செவ்வாய், 30 ஜூன், 2026

வெண்சாந்துக்கு வேறுபெயர் ''தான்-தோன்றி'' யானது அன்று

 சாந்து என்ற நீர்ப்பூச்சு போன்ற பொருள்,   வெண்மையாக இருக்குங்கால்,  அதை வெண்சாந்து என்று பெயரிட்டு அழைப்பது ஒரு திறமான செயல் என்றே ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் மனித சமுதாயத்தினர்  அல்லது குமுக உறுப்பினர்கள் எப்போதுமே இவ்வாறு வெளிப்படையாக நடந்துகொள்ள முடிவதில்லை.  சிலவேளைகளில் சிலவற்றை வெளிப்படைத்தன்மை குறைந்துச் சொல்வது எல்லா இனக்குழுவினரிடத்தும் காணப்பெறும் ஒரு பொது நடப்புத் தன்மை என்று கூறவேண்டும். அவற்றுள்ளும் அச்சாந்து போல்வன மனித உடலுள் இருந்தே வெளிப்பட்டிருந்தால்,   உடற்கழிவுக்கும் அதற்கும் வேறுபாடு குறுக்கமாகிவிடுகிறது.

வெண்சாந்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடு குறைந்துவிடுகிறது.  வெண்சாந்து உடலிற் பிறந்திட்ட பின் வெளிப்பட்டிருந்தால்,  அதில் காணும் வெண்நிறத்தை மறைத்துச் சொல்லி,  இடக்கர் அடக்கலாக்கி விடுதலே சிறப்பு ஆகும்.   வெண்து  என்பதை,  விண்து என்று திரித்தபின்,  விந்து என்று மாற்றுதலே சிறப்பு ஆகும்.  இத்தகு முறைகள், சொல்லாக்கத்திற் கடைப்பிடிக்கப்பட்டன.

சாந்து என்பது  (சுவர் முதலிய)   வீட்டின் சுவர்களைச் சார்ந்திருப்பனவே என்பதும் அதன் காரணமாக பெயர் பெற்றவை என்பதும் தெளிவே  எனினும், அதைச் சார்>  சா>  சாந்து என்று ரகர ஒற்றை ஒளித்து அமைத்தது ஒரு சிறப்பு ஆகுமென்க.  இஃதுபோலவே  வெண் என்பது மறைந்து  விண் என்ற மற்றொரு வெண்மைவெளித் தன்மை வெளிப்பட்டதும்   சிறப்பே என்று கூறிச்செல்க.   சொல்லாய்வில் இவை தற்செயலாக வெளிப்ப்பட்டவை என்று எண்ணுவது ஆய்வின்மை என்றே  முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்மை

பகிர்வுரிமை



கருத்துகள் இல்லை: