ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

க்ஷமித்தலும் அமிழ்த்தலும் ( சமித்தல் )

அமிழ்த்தல்.

மனத்தை வருத் துகின்ற எதையும்‌  குளிர்ந்த  நீருக்குள் போட்டு  அமிழ்த் திவிட  வேண் டும்.  சூடேறிவிட்ட உள்ளத்தைக் குளிர்விக்க வேண்டும்.
அடுத்தது   -   வருத்தம் மேலெழக்கூடாது.  அப்போ து தான்   எதையும் பொறுத்தல்  முற்றுப்பொறும். இவ்வாறு நினைத்தனர் முன்னாளில்.

மன்னிப்பைக் குறிக்கும் பல்வேறு கருத்துக்களும் மொழியில் மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் திடப்பொருள்களைக் கையாளும் அவனறிந்த வகைகளிலிருந்தே மேலெழுந்து கண்காணாத மனவுணர்ச்சிகளை உணர்த்த முன் வந்தன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.

பொறுத்தல்  என்பது, ஒரு பளுவான பொருளைச் சுமந்து  செல்லுதலையே குறித்தது. பண்டைத் தமிழர் " சிவிகையைப் பொறுத்தல்"  -  அதாவது பல்லக்கைத் தூக்கிச் செல்லுதல் என்றனர்.  ஒரு கடினமான மனவுணர்வினையும் அவ்வாறே திடப்பொருள்போல் பாவித்து,   " பொறுத்தருள்" என்றனர்.

வேண்டாத பொருளை நீருக்குள் அமிழ்த்தி அப்புறப் படுத்துதலும் அன்னதே ஆகும்.

அமிழ்த்தல் >  அமித்தல் >  க்ஷமித்தல் ( ஒரு குற்றம் அல்லது தெற்றினை மன்னித்தல்.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாவது:

அமணர் >  சமணர்

என்பதனால்  அறிந்துகொள்க.  இவ்வாறு திரிந்த சொற்கள் பல.  இன்னொன்று அடுதல் ( சமைத்தல் )  >  (சடுதல் ) >  சடு + இ=   சட்டி.

திரிந்து பொருள் மாறாதது போலி.  சில நுண்பொருள் மாற்றம் அடைவன.

இருவருக்கிடையில் மனம் வேறுபாடுமாறு நடக்கும் நிகழ்வினால் நட்புறவு வீழ்ச்சி அடையும்.  அந்த உறவினை மீண்டும் எழுமாறு செய்தலே மன்னித்தல்.

மன்னுதல் =  நிலைபெறுதல்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே.
மன்னுலகம்
மன்னுயிர்.

மன்னன் -  நிலைத்த தொடர்குடியிலிருந்து  ஆட்சி ஏற்றிருப்பவன்.

மன்னித்தல் ( அதாவது மன்னுவித்தல் ) -  மீண்டும் நிலைபெறச் செய்தல்.
மன்னித்தல் - நிலைபெறச் செய்தல்.

மன்னு -  தன்வினை

(மன்னு>)  மன்னி > மன்னுவி  இவை  பிறவினைகள்.

மன் -  மன்னுதல்  வினைச்சொல்.

மன்னு + இ   இதில் உடம்படு மெய் வரவில்லை.


மன்னு + வ் + இ.   இதில் வ் என்பது வகர உடம்படு மெய்.

அசைஇ, நிறீஇ  முதலிய பழங்கால வினைகளிலும்  இ வருதல் கண்டுகொள்க.

di-perchaya-i   என்று மலாய் மொழியிலும்கூட இவ்வாறு வரல் உணர்க.

க்ஷமித்தல் என்பது தமிழில் வழங்கவில்லை.

சமித்தல் உளது.

சமித்தல்-  சகித்தல்  ம- க போலி எனினுமாம்.
தம் > சம் ஒன்றுசேர்தல் உட்பொருள் எனினுமாகும்.,  சம் . சமி.  சம் > சமை.
சமனித்தல் > சமித்தல் திரிபு எனினுமாம்.சமனித்தல் > சமானித்தல்.

சமித்தல் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் விளக்குறும் சொல்.
 

அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் சரிசெய்யப்பெறும்.



கருத்துகள் இல்லை: