சர்மா

இது ஒரு பட்டப்பெயராய் வழங்கிவருகிறது. ஷர்மா, சர்மா, ஸர்மா, சர்மன் என்று பல்வேறு வடிவங்களில் அறியப்படும் இப்பெயர், எங்ஙனம் தோன்றியதென்பதில் சிக்கல் நீடிக்கின்றது.

மகிழ்ச்சி என்று பொருள்தரும் ஒரு சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படினும், இஃது முடிவான கருத்தென்று கூறிவிட இயலவில்லை.

இது இப்போது பெரும்பாலும் ஸ, ஷ என்ற முதலெழுத்தைக் கொண்ட சொல்லாக எண்ணப்பட்டாலும் இது முற்காலத்தில் "ச" என்றே தொடங்கியது என்று எண்ணத்தோன்றுகிறது.

சர்மண்வத் என்பது ஒரு ஆற்றின்பெயராய் இருத்தலின், இவ் ஆறு ஓடும் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்று அடையாளம் கூற அமைந்த பெயரென்று கருதவும் இடமுண்டு.

சர்மன் என்பது தோலைக்குறிப்பது. நல்ல தோல் நிறமுடைய கூட்டத்தினர் என்றும் பொருள்பட்டிருக்கலாம்.

சர்மவத் என்பது தோலை அணிந்துகொண்டோர் என்றும் பொருள்தரும். போர்மறவரையும் குறிக்கலாம்.

சர்மா என்பது தமிழ்ச்சொல் என்று கூறவியலவில்லை. சமஸ்கிருதத்தில் ஆற்றங்கரை வாசி என்றோ போர்மறவர் என்றோ குறிக்க எழுந்த பெயராகலாம்.

ச, ஷ, ஸ திரிபுகள் இயல்பானவை.