ஒன்றைச் செய்ய விழைந்தவன், அவ் விழைந்த செயலின்பால் மனத்தைச் செலுத்தாமலும், உடல்முயற்சி செய்யமலும் அக்காரியத்தை செய்து முடிப்பனாயின் அவன் அதனை இலாவகமாகச் செய்து முடித்தான் எனல் சரியாகும்.
இப்படிச் செய்து முடித்தால், ( மனமுயற்சியும் செயல்முயற்சியும் இல்லாமல் முடிப்பீரானால் ), உண்மையில் அதைத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.
எளிதாக்கம், நுணுக்கம் காட்டுதல், சாதுரியமாகச் செய்தல், சீருடன் முடித்தல் என்று பலவாறும் கூறலாம்.
இனிச் சொல்லைப் பார்ப்போம்.
இலா+ அகம் > இலாவகம்.
உள்ளிருந்து வெளிவந்து செயலைச் செய்ய உதவுவது: மனத் திட்பம் மட்டுமன்றி, உடலின் கைகளின் ஆற்றல் முதலியவையும் தாம். மனவலிமை மட்டுமின்றி உடல்வல்லமையையும் இது உளப்படுத்தும் என்பதறிக.
இற்றை நிலையில் செயலகத்தில் பணி செயவதில் திறமையானவர், வெளியிடங்களிலும் அவ்வாறு திறமை காட்டினால் அவர் செயலும் இலாவகம் என்று கொள்ளப்படுதல் கூடும். செயலகம் இல்லாதவிடத்தும் மனத்திட்பத்துடன் பணிபுரிவது.
(1) இலகுவாக, (2) இலாகுவாக என்றும் வழங்குவதாகத் தெரியும் சொல் இது.
இல் என்பதும் இலா என்பதும் ஒன்றுதான். இல் அகு, இலா அகு, இலா அகு அம், இவை ஒன்றுதாம். சுருக்கி எழுதவும் விரித்து எழுதவும் இயலும் மொழி தமிழ். இது ஒரு வசதி ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக