கந்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினோம். இந்த முன்பகுதி இங்கு உள்ளது.
கிழிந்த / கழிந்த என்ற வினை எச்சங்கள்:
கிழிந்த > கழிந்த + அல் (விகுதி) > கழிந்தல்.
கழிந்தல் என்பது இடைக்குறைகிறது.
கழிந்தல் > க(ழி)ந்தல்> கந்தல்.
கந்தல் > கந்தை.
கழித்த என்ற எச்சத்துடன் அல் என்பதை இணைப்பது வழக்கமில்லை. கழி என்ற வினை ஏவல்வினையே இதற்கு ஏற்றதாகக் கொள்வர். ஆதலால் இதை வேறுவழிகளில் காட்ட முனைதல் இயல்பே. கிழி> கழி > கழிதல்>( கதல்)> கந்தல் என்று காட்டலாம். இங்கு ஒரு விகாரம் தோன்றிற்று. கிழிதல்> கழிதல் என்றதில், ஒரு மெய்தோன்றிற்று என்பதை மறைக்கமுடியாது. பாலி மொழிபோல் எச்சத்திலிருந்தும் சொற்கள் தோன்றக்கூடும் என்பதை மறைத்தலாகாது. தேவை என்பதே ஆக்கத்தின் தாய் என்பது முற்றிலும் உண்மை.
ஒப்பு நோக்குக:
ஆண்டு > (ஆண்டுகொண்டிருப்பவன்) எச்சவினை.
ஆண்டு > ஆண்டவன்.
பண்டு என்பது கவனிக்கவும்:
பண்டு நம்மைக் காத்தவன்.
பண்டு>பண்டு + இ+ அன்> பாண்டியன்.
இதில் பண் எனற முதலசை பாண் என்று முதல் நீண்டது.
பல சொற்கள் நீண்டாலும் பொருள் தொடர்பு அற மாட்டா. வினைகளில் தரு என்பது திரிபு பலவுடைத்து.
.
பாண்டவர் என்பதும் இவ்வாறு அமைந்த சொல்லே ஆகும்.
இதைப் பண்டு>பாண்டு>பாண்டியன் என்றும் காட்டுவர்.
வேறுபாடு ஒனறுமில்லை.
கிழிந்தல் - கழிந்தல் : கிழிந்ததாக இருந்தது பின்னர் பயன்பாடு குன்றி, கழிந்ததாகிவிடுகிறது. இன்னொரு சொல்லைக் காட்டுகிறோம். இடித்தல் - அடித்தல். இரண்டும் ஏற்படும் மோதுதலைக் குறிக்கிறது. இணைத்தல் - அணைத்தல், இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கவனத்தில் கொண்டால், தொடர்பு புரிதலை அடைகிறது. பழைய இடுகைகளில் யாம் காட்டியிருப்போம். எனினும் தொகுத்து வழங்க நேரமில்லை ஆதலால், படிக்கும் நீங்கள் தொகுத்து எடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக