இதன் தொடர்பில் நாம் இந்த அடிச்சொற்களைக் கவனிக்கவேண்டும்.
மல் - ( ஒருவரை இன்னொருவர் மிக்க அருகில்சென்று கட்டிப்பிடித்து வீழ்த்தும்
ஒரு விளையாட்டு அல்லது பிடியிடு போர். மற்போர்.
மல் > மன்: இது லகர 0னகரப் போலி.இது நிலைபெறுதல் என்ற பொருளில் வரும்
சொல். நிற்றல் இயலாத ஒருவன் அடுத்தவனை அணுகிப் பிடித்தோ, அல்லது
ஒரு பொருளைப் பற்றிக்கொண்டோ நிற்பான். தரையில் காலை வைத்து நிற்பதிலும்
நிலத்தின் துணை தேவைப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே மன்னுதல்
என்பதிலும் ஒருசார் மருவற்கருத்து கரந்து நிற்பதை அறியலாம். நிலை நிற்பதெல்லாம்
இவ்வாறு சார்ந்தே அமைகிறது. சார்பில் மிகுதியும் குறைவும் கூறுதல் கூடும்.
மன் > மன்னித்தல். இது நிலைபெறுவித்தல் என்ற பிறவினைப் பொருளில் அமைந்த தமிழ்ச் சொல்.
மன்னித்தல்: இதுபோல், உன்னுதல் என்பதினின்று உன்னித்தல் என்பதும் அமையும்.
மன் > மன்று , மன்றம். பலர் கூடுமிடம். இவ்விடங்களில் பலர் அடுத்திருத்தல் காண்க.
மன்றல் - திருமணம், இருபாலார் அடுத்திருக்கும் வாழ்க்கை.
மல் > மரு. மருவுதல் என்பதில் மரு என்பது தவிர மற்றவை விகுதிகள். வினையாக்க விகுதி மற்றும்
தொழிற்பெயர் விகுதி.
ஒ.நோ: புல் > புரு. நல்> நறு என்பதும் காண்க.
மன்னித்தல் என்ற சொல் மன் என்றதிலிருந்து அமைதல் காட்டும் விளக்கம் ஒன்று: இது முன்பு
பழைய இடுகையில் விளக்கப்பட்டுள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_12.html
பலரும் அறிந்த ஒரு திரிபு - ஒருவேளை மறந்தும் இருக்கலாம் - அது:
கரு > கன் என்பது. கருநடம் > கன்னடம் என்பது.
நடமென்பது நாடகம் என்றும் திரியும்: கருநடம் > கருநாடகம் > கர்நாடகம்.
இவ்வலைப்பூவில் பொருளடக்க அகரவரிசையில் "மன்னித்தல்" காண்க. Glossary on Etymology (Pages) .
மருவி நிற்றல் என்பது இன்னொரு வகையிலும் அமையும்.
மரு(வி) நிற்றல் --- மருநிற்றல் > மன்னித்தல் என்றும் அமைதல் கூடும்.
புல்லுதல் - பொருந்துதல் . இச்சொல் புல் > புரு என்று திரியும்.
எனவே புரு > புருசு > புருசன் ( வாழ்க்கையிற் பொருந்தியவன் ) என்பது.
புரு > புருவம் : கண்ணுடன் பொருந்தி அமைந்தவிடம். இதிலிருந்தும்
கண்ணுக்குப் பொருந்தியவன் என்றும் விளக்கலாம். எல்லாம் அதே கருத்துதான்.
புரு > புருடு > புருடன் என்றும் அமையும்
பல வழிகளிலும் தமிழ்.
ஒருவனை மன்னிக்குங்கால் அவனை மீண்டும் மருவிக்கொள்கிறோம். பழைமை நட்பை
நிலைநிறுத்துகிறோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு செய்யப்பட்டது.
Owing to software error in Win7, the edit tool bar in this blog disappeared.
Hence saved the post and published first. Now this has been edited
from another device.
Will review. 25 01 2021
தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக