ஞாயிறு, 22 அக்டோபர், 2017

கந்தனும் கன்னியும். (கன் அடிச்சொல்)



இங்கு  கூறப்படும் திரிபுகளைக் கவனமாகக் கணித்தறியுங்கள்.

கன் என்பது ஒரு  தமிழ் அடிக்சொல்.

இதிலிருந்து அமைந்த சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

கன் -  கனல்.   (விகுதி:  அல்).

( இது எரியும் நெருப்பிலிருந்து வீசும் திண்ணிய வெப்பத்தைக் குறிப்பது ).

கன் > கனி.
(போதுமான வெப்பமிருந்தாலே காய் கனியாகும்.  குளிர்காலத்தில் பழுப்பவை, நீண்ட காலத்தை மேவும்.  எனவே கன் என்பதிலிருந்து கனி என்ற சொல் அமைந்தது பொருத்தமே.)

கனி > கனிதல். (வினைச்சொல்)

கன் > கன்னுதல்.  (வெப்பமடைதல்,  அதனால் காய் முதலியவை மாற்றமடைதல்).

கன் > கன்னி.
(போதிய வெப்பம் அடைந்தவள் ).

முதிர்வு வெப்பத்தினோடு தொடர்புடையது என்று எண்ணினர் 
என்பது தெரிகிறது.

கன் >  கன் து  > கந்து.

கன் > கன் து >  காந்து > காந்தம்.
உள்ளே இழுக்கும் ஆற்றல் தரும் ஒரு வெப்பம் இருப்பதாக கூறப்படும் இரும்பு.

கன் > கன்றுதல்.
பொருள்:  கருகுதல்; உருகுதல் சினத்தல், வாடுதல்.

கந்து >  கந்தகம்.

கன் > கன் து >  கந்து  > கந்தன்.
( தீ வடிவினன்.      ஒளி வடிவினன்.)

எரிதவழ் வேலோய் என்றார் ஒளவையார்.

பிற பின் அறிவோம்.

திருத்தப்பார்வை:  பின்பு.


கருத்துகள் இல்லை: