இன்று அந்தி என்ற தமிழ்ச்
சொல்லை ஆராய்வோம்.
இது வேறு மொழிகளிலும்
சென்று வழங்கிவரும். நம் வீட்டுப் பையன், எதிரிலுள்ள நாலைந்து வீடுகளில் நுழைந்து,
அங்குள்ளோரின் தேவைகளையும் கவனித்துவிட்டு இரவில் வீட்டுக்கு வருகிறான் என்றால் அவன்
குமுக சேவை செய்கிறான் என்று அர்த்தம். வாழ்க
தேசிய சேவையும் உலக சேவையும். தற்குறியாக இருப்பதே தவறு. கல்கத்தா அம்மையார் போல உலக
சேவை செய்வதோ பாராட்டுக்கு உரியது. சொற்களும் அப்படியே.
அந்தி சாயுற நேரம்
வந்தாரைத் தேடி ஓரம்
என்று ஒரு நகைச்சுவைப்
பாட்டை எழுதினார் கவி கா.மு. ஷ்ரிப் என்ற பாடலாசிரியர். (?) பகலவன் சாய்கிற நேரம்தாம் அந்தி. சாயுங்காலம் என்றும் சாய்ங்காலம் என்றும் சொன்னாலும் அதே.
பகலின் முடிவுதான் அந்தி.
இ - இங்கு.
இன்று.
அ – அங்கு அன்று.
அன்று = அன் + து
இன்று வந்துவிட்டால்,
நேற்றுக்கு முன் உள்ளது அன்று.
அன்று என்பது இன்றும்
நேற்றும் முன் உள்ளதும் முடிந்த நிலை.
அன்று > அன்றுதல். (முடிதல்).
அன் + து = 1. அன்று 2. அன்*து (அந்து).
அந்து > அந்தி. (அந்து+ இ).
~து. ~இ : இவை விகுதிகள்.
தி என்பது பல சொற்களில்
முடிவாக நிற்பதால் அதை ஒரு தனி விகுதியாகவும் சொல்லி முடிக்கலாம். தி என்று முடியும் போதெல்லாம் து+இ என்று சொல்லிக்கொண்டு
நீட்டிக்கொண்டிருப்பதும் தேவையில்லை. நேரம்,
இடம் , தாள் மிஞ்சும்.
எடுத்துக்காட்டு:
பெய்தல் மூத்திரம் பெய்தல்; மழைபெய்தல்; நீராகக் கழிதல்.
பெய்+தி = பெய்தி
> பேதி. (கழிச்சல்).
உய்தி; செய்தி.
கைதி.(கையகப்பட்டவன்).
இவை நிற்க.
அந்தி என்பது நாள் அல்லது
பகலின் முடிவு,
அந்தம் – முடிவு. (பொது).
ஆதி அந்தம். ஆதி: ஆக்கப்பட்ட
நாள்; அந்தம் = முடிவு,
எழுதிப்பின் புகும், புகுத்தப்படும் பிசகுகள் பின் திருத்தப்படும்.
மறுபார்வை செய்த நாள்: 15.6. 19
மறுபார்வை செய்த நாள்: 15.6. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக