சணல் என்ற சொல்லின் பிறப்பைச் சுருங்க அறிவோம்.
அண் > அண்முதல் : நெருங்குதல். அணுக்கமாதல்.
அண் > அண்டு > அண்டுதல் : அடுத்துவரல்.
அண் > அண்மை, அணிமை : காலத்தால் இடத்தால் அடுத்திருத்தல். இன்ன பிற.
அண் என்பது சண் என்று மாறும்.
அண் > சண் > சண்டி (சண்+தி). அடுத்துச்சென்று அல்லது பக்கத்து இருந்துகொண்டு ஒவ்வாதன செய்தல். சண்டித்தனம் .
அண்டு > சண்டு > சண்டை : கைச்சண்டை, வாய்ச்சண்டை. இவை அடுத்துச் சென்று செய்வன.
அண்டு என்பது இடைக்குறைந்து அடு ( அடுத்தல் ) ஆயினும் பொருள் மாறாது.
அடு > அடி > அடித்தல்.
இப்போது இதை அறியுங்கள்:
அண் > சண் > சணல்.
அடுத்து அடுத்து இருக்குமாறு திரிக்கப்படும் நார்க்கயிறு. அத்தகு பொருள் விளைச்சல். செடிவகை. a hemp.
அடு > சடு > சடம்பு.
சணப்பநார், சணப்பை நார், சணம், சணம்பு என்று பல வடிவம் கொள்ளும் சொல்.
சாணைப் பிடித்தல்: கத்தி முதலியன கூராக்குதல்.
அண் > சண் > சாண் > சாணை.
ஒரு சாண் என்பது அடுத்திருக்கும் தூரம். அண்> சண் > சாண்.
பழமொழி: சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை!
அறிக மகிழ்க.
முகக்கவசம் அணிக.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக