வியாழன், 9 ஏப்ரல், 2020

இமை நிமையாகி நிமிடம்

மணிநேரத்தை அளக்க வேறு கருவிகளில்லாமையால் மனிதன் பல்வேறு முறைகளில் முற்பட்டு அலுத்துவிட்ட நிலையில் கடிகாரத்தைக் கண்டுபிடித்தான்.  அதன்பின் அவனுக்கு காலச்செலவு அறியும் கட்டம் நீங்கியது.  கட்டமாவது கடினநிலை. ( கடு+ அம் = கட்டம் ).

கருவியற்ற நிலையில் அவன் தன் உறுப்புகளை வைத்தே எதையும் அளந்தான்.  ஒரு பொருள் நான்கு  அடி தள்ளி இருக்கிறதென்றால்  அதை நான்கு அடியென்றே சொன்னான்.  முழங்கை அளவினை முழம் என்றே சொன்னான்.

அவன்றன் கை நீள்வதும் முடங்குவதும் ( அதாவது மடங்குவதும் ) உடையதாய் இருந்தது. இது வசதி தந்தபடியால், முடங்கும் கையை  முழம் கை > முழங்கை என்றான்.  

முடு > முடுக்கு  ( > மடக்கு)  [  மேற்செலவின்மை]
முடு >   > முடம்   ;
முடம் >  முழம்.

தொடர்புகளை ஆய்க:   விழு> < விடு.;   பாடு > பாடை> பாழை  (< பாஷை).
பேசு > பேசை > பாசை (  < பாஷை).

இவற்றைப் பின்னொருகால் விளக்குவோம்.

கைகால்களைக் கொண்டு அளவிட அறிந்தவன்,  கண்ணைக் கொண்டும் அளந்தான்.    கண் இமைக்கும் பொழுதைக் கணமென்றான். ( கணம் >  க்ஷணம்). கண்ணால் அளந்த நேரம் என்பதை க்ஷண என்பது மறைவு செய்கிறது.  இதுபோலும் தடைக்கருத்துகளில் மகிழத் தலைப்பட்டான்.

கண்ணை மட்டுமோ கண்ணின் இமையையும் அவன் விடவில்லை.  இமைப்பொழுது என்றான்.  இமை இட்டு நேரத்தை அளந்து மகிழ்ந்தான்.
இறைவனைப் பாடுகையில் இமைப்போதும் நினை நீங்கேன் என்றான்.

இமைப்பது தொடர்ந்து நடைபெறுவதுதான்,  ஆனால் நிற்பதும் மூடுவதும் உடையது  அது.  இமைத்தல் என்பது சிறப்பாகக் கண் மூடுதலைக் குறிப்பதாக அறிந்தான்,  நின்றும் மூடியும் நின்றும் மூடியும் நடைபெற்றதனால்,

நில் + இமை >  நி(ல்)  + { இ} மை >  நிமை என்றசொல்  உருவானது.

இதைச் சுருக்கமாக,  நிமைத்தல் என்றான்.   இமை> நிமை என்று குறித்தான்,

புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க (திருப்புகழ். 497). என்பது எடுத்துக்காட்டு.

அன்றியும்  பிறழ்பிரிப்பாகவும் கருத இடமுண்டு.   கண் + இமை > கண்ணிமை > நிமை எனக்காண்க.  ( 00ணிமை).  இது இருபிறப்பி எனலாம்.

இமைத்தல் > நிமைத்தல்.  இமைத்தல் =  நிமைத்தல்.

இமைத்தலாவது  இமை இடுதல். இமை இடுதாலவது நிமை இடுதல்.  எனவே
நிமை + இடு + அம் =  நிமிடம் ஆனது. (  ஆக்கக்குறுக்கம்:  நிம் + இட் + அம்).
இடைவடிவங்களைப் புணரியலில் காட்டுவதில்லை. கருவுருக்கள் இவை,

நிமிடம் நிமிஷம் ஆனது மெருகு.

நிமை> நிமையம் என்பது நிமிடத்திற்கு மாற்றுப்புனைவு ஆகும்,

தட்டச்சு மறுபார்வை பின்.
நேரம் கிட்டுமாயின் கவின்பாடு,


மகுடமுகி ( கொரனாவைரஸ்)

வீட்டை நீங்கிச் சேறலின்றேல்
நோய்கள் தூரமே
கூட்டம் கூடிப் போதலின்றேல்
தொல்லை தீருமே.


சேறல் == செல்லுதல்,.  வழிநடை போதல்

வீட்டுப்பேச்சுக்கு  " வீட்டை விட்டுப் போகாவிட்டால் நோய்கள்
தூரமே, கூட்டம் கூடி ஆட்டம் வேண்டாம், தொல்லை தீருமே"
என்று மாற்றிக்கொள்ளலாம். செய்தி அதுவே.

கருத்துகள் இல்லை: