமைதி இருக்கிறதே.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

அண் சண் சணல் முதலிய (அடுத்தல் கருத்து மூலச்சொல்)

சணல் என்ற சொல்லின் பிறப்பைச் சுருங்க அறிவோம்.

அண் >  அண்முதல்  :  நெருங்குதல்.  அணுக்கமாதல்.

அண் >  அண்டு >  அண்டுதல்  :  அடுத்துவரல்.

அண் >  அண்மை,  அணிமை  :  காலத்தால் இடத்தால் அடுத்திருத்தல். இன்ன பிற.


அண் என்பது சண் என்று மாறும்.

அண் >  சண் >  சண்டி  (சண்+தி).   அடுத்துச்சென்று அல்லது பக்கத்து இருந்துகொண்டு  ஒவ்வாதன செய்தல். சண்டித்தனம் .

அண்டு >  சண்டு  >  சண்டை :  கைச்சண்டை,  வாய்ச்சண்டை.  இவை அடுத்துச் சென்று செய்வன.

அண்டு என்பது இடைக்குறைந்து அடு ( அடுத்தல் ) ஆயினும் பொருள் மாறாது.

அடு > அடி > அடித்தல்.


இப்போது இதை அறியுங்கள்:

அண் > சண் > சணல்.

அடுத்து அடுத்து இருக்குமாறு திரிக்கப்படும் நார்க்கயிறு. அத்தகு பொருள் விளைச்சல். செடிவகை.   a hemp.

அடு > சடு > சடம்பு.

சணப்பநார்,   சணப்பை நார்,    சணம், சணம்பு என்று பல வடிவம் கொள்ளும் சொல்.

சாணைப் பிடித்தல்:  கத்தி முதலியன கூராக்குதல்.

அண் > சண் > சாண் > சாணை.

ஒரு சாண் என்பது அடுத்திருக்கும் தூரம்.  அண்> சண் > சாண்.

பழமொழி:  சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை!


அறிக மகிழ்க.

முகக்கவசம் அணிக.

மெய்ப்பு பின்.



 

சொற்பொருள் காண மூவகை

 பெரும்பான்மை உலகின் சிறந்த நீதிமன்றங்களில் ஆங்கு வழக்குக் கலை வல்ல அறிஞர்கள் மூவகை விளக்க முறைகளைப் பயன்படுத்துவர். முதலாவது ஒரு சொல்லைப் பொருளறிய வேண்டுமெனில் பயன்பாட்டுநெறியில்  அச்சொல் எவ்வாறு எப்பொருளில் வழங்குகிறதோ அவ்வாறேதான் அச்சொல்லை எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது. (Literal Interpretation)  எடுத்துக்காட்டாக, வீடு என்பது கூரை மேல் வேயப்பட்டு சுற்றுச்சுவரின் உள் இருக்கும் இடமே ஆகுமென்பது. மற்றும்  அது வீடு என்னும் இடத்துக்கு வெளியில் உள்ள திண்ணையையோ  மரத்தடியையோ பூந்தோட்டத்தையோ ஏனை அகநிலத்தையோ குறிக்காது என்று எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது. 

ஆகவே சாட்சி வீடு என்று சொன்னால் அது மேற்கண்டவாறே  கொள்ளப்படும். இதை உறுதிப்படுத்த, வழக்குரைஞர்  சாட்சி ஒரு  வரைபடத்தில் அவன் எங்கிருந்தான் என்பதைக் குறிக்கச் சொல்லவும் கூடும்.  இதன் மூலம் "வீட்டிலிருந்தான்" என்பது திட்டவட்டமாக எங்கு என்று நீதி மன்றம் அறிந்துகொள்கிறது.

இங்கிலாந்தில் ஒரு காலத்தில் விபசாரிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு நடப்புக்கு வந்திருந்தது. அச்சட்டம் விபசாரிகள் வீதிகளில் நின்றுகொண்டு தம் தொழிலுக்கு ஆள்பிடித்தலை  மேற்கொள்ளுதல் குற்றமென்று சொன்னது. இவ்வாறிருக்க, ஒரு விபசாரி ஒரு வீட்டின் சுற்றுவேலியின் உட்புறத்தில் நின்றுகொண்டு அவ்வழியிற் செல்வோரைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள்.காவல் துறைக்குத் தகவல் செல்லவே, அவர்கள் வந்து அவளைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.

அவள் தன் தற்காப்பில்,  தான் நின்றது ஒரு வீட்டின் பகுதிக்குள் என்றாள். ஆகவே அது "பொது இடமன்று. என்னைப் பிடிக்கக் காவல்துறைக்கு என்ன அதிகாரம்" என்று வாதிட்டாள்.  வீதி,  வீடு என்ற இரு பதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம்,  வீதியை ஒட்டிய வீட்டின் தோட்டப்பகுதியும் "தெரு" என்று சட்டம் சொல்லிய பகுதியினுள் அடங்கும் என்று முடித்து,  அவளைக் குற்றவாளி என்று தீர்மானித்தது.   இவ்வாறு தீர்ப்புச் செய்யாவிடில் விபசாரத்தைப் பொது இடங்களிலிருந்து தொலைக்க முயலும் அந்தச் சட்டம் வலிவில்லாமல் போய் மக்கள் பாதிப்புறுவர் என்பதால் தெரு என்பது அதனை ஒட்டிய வீடுகளின் நிலப்பகுதிகளையும் உட்படுத்தவேண்டுமென்று மன்றம் முடிவுசெய்தது. ( Mischief Rule )  

இதன்படி தெருவை ஒட்டிய நிலமும் தெருதான். இந்தச் சட்டத்துக்கு இப்படித் தீர்ப்பு.  ஆனால் வீட்டை விற்க முயலும் வீட்டுக்காரனுக்கு உதவும் நிலச்சட்டத்துக்கு அது பொருந்தாது. அவன் வீட்டுடன் சேர்ந்த நிலத்தையும் விற்கும் அதிகாரம் உடையவனே ஆவான்.

தெரு என்ற சொல்லையும் வீடு என்ற சொல்லையும் கையாளும் ஒரு சொல்லாய்வாளன் வீட்டு நிலத்தையும் தெருவில் அடக்க இயலாது. இத்தகைய வாய்ப்பு ஓர் அகரவரிசை செய்வோனுக்கோ சொல்லாய்வு செய்வோனுக்கோ வாய்ப்பதுண்டா?

தொன்ம வரலாறுகளில் "பத்துத்தலை இராவணன்" என்றால் பத்துத் தலங்களை ஆண்ட இராவணன் என்னலாமா? வேலைத் தலையில் நடந்தது என்றால் வேலை செய்யுமிடத்து நடந்தது என்பதுதான் சரி எனலாமா? "பறந்து சென்றான்" என்பதை விரைந்து சென்றான் என்பது சரியாகுமா? ( சலவைத் தொழிலன் ஆட்டுத் தலைக்குப் பறந்தது போல " என்ற பழமொழியை நோக்குக ).   ஒரு கதையில் வரும் எதையும் பொருந்தப் பொருளுரைப்பதற்கு ஆய்வாளனுக்கும் நீதிபதிக்கு உள்ளது போலும் செல்வழி உள்ளது என்று சொல்லலாம் என்று தெரிகிறது.

சொல்லின் உண்மைப் பொருளை மட்டுமே வைத்துப்  பொருள்கூறுதல் (Literal Interpretation ),   அடுத்து அப்படி மட்டுமே பொருள் கூறும்போது பொருந்தாமை நிகழ்ந்தால் உகந்தபடி பொருத்தமாய் உரைப்பது ( Mischief Rule ) ,  கெடுதலான பொருள் போதருமானால் ,1 உண்மைப்பொருள், 2 பொருந்தும்பொருள்,  3. கெடுதலான பொருளை விலக்கி உரைத்தல் ( Golden Rule )  ஆகிய மூன்றையுமே ஏற்புழிக் கையாளுதல் எனபனவற்றுக்கும்  இயற்கையிலே மொழியாசிரியனுக்கும் அதிகாரம்* உள்ளது என்று முடிப்பது சரி என்று தெரிகிறது.

அறிக் மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*விடுபட்ட சொல் சேர்க்கப்பட்டது. 21012021

 

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சொல்லாக்கத்தில் காரணம் அறிதல்.

 ஒரு சொல்லை அமைப்பதற்கு அச்சொல் அமைக்கப்படவேண்டியதன்  காரணமும் முதன்மை யானதாய் இருக்கக் கூடும். ஆய்வாளர் காரணங்களையும் அறிந்துகொள்வது வேண்டற்பாலதே ஆகும்.

பெரும்பாலான பரத்தையர் அல்லது பரத்தமையைத் தொழிலாகக் கொண்டு வாழ்வோர்,  அவ்வாறு அழைக்கப்பட்டதற்குக் காரணம்,  அவர்கள்  ஆடவர் ஒருவர்க்கு மேற்பட்டவரிடமோ அல்லது பலரிடமோ பரந்து ஒழுகியமைதான். இதனினும் விரிந்த முறையில் பலரைச் சார்ந்து வாழ்ந்து வந்த பெண்களையே விபசாரிகள் என்றனர்.  இது ஒரு சொற்சுருக்கமுறையில் எழுந்தது:  வி = விரிந்து, ப =பரந்து,  சார் -  பிறரால் ஆளப்பட்டு   ,  வாழ்ந்தவர்கள். வி+ப+ சார் + இ. = விபசாரி ஆயிற்று. பலவித ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, பிறனைத் தன்வயப்படுத்திப் பொருளைப் பெறுபவள்  வேய்+ இ = வேயி> வேசி. வேய்தலாவது இங்கு அணிகளால்,  மணம்தரும் பூச்சுக்களால் கவர்பவள். ஆயின் இந்தச் சிறப்புப் பொருள்கள் நாளடைவில் மறக்கப்பட்டு இச்சொற்கள் ஒருபொருள் எய்தின..  எல்லாவகை விலைமாதரும் மைதீட்டிக் கொண்டனர் என்று தெரிகிறது:"  மைவிழியார் மனையகல்" என்றார் ஒளவையார்.  திருக்குறள் இவ்வகைப் பெண்டிரை > "வரைவின்மகளிர்"  என்று குறிக்கும்.

எந்த வகையான குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் வந்தது என்று சிலவேளைகளில் நீதிமன்றங்கள் ஆராய்வதுண்டு.  அதை இன்னோரிடுகையில் காணலாம்.  அதிலிருந்து சொல்லமைத்தலுக்கு எதுவும் விளக்கம் அறிய முறைகாண முடியுமா என்று பார்ப்போமே.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.

வியாழன், 14 ஜனவரி, 2021

Internet outage.

From Mobile Phone: 

Dear friends

Currently Broadband (Singtel) services in our area are down .  3rd day outage.We expect to be back soon.

Gas supply is also down. A minor gas explosion

3 days ago in waterheater. Expect to be good by Sunday. 

Expect to be on track and normal soon.

Sorry for any disruption.

Please take care.


Postscript: 17012021 (from Computer:)

Internet services were restored two days ago after it was discovered the outage had caused a driver software to derecognize the Service Provider.  This was corrected soon after. Other repairs in the house were in progress.  Some lights are affected. This will be repaired soon.

Status now is normal.

Thank you reades and take care. Covid is still around.




திங்கள், 11 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்து

 நேயர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழவர்க்   கினிய  பொங்கற் புதுநெல்

உலகிற் கினிய பொங்கற் பொன்னாள்

உண்பார்க் கினிய சருக்கரைப் பொங்கல்

அன்பால் இனிய அரும்பெரு நன்னாள்.


யாவருக்கும் எங்கள்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



ரகர வருக்கங்கள் தோன்றலும் மறைதலும்.

 இடையில் ஒரு ரகர வருக்க எழுத்துத் தோன்றிச் சொல்லமைதலும் பின்பு அவ் வெழுத்து மறைதலும் பழைய இடுக்கைகளில் சிலவினில் ஆயப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை முன் கொணர்கவெனில் உங்கட்கு அது எளிதாயிருக்கும்.

உங்களுள் புதுவரவினராய் உள்ளோர்க்கு அதனை அறிமுகம் செய்யும் வண்ணம் மீண்டும் இங்குச் சில சொல்வோம்.

உ என்பது முன் என்று பொருள்படும் சுட்டடிச் சொல். அ, இ, உ என்பனவிலே உகரமும் ஒன்றாதல் இதனின்று அறிந்துகொள்ளலாம். இஃது  "து" என்னும் மிகுதிபெற்று  உது ஆகும்.  பின் உது  (முன்னிருப்பது),  அதுபின் இகரம் பெற்று உதி > உதித்தல் ஆகும். தகர வருக்கம் பெரிதும் சொல்லாக்கத்திற்குப் பயன்படுவது காண்க. இங்கு,  உது என்பதில் து;  தல் என்ற விகுதியிலும்  து+அல் என,  தகரவருக்கமே வரவுகொண்டது.

உதி என்பதே முன் தோன்றுதல் என்று பொருள்தரும் வினைச்சொல். இது எந்த இலக்கியத்திலும், காணப்பட்டாலும் படாதொழிந்திருந்தாலும் தமிழ்ச்சொல்லே ஆகும். இது பிறமொழிகளிலும் பின் புகுந்தது தெளிவு.  சீனமொழியிலும் "ஊ" என்றால் முன் உள்ளதெனற்பொருட்டு.  ஊ போ என்றால் இருக்கிறதா இல்லையா என்பது. ஹோக்கியன் கிளைமொழியில் நோக்குக.

மலாய் மொழியிலும் உள் என்பது உலு என்று வருவதும் காண.   உலு பாண்டான்,  உலு திராம்,  உலு சிலாங்கூர் எனக் காண்க. இன்னும் உலக மொழிகளில் தேடி மகிழுங்கள்.

தோன்றுதலென்பது  உது > உதி > சுதி  என,  ஒலி முன் தோன்றுதல் வரவுபெறும்.இது சுதி > சுருதி என வரும்.  தோன்றுதற் கருத்தமைவில், சுதி என்பது  பின்பு சுருதி  என இடைமிகை ஆயிற்றென்க.  கோவை என்பதும் ஒரு ரகர ஒற்றுப் பெற்று கோர்வை எனப் பேச்சுவழக்கில் காணப்படுகிறது.  அது ( கோர்வை) வழுச்சொல்லா அன்றா என்பதன்று ஆய்வு. ரகர வருக்கங்களிலொன்று தோன்றுவது இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது. மனித நாவு அப்படி இயல்கின்றது.  அவ்வளவே நாம் சுட்டிக்காட்டுவது.  இனி, சேர் என்பதும் ரகர ஒற்று இடைக்குறையும்.  சேர் > சேர்மி > சேமி. இவையே அன்றி,  குழுமி > கும்மி என்ற பிற எழுத்துக்களுகம் இத்தகு தாக்கம் பெறும்/

கருமி பண்ணுதல் :  கருமி > கம்மி  குறைத்தல்.

வானம் கம்முதல்:  கருமுதல் > கம்முதல்,  மற்றும் கம்மல்.

ரகர வருக்கம் தொலைதலும் தோன்றலும் காணலாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சனி, 9 ஜனவரி, 2021

வர்மா என்ற பட்டப்பெயர்

 வர்மா என்பதன் சொல்லமைப்பினைக் காண்போம்.

அதியமான்  ம  லையமான்  சேரமான் ( சேரமான் பெருமாள்)  என்ற சொற்களை முன்னர் நீங்கள் எதிர்கொண்டிருந்தீர்கள்.  இச்சொற்களில் வரும் ~மான் என்பது மகன் என்பதன் திரிபு என்பர்.  பெருமகன் என்பதும் பெருமான்,  ( பெம்மான் ) என்று திரியும். எம்பெருமான் என்பதும் எம்மான் ஆகும்.

மன்னர்கள் என்பவர்கள் ஓர் குலமாக வாழ்ந்து மறைபவர்கள். தாத்தா, அப்பன் பிள்ளை என அவர்கள்  அடுத்தடுத்து மன்னர்கள் ஆவர். ஆகவே  ஒரு வழியாக வருபவர்கள் இவர்கள். சிலவேளைகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் இத்தகு தொடர்வரவைக் குறிக்கக் கூடியதாய் இருக்கும்.  

(தொடர்) வரு அரசு பரம்பரையினர்,  வருமகன் >  வருமான் >  வருமா >  வர்மா என்று தங்களைக் குறித்துக்கொள்வது  அவர்களுக்குப் பெருமிதம் தரும்.  அதில் ஆண்டுகள் பல கடந்தபின்,  இச்சொற்களின் புனைவு வரலாறு மறக்கப்பட்டபின் இவை மிகுந்த உயர்வும் மதிப்பும் பெற்றுவிடும்.  இதுபோன்ற பட்டப்பெயர்கள், மரபுப்பெயர்களில்  பொருள் தெரியாவிட்டால்தான் வியந்துபார்த்துப் போற்று நிலையை  அடையும். இவ்வாறுதான் பல பெயர்கள்  உயர்வு பெற்றன.  எடுத்துக்காட்டு: காந்தி என்ற பெயர். நறுமணப்பொருள் விற்போர் என்று பொருள்படும் இச்சொல்லை பலர் பெயரில் ஒட்டிக்கொள்வதைக் காண்க.

இவ்வாறு வர்மா என்பது குடும்பத் தொடர்வரவு உடையோர் என்ற பொருள் உடையது.

சார்ந்துவாழும் பூசாரிமக்கள்,  சார்+ மான் >  சார்மா > சர்மா என்று வரும். ஓர் அரசரைச் சார்ந்து இவர்கள் பூசை முதலியன செய்து பெருநலம் பெற்றவர்கள் என்பது பெயர் காட்டுவது. முதலெழுத்துக் குறுகிய சொல்.  சார் > சர்.

chaar+maan > chaar + maa > shar maa > sharma.

இதனையும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2012/06/blog-post.html

இவை விழிப்பத் தோன்றாத சொற்கள்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.








ர்


வெள்ளி, 8 ஜனவரி, 2021

சஞ்சலம்

 மனம் ஒரு நிலைப்படாமல் இடர்ப்படுதலும் ச.லிப்பு என்றே சொல்லப்பெறும். இதன் அடிச்சொல் "சல்"  என்பது.

சல்லுதல்  - சல்லடையால் சலித்தல்

சலித்தல் -  பெரிது சிறிது வேண்டியது வேண்டாதது  என,  சிறு துளைகள் உள்ள ஏனத்தால் பிரித்தெடுத்துத் தூய்மை செய்தல். துளைப்பாத்திரத்தால் கூலங்களைச்  சரிசெய்து மேற்கொள்ளுதல். ஏற்ற துணித்துளைகளாலும் சலிக்கலாம்.

சல் - சலிப்பு:    கோபம். மனநிறைவின்மை.

சலிப்புப் பண்ணுதல் - தொந்தரவு பண்ணுதல்.

கூலத்தைத் துளை ஏனத்தில் அலைத்தெடுப்பதுபோல எண்ணங்கள் நிலையின்றி இருத்தல் .

அலை என்பதன் அடிச்சொல் அல்.  அகரத் தொடக்கமும் வருக்கமும் சகரத் தொடக்க வருக்கங்களாகும்.

அல் >  சல்>  சலி > சலித்தல்.  

இதுவுமது:  அமண் - சமண்.  பிற மற்ற இடுகைகளில் அறிக.

கவனிக்க:

அல்  > அலை

அல் >  அலம்பு.

அல் > அலட்டு

இவை ஆடுதல், அசைத்தல், முதலிய தொடர்புகளை உடையன.   அல்.- இதுவே சல் என்ற சொல்லிலும் உள்ளது. இவ் வசைவுச் சொற்கள் அவற்றிற்கு ஒப்பான மனச்செயல்களைக் குறிப்பனவாயின.   இஃது ஒப்புமையாக்கம்.

சல் > சலனம் என்பதும் இத்தொடர்பில் விளைந்ததே.  ( சல்+ அன் +அம்);

இனிச் சஞ்சலம் என்பது:

தம் + சலி + அம் =  சம் + சலி + அம் >  சஞ்சலம்.   லி e


ன்பதன் இகரம் கெடுதல்.

தம் > சம்  ( த - ச திரிபு)

சலி + அம் >  சலம் 


தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை குறிப்பது.  சம் என்பதும் அது.

மனிதன், மனம் ஆகிய இரண்டும் சேரப் பன்மை ஏற்படும்.  ஆகவே சஞ்சலம்

என்பதில் இவ்விரண்டும் தொடர்பு அறுந்த அசைவு காணப்பெறும்.. ஒருங்கியலாமை.

அறிக.  மகிழ்க.

 

  


புதன், 6 ஜனவரி, 2021

ஐஸ்வரிய அல்லது செல்வங்களின் தொகுப்பு

 செல்வங்கள் பதினாறு என்பது நம் சொற்றொகை அகரவரிசை சொல்வது. இந்தச் செல்வங்களின் தொகுதிக்கு இன்னொரு பெயர் ஐஸ்வரியம்  ஆகும் இச்சொல்லின் அமைப்பை எளிதினுணர்தற் பொருட்டு  பிற்பாகமான  "~வரியம்" என்பதை  முதலில் அறிந்துகோடல் நலம்.

மனிதன் பிறக்கும்போது கோவணமும் இன்றித்தான் பிறக்கிறான்.  " நீ என்னதான் அப்படிக் கொண்டுவந்துவிட்டாய்,  அதை நீ இழப்பதற்கு?" என்ற பகவத் கீதையின் கேள்வி பொருண்மை மிளிர்வதாகும். பிறனொருவன் நூல் துணி உடுத்திருக்க, தான் பட்டாடையில் பவனிகொள்வதானால்,  அவன்றனக்கு செல்வவரவுண்மையையே அந்நிலை குறிக்குமென்பதில் ஐயமொன்றில்லை. பிறன் சிறுதொகைத்  தாட்பணமே பயன்படுத்த,  தான் காசோலையும் கடனட்டையும் அரண்மனை போல் வீடும் உந்துவண்டியும் உடையவ னாயின் செல்வமுடையவன் என்று மதிக்கப்படலாம்.  இதுவே ஐசுவரியம் என்று மக்கள் கருதவும் தடையில்லை..இத்தகு மதிப்பீடுகளில் வேறுபடுவோரும் உண்டு.

பண்டைத் தமிழர் பெரும்பாலும்  ஆகுதல் என்ற வினையால் அமைந்த ஆக்கம் என்ற சொல்லையே வழங்கினர்.  அதனடிப் பிறந்த "ஆகூழ்"  என்ற சொல்லையே குறள் முதலிய இலக்கியங்கள் பதிவுசெய்தன. செல்வமாவது ஆக்கம். நற்பலனெனில்  அது நிலம் உடைமை,  ஆடுமாடு கன்றுகள் உடைமை என்று செல்வமுடையோர் மற்றுப் பிறரும்  எண்ணினர்.  இவர்களே  திருவுடையர்,  உரிமை பலவும் உடையார் என்ற கருத்தில்  கிழார் எனவும் குறிக்கப்பட்டனர்.  (கிழமை உடையர்,  கிழ + ஆர் >  கிழார், ).  மாடு என்ற சொல்லே செல்வம் என்ற பொருண்மையும் உடைத்தாயிற்று. கிழமை = உரிமை.

திரு வேறு,  தெள்ளியர் ஆதலும் வேறு என்று, அறிஞர்களைக் குறள் போற்றினாலும்   செல்வமுடையார் மன்பதையுள் வல்லோராகவே  நின்றனர்.

இந்தப் பாடல்வரிகள் கவனத்துக்குரியன:

செல்வமே சுக [ ......தாரம்]*

திருமகள் அவதாரம்;

உள்ளபடி செல்வம் இல்லாதவரே

உலகினிலே வாழ்வதும் தவறே

கல்லார் எனினும் காசுள்ளவரைக்

காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?  [ கம்பதாசன்]


இன்னொரு கவி செல்வங்களை இவ்வாறு நிரல்படுத்துகிறார்:

பெண்டு பிள்ளை வீடு

கன்று மாடு தனம்

பெருமையான பெரும் பள்ளம்.

கண்டு மோகம் கொண்டு.......

~~~மீளாக் கடலில் வீழ்ந்துவிடாதே...... என்று எச்சரித்தவாறே.


இங்கு  வீடு மாடு கன்று என்பவற்றைக் கவனத்தில் கொள்க.

இனிச் சொல்லியலின் படி,  ஐஸ்வர்யம் என்பதை இவ்வாறு விளக்குவோம்:

மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்றொரு பொருள் உளது.

மறத்தல் ஆகாது:

ஆக்கம் என்பதில் அகரமே முதலெழுத்து.

ஆ -  மாடு  ( செல்வம்,  கோமாதா).

இல் -  இடம்.  [  தமிழில் இல் என்பது இடப்பொருள் காட்டும் உருபு, வீடு என்றும் பொருள் உளது ]

வரு  -  வருதல் என்பதன் வினைமுதல்.  தனக்கே அன்றித் தான் பிறந்த குடிக்கு இருந்ததாயினும் அது தனக்கு வருவதாகவே கொள்ளப்படும். இது வீடும் மாடும் வருதல். அதாவது செல்வம் வருதல்.

இ -   இருந்து ( செலவாகிவிடாமல் இருப்பது ).

அம் -  அமைதல் குறித்த விகுதி. [ சொற்கள் பலவினிலும் சில விகுதிகள் பொருளிணைந்தும் சில பொருளின்றி வெற்று இறுதியாகவும் உள்ளன ].

ஆ + இல் + வரு + இ + அம்.

இது:

ஆ + இஸ் + வரி + அம்

. ஐஸ்வர்யம்  ஆகும்.

இங்கு:

ஆ -  ஐ எனத் திரிய,

இல் > இஸ்  ஆனது.

வரு + இ > வரி  ஆனது.

ஆகாரத்தில் ( ஆ என்று) தொடங்கும் சொற்கள் அகரமாகவும் திரியும்.  எளிதான எடுத்துக்காட்டு:

ஆங்கு > அங்கு.

ஆன் (ஆண்பால் விகுதி )  >  அன்  ( ஆண்பால் விகுதி ).

ஆவல் >  அவா.

ஆப்பம் <> அப்பம்

ஆடு மாடுகள் வைத்திருந்தோர் ஒரு காலத்தில் தம் சொத்தால் உயர்ந்து நின்றனர். அன்ன புகழ் அவ்வழி வந்தோர்க்கும் உரித்தாயிற்று.

ஆயர் > ஐயர்.   ஆ> ஐ.

ஆரியர் என்ற சொல்லும் ரி (ரிகரம்) குன்றி ஆயர் என்றாகும்.

செல்வம் வெவ்வேறு குடிகளை வெவ்வேறு சமையத்தில் மேலேற்றிக் காட்டியது.  அரசன் போர்நடவடிக்கைகட்கு அவர்கள் உதவிநின்றும் பங்குகொண்டும் வெற்றியில் களித்தும் தாமடைந்த நிலைகளைத் தமவாக்கிக் கொண்டனர். 

பூசை முதலியவற்றில் செல்வமுடையார் இன்றளவும் முன்னிலை வகிக்கின்றனர். "மரியாதை" பெறுகின்றனர். பொறாமைப் படுவதற்கு ஒன்றுமில்லை. அன்னதானத்துக்கு இரண்டாயிரமோ மூன்றாயிரம் சிங்கப்பூர் வெள்ளி செலவானால்,  அதை அவர்கள் கொடைசெய்கின்றனர். இவ்வுலக வாழ்வில் ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால்,   இதன்மூலம் தீயகருமவினை விலகும் என்பது உண்மை.  வந்து உண்போருக்கும் கருமவினை தீரும் என்பதும் பொய்யில்லை. ( முன்செய் தீவினை மிக்கிருப்பின் முழுமையும் நீங்காமல் சிறுபாகமே நீங்கினாலும் ஒரு பேறுதான், அடிபட்டுச் சாகவேண்டியவன் இயற்கை மரணம் எய்தல் உதாரணம் ).

ஐயப்ப சாமிகள் செய்யும் தானங்களும் இதன் பொருட்டே. சங்க காலத்தில் வானொலி அலைகளை மக்கள் அறிந்திருக்கவில்லை,  கண்ணுக்குத் தெரியாததெல்லாம் இல்லை என்பது மடமை. எமது சிவஞான போத உரையை இங்கு வாசித்தறிக.

ஐஸ்வரியம் யாதென அறிக. மகிழ்க

 தட்டச்சு மெய்ப்பு - பின்னர்.




.

திங்கள், 4 ஜனவரி, 2021

சண்டாளர் என்போர் யார்

 இன்று சண்டாளன் என்ற சொல்லினை அறிந்தின்புறுவோம்.

சண்டாளன் என்பவன் ஓர் இறைவணக்கத் தொழிலுடையார் பெண்ணுக்கும் பிற குலத்திற் பிறந்த  ஆண்மகனுக்கும் பிறந்தவன் என்று பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.   ஆபிடியூபா முதலான அறிஞர்களும் இச்சொல்லை ஆய்ந்துள்ளனர். நாம் இச்சொல்லை சில ஆதாரங்களுடன் காண முற்படுவோம்.

இச்சொல்லில் உள்ள " ஆளன்" என்ற சொல் உண்மையில் இது  தமிழில் உண்டான ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றது.. பண்பாளன் என்ற சொல்லில் ஆளன் வருவது போலவே இங்கும் வந்துள்ளது.    ஆளன் என்பதைப் பிரித்தெடுக்க, முன் இருப்பது  சண்டு என்ற சொல்தான்.

சண்டி, சண்டு என்பna இடக்குகள் செய்தலைக் குறிக்கிறது. கடுங்கோபமுடையவன்,  சண்டன் எனப்பட்டான்.  ஒருவேளை இத்தகு பிறப்பில் வந்தோரை இழிவாக நடத்தியதால் அவர்கள் கோபக்காரர்களாய் மன்பதைக்குள் வளர்ந்து திரிந்தனர் என்றும் நாம் எண்ணலாம். இவர்களை எமனுக்குப் பிறந்தவர்கள் என்று பிறர் பழிப்பது வழக்கமாய் இருந்தது என்று எண்ண இடமுண்டு.

பெரும்பாலும் சண்டைகள் அண்டையிலிருப்போரிடையே தாம் பெரிதும் ஏற்படுகின்றன. இன்றும் இது உண்மை. தென் கிழகாசியாவில் உள்ள ஒருவருக்கு ஆர்க்டிக் துருவவாசியுடன் சண்டை ஏற்படும் வாய்ப்பு இன்றுமே மிக்கக் குறைவுதான்.  சண்டை என்ற சொல்லை அமைக்குங்கால் அண்டையில் இருப்போரிடை ஏற்படுவதென்பதை மொழி ஆக்கியோர் நல்லபடி கவனித்துக்கொண்டுதான்  செய்துள்ளனர். சொல்லியலின்படி,  அண்டு > அண்டை > சண்டை  என்று  வருவது ஏற்புடையதே  ஆகும். அகர வருக்கம் சகர வருக்கமாய்த் திரியும்.   நீர் ஆடும் அல்லது உள்ளிருக்கும் கலம் ஆடி > சாடி ஆனது.  அடுப்பில் அட்டு ( சமைத்து ) உணவு செய்யும் கலம்  அட்டி > சட்டி ஆனது, அமணர் சமணர் ஆனார். ஆ என்று வாயைப் பிளந்து இறப்பதால் ஆ> சா என்று வந்ததா என்பது  ஆய்வுக்குரியது  ஆகும்.  ஆ > சா.   " நான் வாயைப் பிளந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளை யார் பார்ப்பது ?"  என்பது பேச்சு வழக்கில் வரும் வாக்கியம். இதுவரை சாய் > சா என்பதே சொல்லியலார் தெரிவித்திருப்பது ஆகும். அகர சகரத் திரிபுகள் பழைய இடுகைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  ஆங்குக் காண்க.

ஒருவனை அண்டி இருந்துகொண்டு அண்டினவனையே ஆள நினைப்பவன் அண்டு ஆளன் அல்லனோ?  அது முனையும்கால் அவன் இடக்கு மடக்குகளும் செய்வான்.  எனவே அண்டு ஆளன் என்பதே சண்டாளன் என்றானது. பெரிதும் ஒரு பூசாரியை அண்டி இருந்துவிட்டு பூசாரியின் மகளை அடைந்துவிட்டுப் பிள்ளை பெற்றுக்கொண்டமையினால் பிறந்த மகற்குச் சண்டாளன் என்று பெயர் வருதல் ஒன்றும் வியப்புக் குரியதன்று.

இவர்களிற் சிலர் நாய் வளர்த்துக்கொண்டு அதற்குச் சமைத்து உணவு கொடுத்தனர் என்று தெரிகிறது. இவர்களுக்கு "நாய்க்கெரிப்போன்" என்ற பெயர் வந்தது. இது கடைக்குறைந்து "நாய்க்கெரி"  என்று வரும்.  இதை மேலும் தொடராது விடுவோம். நாய்க்கெரிகளும் சண்டாளரே ஆயினர்/

சண்டாளர் என்ற பகுப்பினில் வந்தோர் பிறர் உளர். பின்பொருநாள் காண்போம்.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 3 ஜனவரி, 2021

குடம்பை

 குடம்பை தனித்தொழியப் புள்பறந்  தற்றே... என்பது ஒரு திருக்குறட் பாவின் முதலடி ஆகும். குடம்பை என்றால் கூடு என்று பொருள். இச்சொல்லுக்குப் பிற பொருட்களும் உள.

 இச்சொல்லில் குடு என்பதே அடிச்சொல்.

குடு  > குடும்பம்.

குடு >  கூடு

குடு > குடி

குடு >  குடகம். இச்சொல்லுக்கு நாடு என்று பொருள்.  உயர்திணைப் பொருளாயினும் அஃறிணைப் பொருளாயினும் சேர்ந்திருத்தல் என்பதே இவ்வடியின் அடிப்படைப் பொருள்  இவ்வடிக்கு வளைவு என்ற பொருளும் உளது. எடுத்துக்காட்டு:  குடா - குடாக்கடல். குடம் :  வளைவுப்பொருள்.  கும்பகோணத்துக்கு குடந்தை என்ற பெயருமுண்டு. இச்சொல்லுக்கும் வளைவு என்பதே அடிப்படைப் பொருள்.

கூடு என்பதும் ஒரு சிறு கொள்கலம் ஆகலாம்.  குடம்பை என்ற சொல்லை  குடம்+ பை என்றும் பிரிக்கலாம். குடம்போலும் பை,  குடமாகிய பை என்று பொருள் கூறுதலும் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் புணர,  குடப்பை என்று வரும். குடம்+ பாம்பு = குடப்பாம்பு என்பதுபோல. எனவே:

குடு + அம் + பை என்பதே குடம்பையானது.   அம் இடைநிலை. பை என்பது விகுதி என்றறிக.


மெய்ப்பு  பின்.

சனி, 2 ஜனவரி, 2021

PHONE-ன் INTERNAL STORAGE இனி FULL ஆகாது | How to Fix Phone Storage Prob...

கெடுதலிலும் நன்மை காணும் நன்னம்பிக்கை - தமிழர்பண்பாடு

 சங்க காலத்திலும் அது மருவிய காலத்திலும்,  தமிழர் கெடுதல் அல்லது தீமை எள்ளளவும் கலவாத வாழ்க்கையை உன்னி வாழ்ந்தனர் என்று நம் இலக்கியங்கள் சாற்றுகின்றன. அவர்கள் ஒரு மேலான இனமாக வாழ முற்பட்டனர். இக்காலத்தில் தமிழரல்லாதார் பண்பாட்டுக் கூறுகள் யாவை என்பதைத் தமிழிலக்கியம் பெரிதும் காட்டவில்லை. பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு  ஆதலின் அவர்கள் அத்தகைய செய்திகளைத் தம் இலக்கியத்திற் பெரிதும் பதிவு செய்திட்டிலர் என்பதே சரியாகும். தம் மேலான பண்புகளைக் கூறியவிடத்தும் பிறர்தீமை சொல்லாதமைதலே சான்றாண்மை ஆகும்.


பிற தேயத்து மன்னன் ஒருவன் சாலச் சிறந்த பண்புகள் உடையனாய் இருந்தான் என்பதனால் தமிழர்கள் அவனைச் "சாலமன்" என்று அழைத்தனர்.  சாலமோன் எனினும் ஆகும்.   மன் என்பது மன்னன் என்னும் பொருளது.  மோன் என்பது மகன் என்ற சொல்லின் திரிபாகும்.  தாம் சான்றாண்மையுடன் திகழ்ந்தது மட்டுமின்றிப் பிறதேயத்தார் சிறந்த பண்புநலன்கள் உடையாராய்த் திகழ்ந்த காலையும் அவர்களை மெச்சி நலல பெயரை அவர்கட்கு வழங்கத் தமிழர்கள் பின்வாங்கியதில்லை. மேலும் வாசிக்க:-


வறுமை என்பது கொடியது.  கற்றுவல்ல  சான்றாண்மை மிக்கப் புலவர்மாட்டும் வறுமை வந்துற்று அவர்கள்தமை வாட்டியதுண்டு. யாருமற்ற ஏழையும் அவ்வாறு வாடுதல் உண்டு. இவர்கட்கு வந்துற்ற வறுமையைக் கண்டு இவர்களை ஒருபோதும் இகழாமை கடைப்பிடித்து, இவர்களை " நல்கூர்ந்தார்" என்று தமிழர் சுட்டினர். இதை நல் என்ற அடைமொழி கொடுத்துத் தமிழர் குறித்தனர். இஃது மொழியினுள்ளே அமைந்து கிடக்கும் பண்பாட்டுக் கூறு ஆகும். நல்குரவு என்ற சொல்லையும் காண்க. கெட்டுப்போன நிலையையும் நல்ல என்ற அடைகொடுத்துக் குறிப்பவன் தமிழன். கெட்டது விரைவில் நல்லதாகவே மாறிடுதல் வேண்டுமென்பது அவன் தன் இறைவனை நோக்கிய வேண்டுதல் ஆகும். 

இவ்வாறே கெட்டுபோவதை அவன் நந்தல் என்றான்.  நன்மை+ து + அல்  என்று இதன் அமைப்பினைக் கூறினும் நல்> நன் > நன் து >  நந்தல் என்று கூறினும் அதுவே ஆகும். இது நல் தல் ஆகும், நன்றல் > நந்தல் எனினுமது. நன்மையை நினைக்க; தீமை விலக்குக என்பது தமிழர் கொள்கை.  கொடிய விடப்பாம்பையும் நல்ல பாம்பு என்பான் அவன்.

கம்பனும் சீதையை " நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கை" என்று வருணித்துள்ளமை காண்க. பிறனிடத்து அடைபட்டு வாடியவிடத்தும் நன்மையே கூறினான் கம்பன். அவன் புலமைக்கண் சான்றாண்மை பளிச்சிடுகின்றது காண்க.

அறிக மகிழ்க.

பெய்ப்பு -  பின்பு.


நகர் உலா

 தந்தையுடன் நகர் சுற்றிப் பார்த்த ஒரு பிள்ளை சொல்வது

போலும் இக்கவி:


உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து

தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த

சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட

ஒருநகர் முற்றும் வசம்'


தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி

இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்

செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்

கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.

உந்துவண்டி  -   ( கார்).

சிறுநகை -  புன்னகை

சுட்ட - காட்ட  (சுட்டிக்காட்ட)

நன்கு நோக்கா  -  நல்லபடி பார்க்காத

செல்வார் -  கடந்து போகிறவர்

வருவார் -  (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)

வருபவர்

கையசைக்க - (குழந்தையைக் கண்டு)  தம் 

கரங்களை  ஆட்ட 

மெல் - மென்மையான

என் பால்  -  என் மேல்

வாஞ்சை -  அன்பு



வெள்ளி, 1 ஜனவரி, 2021

2021 புத்தாண்டு வாழ்த்து விளக்கம்




வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.



வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே -
இருபது இருபத்தொன்றே வருக நீயே.

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே
நீ இனிய ஆண்டாக  நல்ல ஆண்டாக விரிவுகொள்வாய்

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்
- சூரியன் ஒரு சுற்றை முடித்துவிட்ட மீண்டும் தொடங்க
இப்போது பக்கத்தில் வந்துவிட்டான்.
இரவி -  ரவி :  சூரியன்.
இருள் அவி > இர் அவி > இரவி  ஆயிற்று. இருள் என்பதில் இர் 

சுற்றார்ந்து - சுற்றை  நிறைவு செய்து.

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை
பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

எல்லா இனிய உயிர்களும் வளர்ச்சி பெற்று 
நன்மை அடையவேண்டும் என்று ஆசிகளை
உதிர்த்து நிலைபெற்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

உலகத்து வெம்மை பெருகிவிடாமல் நாம்
அதைக் காத்திடுவோம்.

{  உலகம் வெப்பமயம் ஆதலைக் காக்கவேண்டும்.
வேறு வெம்மைகள் தொடர்பு அற்றவை }  

அறிவாழ்வில் -  நாம் அறிந்த இந்த வாழ்வில்.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

நமக்கு அரிதாய்க் கிடைக்கப்பெற்ற அரிய தாய்மாரும்
தந்தைமாரும்  உறவினர் நண்பர்களும்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.

மக்களும் நன்கு ஒளிவீச்சுப் பெறுக.


 இப்பாடலின் பொருள் மேற்கண்டவாறு.




வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021

 இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள்  எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம்  பிறங்க  நன்றே.



 

செவ்வாய், 29 டிசம்பர், 2020

இன்று செவ்வாயா வெள்ளியா?

 செவ்வாயெது  வெள்ளியெது  தெரிய வில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ?

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட,

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை!

இன்றுநேற்று  நாளையெலாம் கையின் பேசி

செவ்வையாகச் சொல்லுவதால் குழப்பம் இல்லை!

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர்.


அரும்பொருள்:

செவ்வாய் எது -  எது செவ்வாய்க் கிழமை?

வெள்ளி எது -  எது வெள்ளிக்கிழமை?

தெரியவில்லை -  தான் தெரிந்துகொள்ள முடியவில்லை

சேவைகளை  வீட்டினின்று  புரிவ தாலோ? -  கோவிட் என்னும்

மகுடமுகி நோயின் காரணமாக நாம் இப்போது வீட்டிலிருந்து

அலுவலக வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோமே,

அதனால் தானோ? 

ஓளவைசொலும் இடும்பைகூர் வயிறுண் டேனும் =  நமக்கு ஒளவைப்பாட்டி உணர்த்திய  பசி என்னும் துன்பத்தை ஏற்படுத்துகின்ற ஊணடை பை இருந்தபோதிலும்

அதற்காவிச் சூட்டுணவு அகத்துள் கிட்ட  - அந்த வயிற்றுக்கு  ஆவி பரியும் சூடான உணவு வீட்டினுள்ளே கிடைப்பதால்;

எவ்வகையில் நோக்கிடினும் இடரொன் றில்லை! -  எப்படி ஆய்ந்தாலும் நமக்குத் துன்பம் ஒன்றுமில்லை;

இன்றுநேற்று  நாளையெலாம் -  இன்று என்ன கிழமை , நேற்று  என்ன கிழமை, நாளை என்ன கிழமை,  மற்றும் தேதி மாதம் என்பவெல்லாம்;

 கையின் பேசி  -  நமது கையின் அகலாத கருவியாய் உள்ள கைப்பேசி,

[கைக்குள் நிரந்தர இடம் பிடித்துவிட்டது என்பது தோன்ற கையின் பேசி என விரிக்கப்பட்டது;]

செவ்வையாகச் சொல்லுவதால் -  தவறாமலும் தடுமாறாமலும் சொல்லுவதனால்,

குழப்பம் இல்லை! -(  அதிலிணையும் வரை குழப்பமே அன்றி)  அப்புறம் ஒரு குழப்பமும் இருத்தலில்லை;

செந்தமிழால் என்றுமினி இணைய வாரீர். -  என்றுமே நல்ல தமிழில் இணைந்திருங்கள்,  ஆங்கிலத்திலோ பிறமொழியிலோ சொல்லாமல் தமிழாலே நாட்களைச் சொல்லுங்கள். -  வீட்டிலிருக்கையில்.

இன்று செவ்வாய் Tuesday   அப்புறம் இரண்டு நாள் செல்ல வெள்ளி Friday என்று கைப்பேசியே மொழி ஆசிரியர் ஆகிவிடுகிறது.

கிழமை எது என்று தெரியாவிட்டாலும் கிழமை என்ன என்று தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கைப்பேசி. தினக்குழப்பம் மொழிக்குழப்பம் எல்லாம் தீர்த்துவைக்கும்.

என்றவாறு.


 











திங்கள், 28 டிசம்பர், 2020

ஊரார்வீட்டு நெய்யும் பெண்டாட்டி கையும். அது கருணை.

 எள்நெய் என்ற சொல்லைத்தான் மக்கள் திரித்து உளைத்து ( = உச்சரித்து) எண்ணை என்று மாற்றிக்கொண்டனர்.  கொஞ்ச நாள் கடைக்காரர்களும் எண்ணை என்றே அச்சடித்துத் தம் புட்டிகளில் ஒட்டினார்கள்.  அது சரியன்று  என்று தமிழ்வாத்திமார் எதிர்த்ததனால் இப்போது மீண்டும் நல்லெண்ணெய் என்று எழுதத் தொடங்கினர். இதில் நமக்கொன்றும் உளைத்தல் ( வெறுப்பு )  இல்லை. நாம் இங்குக்  கண்டுகொள்ள விழைவது என்னவென்றால், நெய் என்பது ணை என்று மாறிவிடத் தக்கது என்பதுதான்.

ஓர் ஊரில் ஒரு மனைவி, அவள் கணவன் சாம்பாரும் சாதமும் சாப்பிடும் போதெல்லாம் அவன் நெய் கேட்டுத் தொந்தரவு செய்வானாம். அவனுக்குத் தினமும் வேண்டுமென்பதற்காக மனைவியானவள் கொஞ்சம்தான் சோற்றில் போடுவாளாம்.  மீண்டும் கேட்டால் அவளுக்குக் காது கேட்காது!  அடுக்களைக்குள் போய்விடுவாள்.

ஒருநாள் நெய் முற்றும் தீர்ந்துவிட்டது.  அடுத்தவீட்டில் போய் நெய் கேட்கவே, அந்த வீட்டுக்காரர்கள் நெய்யைப் புட்டியுடன் கொடுத்துவிட்டனர். நிறையவே இருந்ததாம்.  மனைவியானவள் அதைக் கொண்டுவந்து, அன்று தன் கணவனுக்குப் "போதும் போதும்" என்று சொல்லுமளவுக்கு நெய்யை உருக்கி ஊற்றினாளாம். அதே நெய்யில் வறுத்த முருங்கை இலைகளை வேறு அன்புடன் பரிமாற, அவற்றையும் சோற்றில் பிசைந்தபடி அன்றைத் தினம் நன்றாகச் சாப்பிட்டானாம்.

அப்போது அவ்வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மூதாட்டியும் அங்கு வந்து சேர்ந்தாள்.  ' எப்படிச் சாப்பாடு?"  என்று அவள் வினவ,  "ஊரார் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்று சொல்லிக்கொண்டு, கணவன் எழுந்து கைகழுவ மகிழ்ச்சியுடன் சென்றானாம்.

தன் சொந்த நெய்யாய் இருந்தால் அது பாராட்டுக்குரிய நெய் என்னலாம். இது அடுத்தவீட்டு நெய்யாயிற்றே.  அது கருப்பு நெய் என்றுதான் சொல்லவேண்டும். பொறுப்பில்லாத மனைவி கருப்பு உள்ளத்துடன் கணவனுக்கு இட்ட கருநெய்.    இது  எள்நெய் எண்ணை ஆனதுபோல் கருநெய் கருணை ஆகி,  சாம்பார் சோற்றில் அதிகமாகவே கலந்துவிட்டது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? கணவனுக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லாமல் போய்விட்டது.

கணவன்பால் மனைவிக்கு வந்த கருணைதான் என்னே!

கை என்ற சொல்லும் கர் என்று திரியும். இந்த இடுகையை வாசித்துக் கொள்ளுங்கள்.  கர்+ அம் = கரம். 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

அந்தப்பெண்டாட்டி தன் கரத்தால் பரிமாறிய நெய் ஆதாலால் அது  கைநெய் என்று பொருள்படும் கர்நெய் தான். கர்நெய் அப்புறம் கர்ணை,  கருணை  என்று மாறியிருக்கும்.  இந்த நிகழ்ச்சி மிகப் பழங்காலத்தில் நடந்ததனால் இதை உங்கள் ஆய்வுக்கே விட்டுவிடுகிறோம்.


தொடர்புடைய வேறு இடுகைகள்:

தனிமையில் கிடந்து இறந்தவர்கள் 

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_85.html

வீரியம்  https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_24.html

கைகேயி  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_15.html


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்



ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ப - சில சொற்களில் பரவற் கருத்து.

 ஒரு சிறுபிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, ஒரு சொல்லின் எல்லா எழுத்துக்களையும் வாசித்தபின்னரே அச்சொல்லின் பொருளை அப்பிள்ளை உணர்கின்றது. இதுவே வாசித்துப் பொருளுணர்தற்குப் பொருத்தமானது ஆகும். ஆனால் சொல்லின் ஆதிப்பொருளை அல்லது ஆக்கப் பொருளை உணரவேண்டுமானால்  -    அதாவது சொல்லாய்வில் ஈடுபட வேண்டுமானால் -  அதன் முதல் ஒன்றோ இரண்டோ எழுத்துக்களை நோக்கினால் அது புரிந்துவிடுகிறது. அது எப்படி என்று நீங்கள் கேட்கவேண்டும். ஏனெனில் நாம் காண முற்படுவது ஆதிப் பொருண்மையையே. சொற்களைப் பிறப்பித்தோர், ஓர் அடிப்பொருளை அடைந்தே சொல்லின் உருவாக்கத்தைக் கண்டறியத் தொடங்கினர் . மாறாக,  பெரும்பாலும் ஒரு சொல்லை முன்வைத்துக்கொண்டே அச்சொல்லின் தோற்றத்தை முழுமையாக அறிந்துவிட முடிவதில்லை.  ஒரு சொற்குடும்பத்தையே ஒருசேர நோக்கித்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

உலகில் பொருள்கள் பலவும் பல்வேறு உருவில் உள்ளன. சில உருண்டையாய் உள்ளன.  சில சப்பட்டையாய் ( இடப்பரவலாய்) உள்ளன. இன்னும் உருவங்கள் பல. இடப்பரவலாய் உள்ள உருப்பொருளும் உருவற்ற பொருளும் பற்றிய பல சொற்களும் பகரத்திலே தொடங்குதல் காணலாம்.  இதனைச் சில எடுத்துக்காட்டுகளால் நாம் உணரமுடிகிறது.

பரமன்   -  பர  -  எங்கும் பரவலாய் உள்ள ஆனால் காணவியலாத உலகாளும் ஒரு பொருள்.  [  பர என்ற இரண்டு எழுத்துக்களை அறிந்தவுடன் சொல்லின் ஆக்கம் தெரிந்துவிடுகிறது ]

பலகை -   பல  -   சப்பட்டை நிலையில் உள்ள ஒரு மரப்பொருள். இடப்பரவல். காரணம் ஆய்ந்தாலே தெரிகிறது.

பனி  -  பன் -  பரவலாக வான் தெளிக்கின்ற சிறு குளிர் திவலைகள்  

பலி    -   பல் -  ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைப் பலவிடங்களிலும் கொல்லும் முறை.  ( இடப்பரவலும்  செயற்பரவலும் காலப்பரவலும் )

 (ஆறிலும் சாவு, நூறிலும்  சாவு -  பழமொழி).இது காலப்பரவல்.

பரிப்பெருமாள் -  பரி -  எங்குமுள்ள பெருமாள். இடப்பரவல், காலப்பரவல்.

பர > பரி.  பரி என்பது குதிரையையும் குறிப்பதால் குதிரையில் வரும் பெருமாள் என்றும் கூறுதல் உண்டு. இது கடவுள் தன்மையை விளக்காமல் ஒருவாறு தொன்மப் பாணியை முன்வைக்கிறது.

பரிபாடை   பரவலாக பயன்படுத்தப் படும் பேச்சு.

பரணி -பர.  மேலே இடப்பரவலாக அமைக்கப்படுவது.

பார்  - பரந்த இவ்வுலகம்   (வியனுலகம்)

பார் (<   பர )

பஞ்சு  பறந்து ( பரந்து)  பரவும் மெல்லிய பொருள்

ப > பர் > பர > பார்.

பர் > பல்.

பல் > பன். இவ்வாறு அடிச்சொல்லும் திரியும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்பு.

பரந்தாமன்.

"   அத்துவித வத்து " என்ற தொடரைவைத்துப் பாடினார் தாயுமான சுவாமிகள். அத்துவிதமென்பதற்கு நேரடியான இன்னொரு தொடர்:  அத்வைத வஸ்து என்பதாகும்.கடவுள் வேறு மனிதனாகிய "நான்"  வேறு உணர்வோமானால் அது துவைதம் என்பர். 

கடவுளும் நான் என்னும் மனிதனும் ஒன்று என்போமானால் அது அத்வைதம்  ஆகும்.  இரண்டல்லாத ஒருமைநிலை அதுவாகும். இயேசு கூறிய நான் கடவுள் என்ற கொள்கை உண்மையில் நமது வேதங்கள் கூறிய அத்வைத (வேதாந்த)மே ஆகும். இக்கொள்கையை அவர் இந்தியாவிற்கு வந்து சொல்லியிருந்தால் யாரும் அவரைக் குறுக்கையில்* அறைந்திருக்கமாட்டார்கள் என்று நாம் திடமாகச் சொல்லலாம்.

கடவுள் பேரான்மா  அவர்போலவே அமைந்த  நாமோ  ஒவ்வொருவரும் ஒரு சிற்றான்மா.  கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாற்றல் அல்லது ஒன்றைச் செய்து உருவாக்கும் ஆற்றல் உள்ளோனாய் இருப்பதற்குக் காரணமே நாம் கடவுளிலிருந்து போந்ததே ஆம்.

கண்ணன் ஓர் அவதாரம் அல்லது தோற்றரவு என்பதே மகாபாரத நூல் கூறுவது.    இதையும் தாண்டி அவரே கடவுள் என்பது கருத்து. தாமே கடவுளும் ஆனவர் - பரந்தாமர்.

இப்போது பரந்தாமன் என்ற சொல்லை ஆய்வோம்.  இச்சொல்லில் பரம் என்ற சொல்லும் தாம் என்ற சொல்லுமிருப்பதால்,  அவர் தாமே பரம் ஆகிறார். பரம் என்பது கடவுள் எனற்பொருட்டு.  தாம் என்பது தாம் என்று நாம் பயன்படுத்தும் சொல்லே ஆகும்.  தாமே பரம் என்ற சொற்றொடர்,  பரம் தாம் என்று மாறி அமைந்தது. இது அன் விகுதி இணைந்து  பரந்தாமன் ஆகிற்று,  இஃது முறைமாற்று அமைப்பு.

பரம் + தாம் + அன் = பரந்தாமன் 

வேறு பொருள்:  பரந்த ஆகாயத்தில் உள்ளவர்.  பரந்த + ஆம்+ அர்.  ஆம் என்பது ஆகாயம் என்பதன் இடைக்குறை.  ஆகும் என்பதன் தொகுப்பும் ஆவது இச்சொல். அன். அர் என்பன ஆண்பால் பலர்பால் (உயர்வுப் பன்மை ) விகுதிகள்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 *  குறுக்கை -  சிலுவை என்பதற்கு இன்னொரு பெயர். இச்சொல்லுக்கு குறுக்கை என்பதை ஞா.தே, முதலிய அறிஞர் வழங்கினர்.  குறுக்கை என்பதன் பழைய பொருள் வேறு சில.