இச்சொல்லை இன்று அறிவோம்.
முன்னர் வெளியிட்டது இதுவாகும்:
https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_72.html
முன் எழுதியது இவ்வாறாயினும், அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் ஒரு சொல்லுக்கு எழுதினால் குழப்பம் உண்டாகுமென்பதனால், ஒன்றே வெளியிட்டோம். சில சொற்கள் உண்மையில் பலபிறப்பிகளாக இருப்பனவாதலால், யாம் சிறந்தது என்று கருதும் இன்னொரு கருத்தையும் இன்று வெளியிடுகிறோம்.
இது சீர்க்கு + இறும் > சீர்க்கிறும் > சீக்கிறம் என்றாகி, சீக்கிரம் என்பதாகும்.
இச்சொல்லில் ரகர ஒற்று மறைந்தது.
இன்னொரு சொல்லமைப்பில் புகுந்த காலை, றகர மாவது, ரகரம் ஆகிவிடும்.
இத்தகைய திரிபு பல சொல்லாக்கங்களில் வந்துள்ளது. அதை வேறு சில இடுகைகளில் யாம் சுட்டிக்காட்டி யுள்ளோம். கண்டு தெளிக.
சீர்க்கு இறும் என்னில், சீரை அடைந்து முடியும் என்பதுதான். இதில் வரும் இறும் என்ற சொல் முடியும் என்ற வினைமுற்று. இங்கு இது புதிய சொல்லின் இறுதிப் பகவாக வருகிறது. பகவு என்றால் சொல்லமைப்பின் இன்னொரு பகுதி என்ற பொருளில் எழுதுகிறோம் என்பதறிக.
இரும்> இரம் என்று திரிவதாகக் காட்டினும், இருக்கும் என்ற பொருளில் சரியாகவே வரும் என்பதறிக
அறிக் மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
பகிர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக