விழுமிய பீடு அணவிநின்றவன் > வி + பீ டு+ அணன் > விபீடணன் என்று சங்கப்புலவர் வால்மிகியார் அமைத்துக்கொண்டார். அல்லது தமிழ் இராமாயணம் ஒன்றிலிருந்து இப்பெயரை மேற்கொண்டார். இதனை நாம் முன்பு எடுத்துக்காட்டிய து உண்டு. இவை இரண்டில் எது சரி என்று இப்போது வரையறுத்தல் இயலாதது--- அது காலக்கழிவினால்(passage of time).
விழு = சிறந்த.
பீடு = பெருமை, பெருமிதம்.
அணவுதல் - மேற்கொள்ளுதல்; தொடர்பினால் அடுத்து நிற்றல்.
இராவண்ணன் என்பதன் இடைக்குறைச் சொல்தான் இராவணன். ஒரு ணகர ஒற்றினை எடுத்துவிட்டால் வேற்றுலகு ஆகிவிடுகின்றது. ஆராய்ச்சியின்மை அத்துணை மோசமாகிவிடுகிறது.
இனி வான்மிகி என்ற பெயரைப் பார்க்கலாம்.
வான் - ஆகாயம். வால் - வெண்மை என்ற பொருள் இச்சொல்லுக்கு முதுகெலும்பின் பின்வெளிப்பாடு என்ற பொருளும் உளதென்றாலும் அப்பொருள் ஈண்டு பொருந்தாது.
வான்+ மிகு + இ > வான்மிகி. வானை மிக்கு நின்ற புலவர் என்பது பொருள். இது ஒரு புனைப்பெயர். அப்புலவர் வைத்துக்கொண்டதாக வேண்டும்.
வால் மிகி என்பதும் அன்னது. வால் தூய்மை என்னும் பொருளிலும் வரும். வெணமை மிக்கவர், தூய்மை மிக்கவர் என்றும் பொருள்படும். இதுவும் அப்புலவர் மேற்கொண்ட பெயராகவே அல்லது பிறர் வழங்கியதாகவே தெரிகின்றது.
இவை இயற்பெயர்கள் அல்ல.
வான்மிகி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தவர் உள்ளனர். அவர்களுக்கும் இப்புலவருக்கும் தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இப்போது அறுதியிட்டு உரைத்தல் ஆகாது. அதற்குரிய பதிவுகள் கிட்டிற்றில.
தொடர்பு உண்டெனினும் அது ஒக்கும் ; இல்லெனினும் ஒக்கும். எதுவும் பிழையில்லை.
மாரீசன் எனின் மரையாகிய தலைவன். மரை - மான். ஈசன் என்பது இறைவன் - இறைவர் - ஈறைவர் > ஈஷ்வர்.
இவற்றுள் ஈறைவர் என்னும் முதல்நீண்ட வடிவம் மறைந்தது. ஆனால் முதனிலை நீண்டு சொற்கள் அமையும் என்பது இலக்கணமாதலின், இறை > ஈறை எல்லாம் ஒன்றுதான். பாட்டில் நீட்டும்போது வரையறை இலதாகும். பின் ஈறைவர் என்பதில் ஷ் புகுத்தி அமைத்தால், அதனால் வேறுபடல் ஒன்றுமில்லை. வடவெழுத்தொரீஇ, சொல்லாய் ( தமிழ்ச்சொல்லாய்) மீளுறும். இதனைத் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவு படுத்துகிறது.
உயர் > உயர்வு : உயர்த்தி (விகுதி மாற்றம் ) . ஒஸ்தி ஆனதுபோலும். வடவொலிகள் மரத்தடி ஒலிகளாய் இருந்தவை. வடம் - கயிறு, மரம் என வேறு பொருள்களும் உள. திரு வி.க. நன்று கூறினார்.
பல தமிழ்ச்சொற்கள் தமிழின மொழிகளில் வடவொலிகள் பெற்று இயலும்.
பாணினி என்ற பாணனும் வால்மிகி என்ற அன்றுயர் பிரிவினரின் புலவனும் மாற்றுமொழியிற் பெரும்புலமை கொண்டிலங்கினர்.
பெயரின் பின் ஆர் விகுதி பெற்று மன்பதைக்குள் மதிப்புற்றோர் ஆரியர். எடுத்துக்காட்டு: தொல்காப்பியனார் (ஆர்); வள்ளுவனார் (ஆர்), இளநாகனார் (ஆர்), சாத்தனார் (ஆர்), இன்னும் பலர். உங்கள் பெயர் ஆர் விகுதி பெற்று இயலுமானால் நீங்களும் " ஆர் + இய + அர்" தான்!
இந்தத் தமிழ் ஆர் விகுதி உலகிற் பல இடங்களிலும் பரவி விட்டதனால், தமிழின் உலகத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.
அறிக, மகிழ்க.
குறிப்பு:
ஆசிரியர் என்ற சொல் இடைக்குறைந்தும் ஆரியர் ஆகும்.
ஆ(சி)ரியர் - ஆரியர். ஆர் + இ + அர் : பிறர் மரியாதை செய்வதற்கு உரியவர்.
மரியாதை: மருவிக் கட்டிப்பிடித்துக்கொள்ளுதல். சொல்லமைப்புப்பொருள்.
மரு + யாத்(து) + ஐ - மரியாதை. யாத்(தல்). ரு யா > ரியா ஆகும்.
ஆசிரியர் - பற்றுக்கோடாக இருப்பவர் : ஆசு+ இரு+ இ + அர். இ - இடைநிலை. அர் - விகுதி.
vizhumiya means excellent. Does not mean fall.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக